Published:Updated:

`கர்ப்பம்... காட்டைவிட்டு வெளியேற பயம்'- இந்தோனேசியாவில் ஒரங்குட்டானுக்கு நிகழ்ந்த கொடூரம்

அது மிகவும் பலவீனமானதாக இருந்துள்ளது. அது ஒட்டிக்கொண்டிருந்த மரத்தைவிட்டு வெளியேற பயந்ததாகவும் கூறப்படுகிறது.

Orangutan
Orangutan ( indiatimes )

காட்டழிப்பால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் அறிந்திருந்தபோதிலும், அதைத் தவிர்க்க அவர்கள் முன்வருவதில்லை. மரங்களையும், காடுகளையும் அழித்து அங்கே குடியேறிக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில்தான், இந்தோனேசியாவில் உள்ள காடு ஒன்று அழிக்கப்பட்டு, அங்குள்ள வனவிலங்குகள் வாழ்விடமற்று தவித்து வருகின்றன. அந்தக் காட்டில் எஞ்சியிருக்கும் மரம் ஒன்றில் ஒரங்குட்டான் என்ற ஒருவகை குரங்கு அமர்ந்திருக்கிறது. கர்ப்பமாகயிருக்கும் அந்தக் குரங்கின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Orangutan
Orangutan
indiatimes

இயற்கை எப்படி மனிதனிடம் மன்றாடுகிறது என்பதை இந்தப் புகைப்படம் வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. கர்ப்பமான ஒரங்குட்டான் குரங்கை அப்புறப்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஒரங்குட்டான் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தக் கொடூரமான செயல் மனித இனத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் புகைப்படம் வெளியான நிலையில் பார்ப்பவர்களுக்கு பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கர்ப்பமான குரங்கின் பெயர் பூன்-மீ. அது மிகவும் பலவீனமானதாக இருந்துள்ளது. அது ஒட்டிக்கொண்டிருந்த மரத்தைவிட்டு வெளியேற பயந்ததாகவும் கூறப்படுகிறது.

விலங்குகளைக் கொல்லாமல் இறைச்சி தயாரிப்பு! - சாதனை படைத்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்

காரணம் புல்டோசர்களால் அந்தக் காடு இடிக்கப்பட்ட மிரட்சியிலிருந்து அது மீளவில்லை. அது பட்டினி கிடந்தபோதிலும், உணவுக்காகக் கூட மரத்தைவிட்டு கீழே இறங்காமல் பயத்தில் அமர்ந்துகொண்டிருந்தது. அழிக்கப்பட்ட அந்தக் காட்டில், எந்த உணவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில், ஒரங்குட்டான்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. காரணம், அங்கு ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான ஒரங்குட்டான்கள் லாப நோக்கத்துக்காக கொலை செய்யப்படுகின்றன. இது தொடர்பாக ஐ.ஏ.ஆர் அதிகாரிகள் கூறுகையில், ``பாமாயில் தொழிற்சாலைகளுக்காக இந்த விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகிறது.

Orangutan
Orangutan
indiatimes

அழிக்கப்படும் இந்த விலங்குகளைப் பார்ப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. இந்தச் சூழலில் அந்த விலங்குகளை அழிப்பதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனம் எங்களை நாடியது ஆறுதலாக இருக்கிறது” என்றனர். இந்தோனேசியாவில் பதப்படுத்தப்பட்ட, பாமாயில் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, இப்போது அது ஓர் உயிர் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஷாம்பு மற்றும் பிற அழகுசாதனப் பொருள்களிலும் இது ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். இயற்கையையும், உயிரினங்களையும் அழித்து மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்தானா? இதற்குமாற்று வழிகளை நாடாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.