Published:Updated:

வண்டல் எடுக்க அனுமதி... உயர்ந்தது நிலத்தடி நீர்! வளமானது நிலம்!

வண்டல் மண் எடுக்கும் பணி
பிரீமியம் ஸ்டோரி
News
வண்டல் மண் எடுக்கும் பணி

நீர்நிலை

‘நிலத்தில் வண்டல் போட்டால், விளைச்சலில் பாய்ச்சல் கொடுக்கும்’ என்பது கிராமப்புறங்களில் உள்ள சொல்லாடல். நீர்நிலைகள் ஊர் மக்களின் கட்டுப்பாட்டிலிருந்த காலங்களில் விவசாயிகள், கோடைக்காலங்களில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, ஏரிகளிலிருந்து வண்டல் மண் கொண்டு வந்து போடுவது வழக்கமாக இருந்தது.

இதனால் ஏரிகளும் ஆழப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் இவை அரசின் கட்டுப்பாட்டில் சென்றதால், விவசாயிகள் தங்களது தேவைக்கு வண்டல் எடுக்க முடியாத சூழல் உருவானது.

வண்டல் மண் எடுக்கும் பணிகளில் ரமேஷ் கருப்பையா
வண்டல் மண் எடுக்கும் பணிகளில் ரமேஷ் கருப்பையா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீர்நிலைகள் தூர்ந்துபோய், மழைநீரை முழுமையாகச் சேமிக்க முடியாமல் போனது. நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், நிலத்தை வளப்படுத்தவும் வண்டல் எடுக்க அனுமதிக்க வேண்டுமென விவசாய அமைப்புகள் கோரிக்கை எழுப்பி வந்தன. இந்நிலையில்தான் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகுமார், அரசு விதிமுறைகளின்படி, அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஏரிகள் தொடர்ச்சியாக ஆழப்படுத்தப்பட்டு வந்தன. இச்சூழலில் இங்கு மத்திய நிலத்தடி நீர் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் 2019-20 வரையிலான காலகட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 4.49 மீட்டர் உயர்ந்துள்ளதாக உறுதி செய்திருக்கிறது.இதைத் தொடர்ந்து, நிலத்தடி நீர் பாதுகாப்பில், பெரம்பலூர் மாவட்டம் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் விருதைப் பெற்றுள்ளது.

வண்டல் மண் எடுக்கும் பணி
வண்டல் மண் எடுக்கும் பணி

இதுகுறித்து நம்மிடம் பேசிய இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, ‘‘இது ரொம்ப வறட்சியான மாவட்டம். ஆற்று நீருக்கு வாய்ப்பில்லை. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, இங்க மழைப்பொழிவும் குறைவா இருக்கும். நிலத்தடி நீர் மட்டம் ரொம்ப மோசமான நிலையில இருந்ததால, இது கறுப்பு வட்டாரமாக அறிவிக்கப்பட்டு இருந்துச்சு. இதனால் இந்தப் பகுதி விவசாயிகள், கிணறு அமைக்க, வங்கிகள்ல கடன் கொடுக்கமாட்டாங்க. நிலத்தடி நீர் மட்டத்துல இப்படிக் கறுப்பு வட்டாரமாக இருந்த பெரம்பலூர் மாவட்டம், இன்னைக்குத் தேசிய அளவுல பட்டொளி வீசுதுனா, அதுக்கு காரணம், இங்கவுள்ள ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டதுதான். ஏரிகள்ல விவசாயிகள் வண்டல் எடுக்க அனுமதிச்சதுனாலதான், பெரம்பலூர் மாவட்டம் இந்தச் சாதனையை எட்ட முடிஞ்சுது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிறு கனிமங்கள் என்ற வகைப்பாட்டில் ஏரி வண்டல் மண் வகைப்படுத்தப்பட்டு, கனிம வளத்துறை கட்டுப்பாட்டுல இருந்தது. இதனால், விவசாயிகள் வண்டல் எடுக்குறதுல ஏகப்பட்ட நெருக்கடிகள் இருந்துச்சு. இந்த நிலையிலதான் இதுக்கு அனுமதி தரணும்னு, இயற்கை விவசாயிகள், இளைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கிட்ட கோரிக்கை வச்சிக்கிட்டே இருந்தாங்க. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகுமார், இதுல சிறப்புக் கவனம் செலுத்தினார். மாவட்ட நிர்வாகத்துக்குள்ள சில சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தினார். வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைச்சி, இதை எப்படியெல்லாம் எளிமையாக நடைமுறைப்படுத்தலாம்னு ஆலோசனை நடத்தினார்.

வண்டல் எடுக்க அனுமதி... உயர்ந்தது நிலத்தடி நீர்! வளமானது நிலம்!

விவசாயிகளின் மனுக்களைப் பரிசீலிச்சி, வண்டல் எடுக்க, உடனடியாக அனுமதி அளிக்கிறதுக்காகவே சில அதிகாரிகளையும் நியமிச்சார். விவசாயிகள் உரிய ஆவணங்களோடு, தங்கள் நிலத்தோட சர்வே எண், நிலத்துக்கு அருகில் உள்ள எந்த ஏரியில, எவ்வளவு வண்டல் எடுக்கப்போறாங்க, எவ்வளவு நாள்கள்ல எடுப்பாங்க போன்ற தகவல்களைக் குறிப்பிட்டால் போதும். ஒரு விவசாய நிலத்துக்குப் போதுமான அளவு வண்டல் எடுக்க அனுமதிச்சாங்க. இதனால் பல கிராமங்கள்ல, ஊர்மக்கள் ஒண்ணு கூடி, வண்டல் எடுக்கும் திருவிழா களைக்கட்டிச்சு. இது ஊர்மக்கள்கிட்ட ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துச்சு. ஒவ்வொரு கிராமத்துலயும் ஒண்ணு அல்லது ரெண்டு ஜே.சி.பி, 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களைப் பயன்படுத்தினாங்க. ஓரளவுக்கு வசதி படைச்ச விவசாயிகள், அந்தச் சமயத்துல பணம் போட்டு இதுக்கு செலவு பண்ணி, மற்ற சின்ன விவசாயிகளுக்கு வண்டல் கொடுத்தாங்க’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

வண்டல் எடுக்க அனுமதி... உயர்ந்தது நிலத்தடி நீர்! வளமானது நிலம்!

‘‘விவசாயிகளே டிராக்டர் வச்சிருக்குறதுனால, அவங்களுக்கும் இதுல வருவாய் கிடைச்சிது. இதுமாதிரி இன்னும் பல காரணங்களால, பெரம்பலூர் மாவட்டம் முழுக்கப் பரவலாக ஏரிகள்ல வண்டல் எடுக்குற ஆர்வம் அதிகமாச்சு. குளத்தூர், புதுக்குறிச்சி, வடக்குமாதேவி, வேப்பூர், அனுக்கூர் உள்பட பல கிராமங்கள்ல நூற்றுக்கணக்கான ஏரிகள்ல வண்டல் எடுக்கப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்துல பெரும்பாலான நிலங்கள், சுண்ணாம்பு களர் நிலம். இதனால் விளைச்சல் ரொம்பக் குறைவாக இருக்கும். விவசாயிகள் தங்களோட நிலத்தை வளப்படுத்த வண்டல் ரொம்பவே உறுதுணையாக இருந்துச்சு.

ஒரு முறை வண்டல் போட்டால், அடுத்த அஞ்சு வருஷத்துக்கு அந்த நிலம் வளமாக இருக்கும். 2016-ம் வருஷ கடைசியில தொடங்கிய, வண்டல் எடுக்கும் திருவிழா, 2017, 2018, 2019 வருஷங்கள்லயும் பல கிராமங்கள்ல தொடர்ச்சியாக நடந்துக்கிட்டே இருந்துச்சு. இதனால மழைநீர் சேமிக்கப்பட்டு, நிலத்தடியில படிப்படியாகச் சேகரமாகிட்டே வந்து, இப்ப நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கு. தமிழக அரசு கொண்டு வந்த குடிமராமத்து பணிகள்லயும் சில ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டிருக்கு. ஊர்மக்களோட செல்வ செழிப்புங்கறது, அவங்களோட ஏ.டி.எம். கார்டுல எவ்வளவு பணம் இருக்குறங்கறதை வச்சி முடிவு செய்யக் கூடாது. அந்த ஊர்ல உள்ள ஏரிகள்ல எவ்வளவு தண்ணீர் இருக்குறங்கறதை வச்சிதான் முடிவு செய்யணும். எதிர்கால வளம்ங்கறது இதை நோக்கித்தான் பயணிக்கப் போகுது. எங்களோட பெரம்பலூர் மாவட்டத்தைப் போல மற்ற மாவட்டங்கள்லயும் விவசாயிகள் வண்டல் எடுக்க அரசாங்கம் ஊக்கப்படுத்தணும். இதைச் செஞ்சாலே தமிழ்நாடு செழிப்படையும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வண்டல் மண் போட்டோம், நிலம் வளமானது!

வண்டல் எடுக்க அனுமதி... உயர்ந்தது நிலத்தடி நீர்! வளமானது நிலம்!

ண்டல் மண் எடுத்தது குறித்து பேசிய குளத்தூரைச் சேர்ந்த விவசாயி சுரேந்தர் “எங்க ஊர்ல உள்ள குப்பன் ஏரி 99 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனா பல ஆண்டுகளா தூர்வாராமல் கிடந்ததால், மழைநீரை இதுல முழுமையா சேகரிக்க முடியலை. தண்ணி வெளியேறி வீணாகிக்கிட்டு இருந்துச்சு. எங்க பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஒண்ணா சேர்ந்து, இந்த ஏரியில வண்டல் எடுக்க, கலெக்டர்கிட்ட அனுமதி வாங்கினோம். குப்பன் ஏரியில இருந்து வண்டல் மண் வெட்டி எடுத்துக்கிட்டு வந்து, 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களோட வயல்ல போட்டாங்க. இதுக்கான பலன் கண்கூடா தெரிஞ்சிது. மக்காச்சோளத்துல வழக்கமா ஏக்கருக்கு 15-20 மூட்டைதான் மகசூல் கிடைக்கும். வண்டல் போட்ட பிறகு மண்ணோட வளம் கூடி, 25-30 மூட்டை மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. குப்பன் ஏரி 3-4 அடி ஆழத்துக்கு ஆழப்பட்டிருக்கு. எவ்வளவு மழை பெய்ஞ்சாலும் வெளியில வழியிறதில்லை” என்றார் நெகிழ்ச்சியோடு.