Election bannerElection banner
Published:Updated:

நெல்லை: காந்திமதி யானைக்கு கொரோனா பரிசோதனை... புத்துணர்வு முகாமுக்கு அனுப்ப ஏற்பாடு!

காந்திமதி யானை
காந்திமதி யானை

தேக்கம்பட்டியில் நடக்கும் யானைகள் சிறப்பு முகாமுக்குச் செல்லும் காந்திமதி யானைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்கள் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கப்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

யானைக்கு கொரோனா பரிசோதனை
யானைக்கு கொரோனா பரிசோதனை

யானைகளுக்கு புத்துணைர்வு அளிக்கும் வகையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, சிறப்பு மூலிகைக் குளியல், சத்தான உணவுகள் வழங்குதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்துதல் போன்றவை முகாமில் பங்கேற்கும் யானைகளுக்குக் கொடுக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம், வரும் 8-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து யானைகளைக் கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

முகாமில் பங்கேற்க உள்ள யானைகளுக்கும் அவற்றைப் பராமரிக்கும் பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. நெல்லையில் உள்ள நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருகோயின் காந்திமதி யானை, புத்துணர்வு முகாமில் பங்கேற்க இருக்கிறது.

புத்துணர்வு முகாமில் பங்கேற்க தேக்கம்பட்டி செல்ல இருக்கும் காந்திமதி யானைக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையானது காந்திமதி யானைக்கு மட்டுமல்லாமல் யானையைப் பராமரிக்கும் பாகன்கள் ராமதாஸ் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கும் நடத்தப்பட்டது.

நெல்லையப்பர் கோயில் யானை
நெல்லையப்பர் கோயில் யானை

காந்திமதி யானையின் வாயிலும் துதிக்கையிலும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைக்கு காந்திமதி யானை முழு ஒத்துழைப்புக் கொடுத்ததாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு