Published:Updated:

`பல வருஷ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டார்!' - பெண் ஊராட்சி மன்றத் தலைவரை பாராட்டும் மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வடிகாலை சரிசெய்யும் பணி
வடிகாலை சரிசெய்யும் பணி ( நா.ராஜமுருகன் )

''நீர் மேலாண்மையை சிறப்பாக்குவதிலும் இயற்கையைக் கட்டமைப்பதிலும் தொடர்ந்து எங்கள் ஊராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறோம்.''

சிறு மழை பெய்தாலே, வடிய வடிகால் இல்லாமல் குளம்போல் தண்ணீர் தேங்கி தங்களுக்குத் தொல்லை கொடுக்கும் நிலையை, தற்போதைய ஊராட்சிமன்றத் தலைவர் துரிதகதியில் முயற்சிகள் எடுத்து தீர்த்து வைத்துவிட்டதாக, மக்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள்.

வடிகாலை சரிசெய்யும் பணி
வடிகாலை சரிசெய்யும் பணி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது முள்ளிப்பாடி ஊராட்சி. இந்த ஊராட்சிமன்றத் தலைவராக நீலா வேல்முருகன் இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் இருக்கும் தளிவாசல் பகுதி, மிகவும் தாழ்வான பகுதி. மழைக்காலங்களில், குறிப்பாக அடைமழை பெய்யும்போது, தளிவாசல் பகுதி சற்று தாழ்வான பகுதி என்பதால் அதிக அளவில் மழை நீர், கழிவு நீருடன் கலந்து தேங்கி நின்று, மக்களுக்கு இன்னல் கொடுத்து வந்திருக்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, மக்களுக்குப் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்தப் பிரச்னையால், தளிவாசல் பகுதி மக்கள் கடந்த 10 வருடங்களாகப் பரிதவித்து வந்திருக்கிறார்கள்.

செயற்கை மழை பொழியும் `மழை மரம்...' வித்தியாசமான விழிப்புணர்வில் அசத்தும் கரூர் விவசாயி!

இந்த நிலையில்தான், தற்போது பெய்த கனமழையில் அந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி, வடிய வாய்ப்பில்லாமல் மக்களுக்கு சிரமத்தைக் கொடுத்து வந்திருக்கிறது. இதைக் கண்ட முள்ளிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் நீலா வேல்முருகன் துரிதமாகக் களமிறங்கி, அந்த மழைநீர் வடியும் வாய்க்காலை சரிசெய்து, மக்களின் 10 வருடப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதோடு, ஊராட்சியில் நீர்மேலாண்மையை செம்மையாகச் செய்ய புது திட்டத்தோடு களமிறங்கியிருக்கிறார்.

தளிவாசல் மக்கள்
தளிவாசல் மக்கள்
நா.ராஜமுருகன்

இதுகுறித்து தளிவாசல் பகுதி மக்கள் நம்மிடம் பேசினர்.

"ஊராட்சி மன்றத் தலைவர் நீலா, மழை ஆரம்பிச்ச உடனேயே எங்க பகுதிக்கு வந்து பார்வையிட்டாங்க. பிறகு, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கால்வாயை நவீன ஜே.சி.பி எந்திரம் மூலம் சரிசெஞ்சு, மழைநீர் வடிய வழி செஞ்சாங்க. எங்க நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியிருக்காங்க. இதனால நோய்த்தொற்றுல இருந்தும் எங்களுக்கு விடுதலை கிடைச்சிருக்கு. அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறோம்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முள்ளிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் நீலா வேல்முருகனிடம் பேசினோம்.

"காவிரி குடிநீர் விநியோகிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு, மழைக்காலங்களில் மழை நீரை சேகரிப்பதற்காக எங்கள் பகுதியில் உள்ள குளங்களை, சிறு ஓடைகளை 100 நாள் திட்டத்தில் தூர்வாரி தயாராக வைத்துள்ளோம். எனவே, தளிவாசல் போன்ற குடியிருப்பு பகுதிக்குள் தேங்கும் மழைநீரை அந்த நீர்நிலைகளில் சேமித்து வைக்க முயன்று வருகிறோம்.

நீலா வேல்முருகன்
நீலா வேல்முருகன்
நா.ராஜமுருகன்

மேலும், மழைப்பொழிவு அதிகம் இருப்பதற்காகப் பொதுமக்கள் துணையோடு மரங்கள் அதிக அளவில் நடப்பட்டு, 100 நாள் வேலைத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். நீர் மேலாண்மையை சிறப்பாக்குவதிலும் இயற்கையைக் கட்டமைப்பதிலும் தொடர்ந்து எங்கள் ஊராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறோம்" என்றார்.

சின்ன முயற்சியில் மக்களுக்குக் கிடைத்த பெரிய நிம்மதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு