இன்றைக்கு நாம் உலகில் பயன்படுத்தும் அணு உலைகள் அனைத்துமே அணுக்கருவு பிளவு (Nuclear Fission) தத்துவத்தின் அடிப்படையில் இயங்குபவை. இதற்கு எதிர்மாறாக அணுக்கருவு இணைவு (Nuclear Fission) தத்துவத்தின் அடிப்படையில் இயங்குபவை சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் அணு ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.
இந்நிலையில்தான், பிரிட்டனில் உள்ள ஜெட் ஆய்வகத்தில் நேற்று 5 நொடிகளுக்கு அணுக்கருவு இணைவு விளைவை நிகழ்த்தி, 11 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து முதல்முறையாக சாதித்திருக்கின்றனர் சர்வதேச விஞ்ஞானிகள்.
எதிர்காலத்தில் இதைப் பெரிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் செய்யும்போது, தற்போதைய அணு உலைகளைப் போலவே இவற்றிலிருந்தும் ஆற்றலைப் பெறமுடியும். சரி, இதில் அப்படியென்ன சிறப்பு?
ஒன்று, இது பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில்லை. தற்போதைய அணு உலைகளைப் போல ஆபத்தான அணுக்கழிவுகளையும் வெளியிடுவதில்லை. மிகக்குறைவான, குறுகிய காலத்தில் செயலிழக்கும் கழிவுகள் மட்டுமே இதிலிருந்து வெளியாகும். எனவே பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பயணத்தில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய அணு உலைகளை விடவும் இது பல மடங்கு பாதுகாப்பானவையும்கூட. எனவே எதிர்காலத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றிற்கு மாற்றாகவும் இந்த அணுக்கரு இணைவு உலைகள் கருதப்படுகின்றன. அப்படியென்றால் விரைவில் இவை பயன்பாட்டுக்கு வந்து பூமியின் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?
அதுதான் இல்லை. எப்படியும் ஆராய்ச்சிகள் முடிந்து, தற்போதைய உலைகள் போலவே பயன்பாட்டுக்கு வர 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிடுமாம். எனவே அதுவரை சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதும், பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதும்தான் பூமியைக் காக்க தற்போது நம் முன் இருக்கும் உடனடி தீர்வுகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
Note: இந்த செய்தியும், அதன் சுருக்கமான விளக்கமும் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறோம். இதேபோல தினசரி முக்கிய செய்திகளை எளிமையான வார்த்தைகளில், சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழே உங்கள் மெயில் ஐடியைக் கொடுத்து The Subject Line நியூஸ்லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க. தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸிற்கே தேவையான செய்திகள் தேடி வரும்!