Published:Updated:

`மலைக்குன்றுகளில் விதைப்பந்து; நீர்நிலைகளில் மரக்கன்றுகள்!'- நாமக்கல்லை பசுமையாக்கும் அமைப்பு

விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி

11-க்கும் மேற்பட்ட அமைப்புகளோடும், 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடும் `பசுமை நாமக்கல்' அமைப்பு எண்ணற்ற சூழலியல் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இவர்களால் அங்கங்கே பூக்கத் தொடங்கியிருக்கும் `பசுமை'யைப் பாராட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார்

`மலைக்குன்றுகளில் விதைப்பந்து; நீர்நிலைகளில் மரக்கன்றுகள்!'- நாமக்கல்லை பசுமையாக்கும் அமைப்பு

11-க்கும் மேற்பட்ட அமைப்புகளோடும், 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடும் `பசுமை நாமக்கல்' அமைப்பு எண்ணற்ற சூழலியல் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இவர்களால் அங்கங்கே பூக்கத் தொடங்கியிருக்கும் `பசுமை'யைப் பாராட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார்

Published:Updated:
விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி

``எங்க மாவட்டத்தில நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சுட்டு. 1,400 அடிக்கு போர் போட்டாலும், தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம், இங்கு குறைந்துபோன இயற்கை வளமும், குறைவாக பெய்யும் மழை வளமும்தான். இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தண்ணீர் அதிகம் கொடுப்பதாலும், அந்த கோழிகள் அதிகம் கார்பன்டை ஆக்சைடை வெளியிடுவதாலும், நாமக்கல் மாவட்டம் நாளுக்கு நாள் வெப்பமாயிட்டு வருது.

விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி
விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி

அதைக் குறைக்கவும், நாமக்கல் மாவட்டத்தை பசுமையாக்கவும், `பசுமை நாமக்கல்' அமைப்பை ஆரம்பிச்சு, இதுவரை ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் உள்ள மலைக்குன்றுகளில் 28,000 விதைப்பந்துகளை தூவியிருக்கிறோம். பனைவிதைகளையும் விதைத்திருக்கிறோம்" என்று தங்கள் அமைப்பை பற்றி கூறி ஆரம்பிக்கிறார் `பசுமை' மா.தில்லை சிவக்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாமக்கல்லைச் சேர்ந்த இவர், இந்த அமைப்பின் செயலராக இருக்கிறார். 11-க்கும் மேற்பட்ட அமைப்புகளோடும், 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடும் `பசுமை நாமக்கல்' அமைப்பு எண்ணற்ற சூழலியல் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இவர்களால் அங்கங்கே பூக்கத் தொடங்கியிருக்கும் `பசுமை'யைப் பாராட்டி, குடியரசு தின விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், சிவக்குமாருக்கு விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார். தொடர்ந்து, நாமக்கல்லை பசுமையாக்கும் முயற்சிகளில் உத்வேகமாக இருக்கும் தில்லை சிவக்குமாரிடம் பேசினோம்.

 'பசுமை' மா.தில்லை சிவக்குமார்
'பசுமை' மா.தில்லை சிவக்குமார்

``பொதுவா ஒரு மாவட்டத்துல நல்ல இயற்கை சூழல் இருக்கணுனா, 33 சதவிகிதம் காடுகள் இருக்கணும்னு சொல்வாங்க. ஆனா, நாமக்கல் மாவட்டத்துல வெறும் 16.5 சதவிகிதம்தான் காடுகள் இருக்கு. அதனால், கடந்த 30 வருஷமா இங்கு சரியாக மழை பெய்யவில்லை. அப்படியே பெய்யும் மழை தண்ணீரை தேக்க, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை தூர்வாராம, சீமைக்கருவேலம் மரங்கள் மண்டிபோக விட்டுட்டாங்க. இன்னொருபக்கம், நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் கோழிகள் வளர்க்கப்படுது. ஒருகோடி கோழிகள் குறையாம வளர்க்கப்படுது. அவைகளுக்கு ராட்சத போர்வெல்கள் போட்டு, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுத்து பயன்படுத்துறாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொருபக்கம், அத்தனை கோழிகள் சுவாசிக்கவும் தேவையான ஆக்சிஜனை தரும் மரங்கள் இங்கு இல்லை. ஆனா, அத்தனை கோழிகளும் எக்கச்சக்கமா கார்பன்டை ஆக்சைடை வெளியிடுது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் பூமி அதிக வெப்பமாகுது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் இங்கே அதலபாதாளத்துக்கு போயிட்டு. 1,400 அடிகள் வரை போர் போட்டும், தண்ணீர் கிடைக்காத நிலை. கொஞ்சம் கொஞ்சமாக நாமக்கல் மாவட்டம் பாலையாயிட்டு வருது. இதை இருபது வருஷத்துக்கு முன்னாடியே உணர்ந்த நாங்க, நாமக்கல்லை பசுமையாக்கும் நோக்கில், நம்மாழ்வார் அய்யாவை வைத்து, கடந்த 2003-ம் ஆண்டு, `பசுமை நாமக்கல்'ங்கிற இந்த அமைப்பை ஆரம்பித்தோம்.

விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி
விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி

ஆரம்பத்தில், பல தன்னார்லவர்களை சேர்த்துக்கிட்டு, பொதுவான இடங்களில் மரக்கன்றுகள் நடுவது, ஆறு, ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் பனைமர விதைகளை நடுவதுனு செயல்பட ஆரம்பிச்சோம். இதுவரை, 80 ஊர்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். அந்தந்த கிராமத்து இளைஞர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்களிடம், நாமக்கல்லை நெருக்கும் வறட்சியைப் பத்தி சொல்லி, அவர்களிடம் முதலில் இயற்கையை பாதுகாப்பது, கட்டமைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன்பிறகே, மரக்கன்றுகளை வைத்தோம்.

அந்தந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள், நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ள 10 பெண்களை அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாப்பதற்கென்று நியமித்து, அவர்கள் மூலமாக மரக்கன்றுகளை வளர வைச்சாங்க. இன்னொருபக்கம், இளைஞர்கள் பலரையும் ஊக்குவிச்சு, ஆர்வப்படுத்தி அவர்கள் மூலமாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 15,000 க்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைக்க வைத்திருக்கிறோம். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையிலும் கடந்த 10 வருஷமாக சரியான மழை பெய்யவில்லை.

 மரக்கன்றுகள் நடப்பட்ட நீர்நிலை
மரக்கன்றுகள் நடப்பட்ட நீர்நிலை

அதனால், இந்த மாவட்டத்தில் உள்ள சித்தர் மலை, சருகு மலை, நைனா மலை, போத மலை உள்ளிட்ட 6 மலைக்குன்றுகளில் நாட்டுவிதைப்பந்துகளை தூவினோம். வேம்பு, இலுப்பை, புளிய விதை, மருதம், புங்கன்னு இதுவரை 28,000 விதைப்பந்துகளை தூவியிருக்கிறோம். நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் இந்த நிகழ்வில் கலந்துகிட்டு விதைப்பந்து தூவியதோடு, `இனி, நாமக்கல்லிலும் கனமழை பெய்ததுனு வானிலை அறிகையில் சொல்லும் அளவுக்கு நாமக்கல்லை பசுமையான மாவட்டமாக மாற்றி காட்ட வேண்டும்'னு பேசி, எங்களை ஊக்குவிச்சார். 11 அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைச்சு, இந்த வேலைகளை செய்கிறோம்.

விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி
விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி

இதனால், நாமக்கல்லில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமை திரும்பி வருது. நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகிறது. இப்போதுள்ள இளைஞர்களிடமும், இளைய தலைமுறையிடமும் நாமக்கல் மாவட்டம் சந்திக்கும் மோசமான சூழலியல் மாற்றத்தைப் பத்தி உணர்த்தி, அவர்களை இயற்கையை நோக்கி திருப்புகிறோம். அவர்களை வைத்து இருக்கும் நாட்டு மரங்களான பனை, ஆலம், அரசு, பூவரசு, புங்கன் போன்ற மரங்களை மீட்க முயற்சிக்க வைக்கிறோம். அந்த மரங்களால் மழையை எளிதாக ஈர்த்து, பெய்ய வைக்க முடியும். நாட்டு மரங்களை வளர்க்கவும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பலரின் நிதியுதவியோடுதான், இந்த இயற்கையை செப்பனிடும் காரியத்தை செய்து வருகிறோம்.

இதற்காகதான், எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் 26 ம் தேதி நடந்த குடியரசு தின விழாவில் பாராட்டி, விருது கொடுத்திருக்காங்க. நாங்க இதை வெறும் விருதுக்காக செய்யவில்லை. பறவைகள் தங்கள் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மரங்களை தங்களது கழிவின் மூலம உருவாக்கிச் செல்கின்றன. வனவிலங்குகளும் இந்த அற்புதப் பணியினை இடைவிடாது செய்கின்றன. தேனீக்கள் மனித குலம் வாழ அயராது அயல் மகரந்தச் சேர்க்கை செய்து, பயிர்வளத்தை உருவாக்கிச் செல்கின்றன. இப்படி, அனைத்து உயிரினங்களுமே பல்லுயிர் காக்கும் பணிகளை மட்டுமே தங்கள் வாழ்நாளில் செய்துவிட்டு போகின்றன. ஆனால், மனிதன் மட்டும் தான், பேராசை காரணமாக நம்மை வாழவைக்கும் இயற்கையை அழித்து, நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசுபடுத்தி வருகிறான்.

விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி
விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி

மனிதகுலம் இயற்கையோடு இணைந்த தற்சார்பு வாழ்வியலுக்கு இனியும் மாறவில்லை என்றால், டைனசார் போல மனித இனமும் இந்த மண்ணில் அழிந்துபோகும்/ மனித இனம் வாழ, பூமியைக் காக்கும் பசுமையாக்கும் பணியை ஒவ்வொருவரும் ஒரு தவமாக, வேள்வியாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் ஆசை. குறிப்பாக, பாலையாக மாறிகொண்டிருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் காடுகளையாவது உருவாக்கியே தீருவோம் என்ற லட்சியத்தோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அந்த இலக்கை நிச்சயம் அடைவோம்" என்றார் உறுதியான குரலில்!.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism