Published:Updated:

`தமிழகத்தில் இதுதான் முதல்முறை!' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை

ஊட்டி அருகே மசினகுடி பகுதியில் 85 நாட்களாக மரக்கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரிவால்டோ யானை நேற்று அதிகாலை சிக்கல்லா வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி, குடியிருப்பு பகுதிகளில் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக குறைபாட்டுடன் உலவி வந்த ரிவால்டோ என்ற ஆண் காட்டுயானையை கடந்த மே மாதம் 5-ம் தேதி சிகிச்சைக்காக மரக்கூண்டில் அடைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விடுவிக்க 8 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை
தடைகள் தகர்த்து தானாக வழித்தடத்தை மீட்ட யானை; நீலகிரி சுவாரஸ்யம்!

85 நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட ரிவால்டோ யானை, வனத்துறை முதன்மை செயலாளர் முதன்மை தலைமை வன பாதுகாவலர், முதுமலை கள இயக்குநர் மேற்பார்வையில் நேற்று அதிகாலை சிக்கல்லா வேட்டை தடுப்பு காவலர்கள் முகாமிற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

ரிவால்டோ யானையை விடுவித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வனத்துறையின் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, ``ரிவால்டோ யானையை விடுவிக்க முடிவு செய்யப்பட்டு மசினகுடியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் சிக்கல்லா என்ற வனப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. அந்த பகுதியில் வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

தமிழகத்திலேயே முதல்முறையாக ஒரு காட்டு யானையைக் கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து மீண்டும் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டது இததான் முதல் முறை. தேசிய மற்றும் மாநில அளவில் கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ரிவால்டோவை வனப்பகுதியில் விடுவிப்பதற்கான பணி நேற்று அதிகாலை 3 மணியளவில் துவக்கப்பட்டு அப்பர் கார்குடி அருகில் உள்ள சிக்கல்லா சுமார் 9 மணி நேர முயற்சிக்குப் பின் 11 மணியளவில் வனப்பகுதியில் விடுக்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு
`ரிவால்டோ சட்டவிரோதமாக கும்கியாக்கப்படுகிறதா?' - என்ன நடக்கிறது மசினகுடியில்?

ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேடியோ காலர் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது செயற்கைகோள் மூலம் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. இதற்காக தெப்பகாட்டில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை யானை இருக்குமிடம் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.

யானை இருக்கும் பகுதி துல்லியமாக தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியை வெளியேறுவது கண்டறியப்பட்டதால் உடனடியாக வனப்பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வனத்திற்குள் விரட்டப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு