Published:Updated:

1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் விவசாயிக்கு ரூ.21,000 வழங்கப்படும்! கரூர் ஆட்சியர் அறிவிப்பு!

மரக்கன்றுகள்

தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலிலிருந்து இலவசமாகப் பெற்று தங்கள் நிலத்தில் நடவு செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் விவசாயிக்கு ரூ.21,000 வழங்கப்படும்! கரூர் ஆட்சியர் அறிவிப்பு!

தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலிலிருந்து இலவசமாகப் பெற்று தங்கள் நிலத்தில் நடவு செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Published:Updated:
மரக்கன்றுகள்

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் கே.பேட்டை, மணத்தட்டை, வைகைநல்லூர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப் படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். அதில் குறிப்பாக, உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில், இரணியமங்கலத்தில், `நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் தேக்கு, செம்மரம், மகோகனி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளன. அந்த மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ள விவசாயி விஜயா என்பவருடைய வயயை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் இதுகுறித்துப் பேசும்போது, ```தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக் கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் அமல்படுத்தியுள்ளார். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2.40 லட்சம் மரக்கன்றுகள், மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்திட, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்புகளிலும் மற்றும் குறைந்த செலவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெறுவதற்காக உழவன் செயலியில் தாங்களாகவே பதிவு செய்தோ, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்தோ வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலிலிருந்து இலவசமாகப் பெற்று தங்கள் நிலத்தில் நடவு செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், தேக்கு மரக்கன்றுகள், மகோகனி மரக்கன்றுகள், வேம்பு, பெருநெல்லி, செம்மரம், புளியமரம், பூவரசுள், வில்வம், புங்கம் மரக்கன்றுகள் என மொத்தம் 2,40,000 தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறையின்கீழ் உள்ள சின்னதாதம்பாளையம் மற்றும் சுக்காம்பட்டி, கடவூர் ஆகிய அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்படுள்ளது. இந்த மரக்கன்றுகளைப் பெற்று வரப்பு நடவு முறையில் நடவு செய்யும் விவாயிகளுக்கு, ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 எக்டருக்கு 320 மரக்கன்றுகளுக்கும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு 200 முதல் 1,000 மரக்கன்றுகளும் எனத் தலா ரூ.15 மதிப்புள்ள மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மரக்கன்றுகளைப் பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் 7 சதவிகிதம் மூன்று ஆண்டுகளுக்கு 21 சதவிகிதம் வழங்கப்படும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உதாரணமாக, 1,000 மரக்கன்றுகள் வைத்துள்ள விவசாயிக்கு மூன்றாண்டுக்கு ரூ.21,000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 906 விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் பாதிப்படையாமல் கூடுதலாக ஊடுபயிராக மரங்களை வளர்த்து பலனடைவது தொடர்பாக, அனைத்து விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மரக்கன்றுகள் வளர்ப்பு
மரக்கன்றுகள் வளர்ப்பு

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு, மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடவுப்பணிகள் செயல்படுத்தப்படுவதை அரசு இணைய தள செயலி வாயிலாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதோடு, இத்திட்டத்தால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளமும் அதிகரிப்பதோடல்லாமல் மாநிலத்தின் பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism