Published:Updated:

``என் தந்தை இருந்த இடத்தில் இப்போது நான்" - முதலை ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் மகன் ராபர்ட் உருக்கம்!

ஸ்டீப் இர்வின்
ஸ்டீப் இர்வின் ( முதலைகள் ஆர்வலர் )

உலகப் புகழ்பெற்ற மறைந்த முதலைகள் ஆர்வலர் ஸ்டீவ் இர்வினின் மகன் ராபர்ட் இர்வின் தன் தந்தையைப் போலவே எடுத்த ஒளிப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புகழ்பெற்ற முதலைகள் ஆர்வலர் ஸ்டீவ் இர்வினுடைய மகன் ராபர் இர்வின் தன் தந்தையைப் பெருமைப்படுத்தும் விதமாகத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முர்ரே முதலையுடன் ஸ்டீவ் இர்வின்
முர்ரே முதலையுடன் ஸ்டீவ் இர்வின்
Richard Gilles

15 வயதான ராபர்ட் இர்வின், தன் ஒளிப்படத்தையும் தன் தந்தையின் ஒளிப்படத்தையும் அந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார். அவற்றில், 15 ஆண்டுகளுக்குமுன் ஸ்டீவ் இர்வின் முர்ரே (Murray) என்ற முதலைக்கு உணவூட்டுவதுபோல் எடுத்த ஒளிப்படத்தையும், தற்போது அதே கோணத்தில் அதே முதலைக்கு அவருடைய மகன் ராபர்ட் உணவூட்டும் ஒளிப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

``தந்தையும் நானும் ஒரே இடத்தில் ஒரே முதலையுடன். ஆனால், பதினைந்து ஆண்டுகள் இடைவெளியில்..." என்று தன் பதிவில் அவர் கூறியுள்ளார்.

Vikatan

ஸ்டீவ் இர்வின், முதலைகள் ஆர்வலராகத் தொலைக்காட்சிகளுக்குப் பல ஆவணப்படங்களைத் தயாரித்து வழங்கியவர். அவர் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி, தன் 44-வது வயதில் ஸ்டிங்ரே என்ற மீன் தாக்கி உயிரிழந்தார். அவருக்கு ராபர்ட், பிண்டி என்று இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்த மகன் ராபர் இர்வின்தான் தற்போது தன் தந்தையைப் போலவே ஒளிப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ராபர்ட்டும் பிண்டியும் தற்போது தங்கள் தந்தை நடத்திவந்த ஆஸ்திரேலிய காட்டுயிர் அருங்காட்சியகத்தில் வாழ்கின்ற 1200-க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பராமரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு