Published:Updated:

பீமா மூங்கிலில் ஆக்சிஜன் பூங்கா - தேனியில் புதிய முயற்சி!

மூங்கில் கன்றுகள் நடும் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள்.
மூங்கில் கன்றுகள் நடும் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள்.

பீமா மூங்கில் எனப்படும் பாம்புசா பல்கூவா வகை மூங்கிலால் ஆக்சிஜன் பூங்கா அமைக்கும் பணி தேனியில் தொடங்கப்பட்டுள்ளது.

வைகை அணை அருகே அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 5 ஏக்கர் பரப்பளவில், பீமா மூங்கில் எனப்படும் பாம்புசா பல்கூவா வகை மூங்கிலால், ஆக்சிஜன் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

`மாசில்லா தேசம் 2020; நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்!'- தேனி அமைப்பின் பாசிட்டிவ் முயற்சி
மூங்கில் கன்றுகள் நடும் தோட்டக்கலைக் கல்லூரி மாணவ மாணவிகள்.
மூங்கில் கன்றுகள் நடும் தோட்டக்கலைக் கல்லூரி மாணவ மாணவிகள்.

சராசரியாக ஒரு மனிதனுக்கு ஆணடுக்கு 300 கிலோ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை மையமாக வைத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மூங்கில்களை நட்டு பராமரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது வைகை அணை அருகே உள்ள தேனி வேளாண் ஆராய்ச்சி நிலையம்.

வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர், பேராசிரியர் ஜூலியட் ஹெப்சிபா நம்மிடம் பேசியபோது, ``ஓசூர் குரோமோ பயோடெக் நிறுவனத்திடமிருந்து மூங்கில் கன்றுகள் பெறப்பட்டுள்ளன. பாம்புசா பல்கூவா எனப்படும் அரியவகை மூங்கில் இது. வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான ஐந்து ஏக்கரில், தோட்டக்கலைக் கல்லூரி மாணவ மாணவிகளின் பங்களிப்போடு கன்றுகள் நடப்பட்டுள்ளன.

ஏக்கருக்கு 460 நாற்றுகள் வீதம் 5 ஏக்கரில் 2,300 மூங்கில் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த வகை மூங்கில்கள் மற்ற வகை மூங்கில்களைவிட 35% அதிக ஆக்சிஜனை வெளியிடக்கூடியது. அதிக உறுதித்தன்மை வாய்ந்த இந்த மூங்கில் 35 அடி வரை வளரும். ஆயுள்காலம் அதிகம்.

ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!
மூங்கில் கன்றுகள் நடும் தோட்டக்கலைக் கல்லூரி மாணவ மாணவிகள்.
மூங்கில் கன்றுகள் நடும் தோட்டக்கலைக் கல்லூரி மாணவ மாணவிகள்.

கரும்பு, வாழையைவிட குறைவான நீரையே எடுத்துக்கொள்ளும். மகசூல் என்று பார்த்தால், 4 வருடத்தில் 40 டன்னும், 5 வருடத்தில் 50 டன் மகசூல் இருக்கும். இந்த வகை மூங்கில்கள் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளாகவும் மற்ற தேவைகளுக்கும் பயன்படும். தற்போது மார்க்கெட்டில் ஒரு டன் ரூபாய் 2,500 முதல் 5,000 வரை விலைபோகிறது. இவையெல்லாம் ஒரு புறமென்றால், இதை வைத்து முதற்கட்டமாக ஆக்சிஜன் பூங்கா அமைப்பதே முதல் நோக்கம்!” என்றார். மூங்கில் கன்றுகள் நடும் நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் கெளதம். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் ஆறுமுகம். ஆண்டிபட்டி டி.எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு