Published:Updated:

"ரெண்டு வருஷமா எங்க தொழிற்சாலையில தண்ணீர் பஞ்சம் இல்லை..!" - மழைநீரைச் சேமித்த சாமிதுரை

Rainwater Storage
Rainwater Storage

"நான் எடுத்த வீடியோ வைரலாகி ஒருநாளைக்கு 100 போன்காலுக்கு மேல் வந்துட்டு இருக்கு!"

மழைநீர் சேமிப்பு குறித்த ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் சில தினங்களாக செம வைரல். பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளில், மழைநீரை முறையாகச் சேமித்து, தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்துகொள்கிறது, ஒரு நிறுவனம். இந்தச் சிறப்பான திட்டம், நாமக்கல் மாவட்டம் வெப்படையிலுள்ள ஒரு நூற்பாலையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மழைநீர் சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்திய சாமிதுரையிடம் பேசினோம். உற்சாகமாகப் பேசினார்.

Saamydurai
Saamydurai

"கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நான், டிப்ளோமா எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர். 15 வருஷமா வெப்படை ரோகித் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்றேன். இந்த நிறுவனத்துல 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்றாங்க. போதிய மழைப் பொழிவு இல்லாததால, இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைஞ்சுடுச்சு. இதனால, எங்க நிறுவனம் உட்பட சுற்றுவட்டாரத்திலுள்ள 60-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுச்சு.

600 முதல் 1,000 அடி ஆழமுள்ள நாலு ஆழ்துளைக் கிணறுகள் எங்க நிறுவனத்தில் இருந்தும், அவற்றில் தண்ணீர் கிடைக்கலை. அவை பயன்படுத்தப்படாமல் சும்மா இருந்துச்சு. அதனால, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக காசு கொடுத்து தண்ணீர் வாங்கிட்டிருந்தோம். இதனால், சராசரியா மாதத்துக்கு ரெண்டு லட்சம் ரூபாய் வரை செலவாச்சு.  

Rainwater Storage
Rainwater Storage

அப்போதெல்லம் குறைந்த அளவில் மழை பெய்தாலும், அதைச் சரியா பயன்படுத்தாம இருந்தோம். இந்த ரெண்டு விஷயமுமே வருத்தத்தை உண்டாக்குச்சு" என்கிற சாமிதுரை, அந்தத் தருணத்தில்தான் மழைநீர் சேமிப்புக்குப் புதிய யுக்தியைச் செயல்படுத்தியிருக்கிறார்.

"தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க, மழைநீரை முறையாகச் சேமிக்க முடிவெடுத்தோம். தண்ணீர் கிடைக்காத அந்த நாலு ஆழ்துளைக் கிணறுகளின் மேற்பரப்பிலும், நீளம், அகலம், ஆழம்னு முறையே நான்கு அடி அளவில் (4*4*4) தொட்டி கட்டினோம். 

குடிநீர் உள்ளிட்ட எங்க நிறுவனத்துக்குத் தேவையான தண்ணீர் முழுக்கவே, புதுசா தொடங்கிய மூணு ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தே எடுத்துக்கிறோம். இது, கடந்த ரெண்டு வருஷத்தில் நிகழ்ந்த மாற்றம்.
சாமிதுரை

எங்க நிறுவன வளாகத்துல பெய்யும் மழைநீரை பைப் வழியே, நாலு ஆழ்துளைக் கிணற்றின் மேற்பரப்பிலுள்ள தொட்டியில் நேரடியாகச் சேமிக்க ஆரம்பிச்சோம். அதுல, ஒரு தொட்டியில் தண்ணீர் நிரம்பிட்டா... மற்ற தொட்டிகளுக்குத் தண்ணீர் போற மாதிரி பாதையை உருவாக்கினோம்.

மழைநீரைச் சேமிக்கிறதுக்கு மட்டுமே, இந்த நாலு ஆழ்துளைக் கிணறுகளையும் பயன்படுத்துறோம். அவற்றிலிருந்து நீரை எடுக்க மாட்டோம். இதனால, நிலத்தடி நீர்மட்டம் உயர ஆரம்பிச்சது. புதுசா மூணு ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்கினோம். அவற்றில் 360 அடியிலயே தண்ணீர் கிடைக்குது. இப்போ வெளியில காசு கொடுத்து நாங்க தண்ணீர் வாங்கிறதில்லை.

Saamydurai with company owner
Saamydurai with company owner

குடிநீர் உள்ளிட்ட எங்க நிறுவனத்துக்குத் தேவையான தண்ணீர் முழுக்கவே, புதுசா தொடங்கிய மூணு ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தே எடுத்துக்கிறோம். இது, கடந்த ரெண்டு வருஷத்தில் நிகழ்ந்த மாற்றம்" என்கிறார் பெருமிதத்துடன்.

இந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மழைநீர் சேமிப்பு குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக உலாவுகின்றன. இது குறித்துப் பேசுபவர், "மழை வந்தாலே நான் குஷியாகிடுவேன். மழையை ரசிப்பதுடன், அவ்வப்போது அதை போட்டோ அல்லது வீடியோ எடுப்பேன். எங்களுடைய வெற்றிகரமான மழைநீர் சேமிப்பு மத்தவங்களுக்கும் தெரியணும்; உதவணும்னு நினைச்சேன்.

Saamydurai with company owner
Saamydurai with company owner

கடந்த செவ்வாய்கிழமை மாலை எங்க பகுதியில நல்ல மழை பெஞ்சுது. பயன்படாத ஆழ்துளைக் கிணற்றில் மழைநீர் சேகரிக்கப்படுவதை அப்போ வீடியோ எடுத்து, அன்றிரவே சில நண்பர்களுக்கு அனுப்பிவெச்சேன். யாரோ அதை ஃபேஸ்புக்ல பதிவிட, அது வைரலாகிடுச்சு. இதுவரை பத்து லட்சம்பேருக்கு மேல அந்த வீடியோவைப் பார்த்திருக்காங்க. வீடியோ வைரலாகும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. அவங்கள்ல தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் போன் பண்றாங்க; வாழ்த்துச் சொல்றாங்க; ஆலோசனை கேட்கிறாங்க. 

தற்போது மழைக்காலம். இப்போ, மழைநீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தா, தண்ணீர்த் தட்டுப்பாட்டை நிச்சயம் தவிர்க்க முடியும். முன்திட்டமிடலுடன், ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டினால் நீண்டகாலத்துக்குப் பயன் கிடைக்கும்.
சாமிதுரை
Saamydurai
Saamydurai

நாலு ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீரைச் சேமிக்கிறது தவிர, ரெண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியிலயும் (சம்ப்) மழைநீரைச் சேமிச்சுகிட்டிருக்கிறோம். பெய்ற மழைநீரை முறையா சேமிக்கிறதால, எங்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. நாங்க கடைப்பிடிக்கிற முறையை மத்தவங்க பயன்படுத்தினால், நிச்சயம் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், வழிகாட்டத் தயாராக இருக்கிறோம்.

உதாரணத்துக்கு 500 அடி ஆழத்தில், 6.5 இன்ச் விட்டத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதாக இருந்தால், அந்தக் கிணற்றுக்குள் 5 இன்ச் பன்ச்டு பைப் (punched pipe) பொறுத்தி, அதற்குள் மோட்டார் அல்லது ஏர் கம்ரஸரைப் பயன்படுத்தி நீரை எடுக்கலாம். இப்படி ஃபில்டர் பெட் பயன்படுத்தி மழைநீரைச் சேமித்தால், எந்தப் பிரச்னையும் இன்றி நீண்ட வருடங்களுக்கு ஆழ்துளைக் கிணற்றில் மழைநீரைச் சேமிக்க முடியும். ஏற்கெனவே இருக்கும் ஆழ்துளைக் கிணற்றில் மழைநீரை நேரடியாக அனுப்பினால், அடைப்பு உள்ளிட்ட காரணங்களால் கிணற்றின் ஆழம் குறைய ஆரம்பிக்கும்.

தற்போது மழைக்காலம். இப்போ, மழைநீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தா, தண்ணீர்த் தட்டுப்பாட்டை நிச்சயம் தவிர்க்க முடியும். முன்திட்டமிடலுடன், ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டினால் நீண்டகாலத்துக்குப் பயன்கிடைக்கும்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு