Election bannerElection banner
Published:Updated:

குன்னூர் அவலம்: ஆற்று நீரில் அதிகரிக்கும் கழிவுகள்! - நல்ல நீரைத் தேடும் யானைகள்

குன்னூர் ஆறு
குன்னூர் ஆறு

மழை காரணமாக ஆற்றிலும் நல்ல நீரோட்டம் உள்ளது. ஆற்றங்கரையில் இருந்தாலும் இந்த நீரை யானைகள் குடிப்பதில்லை. நல்ல தண்ணீரைக் குடிக்க ரயில் நிலைய வளாகத்துக்கு வருகின்றன.

தென்னகத்தின் தண்ணீர் தொட்டியான நீலகிரி காடுகளில் உற்பத்தியாகும் ஏராளமான சிற்றோடைகள் ஆறாக ஓடி பவானியில் கலக்கின்றன.

குன்னூர் ஆறு
குன்னூர் ஆறு

ஊட்டியின் கோடப்பமந்து கால்வாய், குன்னூர் ஆறு இவை இரண்டுமே மிதமிஞ்சிய கழிவுகளால் மிக மோசமாக மாசடைந்து வருகின்றன.

இரண்டே நாள்களில் மூன்றாவது யானை பலி..! - என்ன நடக்கிறது கோவையில்?

இவற்றை சீரமைக்க பல ஆண்டுகளாக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டும் எந்தப் பயனும் இல்லை. இவற்றைத் திறந்தவெளி குப்பைத்தொட்டியாகப் பலரும் பயன்படுத்தும் அவலமும் தொடர்கிறது. குன்னூர் ஆற்றில் தொடர்ந்து அளவுக்கு அதிகமாகக் கலக்கப்படும் கழிவுகளால் சாக்கடையாக மாறி பவானியில் கலக்கிறது.

குன்னூர் ஆறு
குன்னூர் ஆறு

மேலும்,‌ யானை உள்ளிட்ட வன விலங்குகள் மாசடைந்த இந்த ஆற்றுநீரை அருந்தாமல் நல்ல தண்ணீர் தேடி வேறு பகுதிகளுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாசடைந்து வரும் குன்னூர் ஆறு குறித்து நம்மிடம் பேசிய ஆர்வலர் மனோகரன், "குன்னூர் ஆற்றுநீர் குடிநீருக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஜெகதளா பகுதிகளில் உருவாகி குன்னூர் நகரைக் கடந்து தற்போது சாக்கடையாக வனத்தில் பாய்ந்தோடி பவானியில் கலக்கிறது. குன்னூர் நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் செப்டிக் டேங்க் கிடையாது. குன்னூர் நகராட்சியில் உள்ள பொது கழிவறைகளின் கழிவுகள் நேரடியாக இந்த ஆற்றில் கலக்கப்படுகின்றன.

குன்னூர் ஆறு
குன்னூர் ஆறு

மேலும் இறைச்சிக் கழிவுகளும் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. அதிகளவிலான கழிவுநீர் கலப்பதால் வன‌ விலங்குகள் இந்த நீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் நோய் பரப்பும் விதமாக இந்த ஆறு மாற்றப்பட்டது வேதனையானது" என்றார்.

இரண்டே நாள்களில் மூன்றாவது யானை பலி..! - என்ன நடக்கிறது கோவையில்?

ஓராண்டுக்கு முன்பு இந்த ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட வசந்தன் பேசுகையில், " 20 லட்சம் ரூபாய் செலவில் சில கிலோமீட்டர்கள் வரை பல டன் குப்பைகளை அகற்றி, சில இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து சீரமைத்தோம். தற்போது மீண்டும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. வியாபாரிகளும் பொது மக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த ஆற்றைத் தொடர்ந்து பாதுக்காக்க முடியும்" என்றார்.

குன்னூர் ஆறு
குன்னூர் ஆறு

ரண்ணிமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசுகையில், "கடந்த சில தினங்களாக இந்தப் பகுதியில் குட்டியுடன் யானைகள் முகாமிட்டுள்ளன. மழை காரணமாக ஆற்றிலும் நல்ல நீரோட்டம் உள்ளது. ஆற்றங்கரையில் இருந்தாலும் இந்த நீரை யானைகள் குடிப்பதில்லை. நல்ல தண்ணீர் குடிக்க ரயில் நிலைய வளாகத்துக்கு வருகின்றன அல்லது வேறு பகுதிக்குச் செல்கின்றன. இதனால் யானை மனித எதிர்கொள்ளல்களும் அதிகரிக்கின்றன. இதேபோல் இந்தப் பகுதியில் உள்ள காட்டுமாடு, கடமான் உள்ளிட்ட வன விலங்குகளும் இந்த ஆற்று நீரைத் தவிர்க்கின்றன. சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை" என்றார்.

மாசடைந்த குன்னூர் ஆறு! ஒரு காலத்தில் குடி நீருக்காக பயன்படுத்தப்பட்டுவந்த குன்னூர் ஆற்று நீர், தற்போது அளவுக்கு அதிகமாக...

Posted by Vikatan EMagazine on Thursday, July 9, 2020
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு