Published:Updated:

அழிவின் விளிம்பில் அரிய முள்ளெலிகள்; காப்பாற்றக் கைகொடுக்கும் தோற்பாவைக்கூத்து; ஒரு ஆச்சர்யக் கதை!

தோற்பாவைக்கூத்து விழிப்புணர்வு

“முள்ளெலிகளைப் பற்றி போதிய விழிப்புணர்வை அவை வாழும் பகுதிகளின் கிராம மக்களுக்குக் கொண்டு சேர்க்க விரும்பினேன்” - ஆய்வாளர் பிரவீன்குமார்

அழிவின் விளிம்பில் அரிய முள்ளெலிகள்; காப்பாற்றக் கைகொடுக்கும் தோற்பாவைக்கூத்து; ஒரு ஆச்சர்யக் கதை!

“முள்ளெலிகளைப் பற்றி போதிய விழிப்புணர்வை அவை வாழும் பகுதிகளின் கிராம மக்களுக்குக் கொண்டு சேர்க்க விரும்பினேன்” - ஆய்வாளர் பிரவீன்குமார்

Published:Updated:
தோற்பாவைக்கூத்து விழிப்புணர்வு
அழிவின் விளிம்பில் நிற்கும் இரண்டு மகத்தான விஷயங்களைத் தன் செயல்பாடுகளின் மூலம் பராமரித்துக் காத்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஆய்வாளர் பிரவீன்குமார்.
முள்ளெலி
முள்ளெலி

நம்மைச் சுற்றி நமக்குத் தெரியாமல் உள்ள உயிர்கள் நாளுக்கு நாள் அழிந்துகொண்டிருக்கும் நிலையில், நம்மில் பெரும்பாலானோர் அறியாத முள்ளெலிகள் என்னும் சிறிய வகைப் பாலூட்டிகளை அழிவிலிருந்து காப்பதற்காகச் செயல்படுகிறார் பிரவீன். மேலும், அவ்வகைப் பிராணிகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் தோற்பாவைக்கூத்துக் கலையைக் கையில் எடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக ஊர்களில் பொட்டல் காடுகள் என்று அழைக்கப்படும் பகுதிகளிலும், தரிசு நிலங்களில் உள்ள புதர்களிலும் தென்படக்கூடிய சிறிய வகை விலங்குதான் முள்ளெலி. உடல் முழுவதும் முட்களால் போர்த்தப்பட்டு, பந்துபோல் வளையும் தன்மைகொண்டவை முள்ளெலிகள். “மாறிவரும் புவியின் வெப்பநிலையால் பல விலங்குகள் அழிந்துவரும் சூழலில், நம்மூர் பொட்டல் நிலத்தில் வசிக்கும் இவை போன்ற விலங்குகளுக்கும் அபாயகரமான சூழலே உருவாகிவருகிறது. மேலும், மேய்ச்சல்-ஆதிக்கம் நிறைந்த நிலங்களிலிருந்த தாவரங்கள் அளவு குறைந்துபோனதாலும், மேய்ச்சல் நிலங்கள் குறைந்ததாலும், பருவமழை சரியாகப் பெய்யாததாலும்கூட இவை அழிவை நோக்கித் தள்ளப்படுகின்றன” என்று முள்ளெலிகளின் இன்றைய நிலையைச் சுட்டிக்காட்டுகிறார் பிரவீன்.

தோற்பாவைக்கூத்து
தோற்பாவைக்கூத்து

கலை வடிவங்களில் பழைமை வாய்ந்த தோற்பாவைக்கூத்து புராணக் கதைகளையே அதிகம் நிகழ்த்திவந்த சூழலில், “முள்ளெலிகளைப் பற்றிப் போதிய விழிப்புணர்வை அவை வாழும் பகுதிகளின் கிராம மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்பினேன்” என்று கூறும் பிரவீன், சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏற்காடு பகுதி மக்களிடம் முள்ளெலிகள் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கியுள்ளார்.

காடுகள் மற்றும் விலங்குகள் ஆய்வு என்றாலே, மேற்குத் தொடர்ச்சி மலைதான் என்று மக்கள் சிந்திக்க, நாம் வாழும் பகுதியைச் சுற்றி வாழும் விலங்குகளையும் மக்களோடு மக்களாக இருந்து ஆய்வு செய்யலாம் என்று எண்ணி சிறிய ரக பாலூட்டிகளை ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறார் பிரவீன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சைனீஸ் அகாடமி ஆப் சயின்ஸ் என்னும் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வை முடித்துள்ள பிரவீன், முள்ளெலிகள் திட்டம் பற்றிப் பேசும்போது, “முனைவர்பட்ட ஆய்வின்போது லீபஸ் யார்கன்டென்ஸிஸ் (Lepus yarkandensis) என்ற முயல் இனத்தின்மீது கவனம் செலுத்தினேன். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் முள்ளெலிகளின் பாதுகாப்பிற்காகப் பல நிகழ்வுகள் நடத்தப்படுவதைக் கண்டபோது எனக்கு முள்ளெலிகள் மீது ஆர்வம் பிறந்தது. முள்ளெலிகள் பற்றிய தரவுகளே நம்மிடம் இல்லாதபோது நாம் அவற்றின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவது வெறும் கற்பனையாக இருந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவ்வப்போது முள்ளெலிகள் பற்றிய விஷயங்களைப் பகிரத்தொடங்கினேன். அப்படித் தொடங்கியதுதான் இந்த முயற்சி” என்கிறார்.

ஆய்வாளர் பிரவீன்குமார்
ஆய்வாளர் பிரவீன்குமார்

தோற்பாவைக்கூத்துக் கலைஞர்களைப் பற்றிப் பேசும்போது, “தொழிலில் எந்த அளவு ஈடுபாட்டைக் காண்பிக்க முடியுமோ அந்த அளவு அயராது செயல்படுகின்றனர் இக்கலைஞர்கள். செய்தியைச் சொல்லிவிட்டால் போதும் அவர்களே தோள்களை வாங்கி தேவையானவற்றை வரைந்து பின்னர் கதையையும் தயார் செய்துவிடுவார்கள். இக்கலைஞர்களின் உதவியோடுதான் இதுவரை 4 மாதங்களில் 20 நிகழ்வுகளை நடத்தியுள்ளோம். கலைவழிக் கற்றல் மக்கள் மனதில் ஆழ்ந்த பதிவை என்றுமே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கலைஞர்களிடத்திலும் உண்டு என்னிடத்திலும் உண்டு” என்கிறார்.

முள்ளெலிகள் மட்டுமின்றி பாறுக் கழுகுகள், எறும்புத் தின்னிகள், சாம்பல் நிற அணில்கள் என அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் உயிரினங்களை மக்களுடன் சேர்ந்து பாதுகாப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
தோற்பாவைக்கூத்து விழிப்புணர்வு
தோற்பாவைக்கூத்து விழிப்புணர்வு

“மத்திய அமெரிக்க நாடாக கோஸ்டாரிகா, அந்நாட்டின் அனைத்து வகை உயிரினங்களையும் பதிவுசெய்து தரவாக்கம் செய்திருக்கிறது. அதேபோல் தமிழ்நாடும் பல்லுயிர்களின் தரவுகளைச் சரியாகச் சேகரித்து விரைவில் ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்கான அடுத்த முயற்சிகளில் ஈடுபடவிருக்கிறேன்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பிரவீன்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism