Published:Updated:

குருவிக்கூடுகளையே திருமண அழைப்பிதழாக மாற்றிய மனிதர்! வித்தியாசமான ஒரு முயற்சி!

ராஜசரவணன்

வீடுகளில் வசிக்கும் சிட்டுக்குருவி கூட்டை கலைக்கக் கூடாது என்ற நம்பிக்கை கிராமங்களில் இருந்தது. அந்தளவு நம் மனித சமூகத்துடன் ஒட்டி வாழும் பறவையாக இருந்தது. சிட்டுக்குருவிகள் விவசாயத்தில் விளைச்சலைப் பாதிக்கும் புழு, பூச்சிகளை உண்டு பயிர்களைக் காக்கும்.

குருவிக்கூடுகளையே திருமண அழைப்பிதழாக மாற்றிய மனிதர்! வித்தியாசமான ஒரு முயற்சி!

வீடுகளில் வசிக்கும் சிட்டுக்குருவி கூட்டை கலைக்கக் கூடாது என்ற நம்பிக்கை கிராமங்களில் இருந்தது. அந்தளவு நம் மனித சமூகத்துடன் ஒட்டி வாழும் பறவையாக இருந்தது. சிட்டுக்குருவிகள் விவசாயத்தில் விளைச்சலைப் பாதிக்கும் புழு, பூச்சிகளை உண்டு பயிர்களைக் காக்கும்.

Published:Updated:
ராஜசரவணன்

சிட்டுக்குருவிகள் வீடுகளில் மாடம், பரண் மற்றும் ஓடுகளின் இடையில் கூடு கட்டி வாழும். இப்போதும் கட்டடங்களின் உட்பகுதியிலும் வாழ்கிறது. வீடுகளில் வசிக்கும் சிட்டுக்குருவி கூட்டை கலைக்கக் கூடாது என்ற நம்பிக்கை கிராமங்களில் இருந்தது. அந்தளவு நம் மனித சமூகத்துடன் ஒட்டி வாழும் பறவையாக இருந்தது. சிட்டுக்குருவிகள் விவசாயத்தில் விளைச்சலை பாதிக்கும் புழு, பூச்சிகளை உண்டு பயிர்களைக் காக்கும்.

சிட்டுக்குருவி கூடு
சிட்டுக்குருவி கூடு

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 1980-க்குப் பிறகு பாதியாகக் குறைந்துவிட்டது. 68% முதல் 90% வரை இந்தப் பறவையினங்கள் அழிந்துவிட்டதாகக் கூறுகின்றனர். வயல் வெளிகளில் பூச்சி மருந்து தெளிப்பதால், சிட்டுக்குருவிக்கு உணவான பூச்சியினங்களும் தற்போது கிடைப்பதில்லை. செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு, நகர்ப்புற கட்டட அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை சிட்டுக் குருவி அழிவதற்கான காரணமாகக் கூறுகின்றனர்.

செயற்கையாகப் பொருத்தப்பட்ட கூட்டில் சிட்டுக்குருவி
செயற்கையாகப் பொருத்தப்பட்ட கூட்டில் சிட்டுக்குருவி
Suyambu Ganesan, IOC

2010-ம் ஆண்டு முதல் சிட்டுக்குருவிகளைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்த ‘’உலக சிட்டுக்குருவி தினம்’’ மார்ச் மாதம் 20-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள இந்தப் பறவையினத்தைக் காக்க, நல்லதொரு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது பசுமை சிறகுகள் அமைப்பு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஓர் அமைப்பாக `பசுமை சிறகுகள்' செயல் படுகிறது.

கடந்த மே மாதம் முதல் `சிட்டுக்குருவி மீட்டெடுப்போம்' என்ற திட்டத்தை இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஒரு நபருக்கு ஒரு கூடு என இலவசமாக வழங்கி வருகின்றனர். அதிலும் குருவிகள் அங்கு வருகிறதா? என விசாரித்த பின்னரே கூடுகளை வழங்குகின்றனர். இப்படி, பல இயற்கை ஆர்வலர்கள் தங்கள் வீடுகளில் கூடுகளை அமைத்தனர். வீடுகளில் மாடங்கள், ஓடுகள் அமைப்பு மாறிவிட்டதால்... குருவிகள் வந்து தங்க இந்தக் கூடு பெரிதும் உதவும் என நினைத்தனர். இவர்கள் எதிர்பார்த்தபடி கூடுகளில் குருவிகள் வந்து குடியேறத் தொடங்கின.

சிட்டுக்குருவி கூடு
சிட்டுக்குருவி கூடு

வந்த குருவிகளைப் பராமரித்தும் வளர்க்கின்றனர். இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தில் மிகுந்த ஆர்வமுள்ள குடும்பத்தினர் தங்கள் வீட்டு திருமண நிகழ்வுக்கு பத்திரிகையாகவே ஒரு கூட்டை வழங்க திட்டமிட்டனர். அதன்படி கூட்டின் ஒரு புறத்தில் பசுமை சிறகுகளின் சின்னம் இருக்கிறது. மறுபுறம் மணமக்கள் பெயரோடு திருமண நாளும் அச்சிடப்பட்டுள்ளது.

இது போல் பிறந்த நாள், காதுகுத்து போன்ற சிறிய விழாக்களுக்கும் சிட்டுக்குருவி கூடுகளைப் பரிசாக வழங்குவதால், பல வீடுகளிலும் சிட்டுக்குருவிகள் வாழும், இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனிதம், அதை அழிப்பதல்ல! என்கிறார் பசுமை சிறகுகள் அமைப்பின் தலைவர் ராஜசரவணன்.

- தரணி மு.ச

மாணவப் பத்திரிகையாளர்