Published:Updated:

முதலைகளைப் பராமரிக்கும் பரிமளா, ஆமைகளின் செல்லத் தாய் சாந்தி, இக்வானாவை கொஞ்சும் பவித்ரா!

பண்ணையிலுள்ள ஆமைகளின் செல்லத் தாயாக வலம்வருகிறார் சாந்தி. அவரின் வருகைக்காகக் காத்திருந்த பெரிய ஆமைகள் நான்கும், கூண்டுக்குள் நுழைந்ததும் சாந்தியின் கால்களைச் சுற்றி வருகின்றன

காட்சி 1:

ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் நீரிலும் நிலத்திலும் நூற்றுக்கணக்கான முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு அசைவற்றுப் படுத்திருந்தன. இங்கு 15 வகையான முதலைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் கூண்டில் இறங்கி, தண்ணீரிலுள்ள முதலைகளுக்கு மீன்களைக் கொட்டிக்கொண்டிருந்தார், முதலைப் பராமரிப்பாளர்களில் சீனியரான பரிமளா.

இவருக்கும் மீனைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த முதலைகளுக்கும் இடையே வெறும் 2 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. மிகவும் சவாலான அந்தப் பணியை அநாயாசமாக பயமில்லாமல் செய்த பரிமளா, நம்மிடம் யதார்த்தமாகப் பேசுகிறார்.

ஆமைகள் பராமரிப்பு பணியில்
ஆமைகள் பராமரிப்பு பணியில்

காட்சி 2:

பண்ணையிலுள்ள ஆமைகளின் செல்லத் தாயாக வலம்வருகிறார் சாந்தி. அவரின் வருகைக்காகக் காத்திருந்த பெரிய ஆமைகள் நான்கும், கூண்டுக்குள் நுழைந்ததும் சாந்தியின் கால்களைச் சுற்றி வருகின்றன.

மூன்றடி நீளத்தில் பிரமாண்டமாக இருக்கும் அந்த ஆமைகள் `அல்டாப்ரா' வகையைச் சேர்ந்தவை. குளிப்பாட்டிவிட்டு அவற்றுக்கு உணவாகப் புளிச்சக் கீரையைக் கொடுத்துக்கொண்டே பேசுகிறார் சாந்தி.

காட்சி 3:

நான்கு அடி நீளமுள்ள பெரிய இக்வானாவுக்குச் செல்லம் கொஞ்சி உணவூட்டிக்கொண்டிருந்த பவித்ரா. ``என் பிரதான வேலையுடன், விருப்பப்பட்டு குட்டி முதலைகளுக்கு உணவூட்டும் பணியைச் செஞ்சேன். பிறகு, இக்வானா பராமரிப்பாளரானேன்" என்று தொடர்கிறார்...

- சென்னையின் அடையாளங்களில் ஒன்றான `மெட்ராஸ் முதலைப் பண்ணை', இந்தியாவில் மிகப்பெரிய முதலைப் பண்ணை என்ற சிறப்பைப் பெற்றது.

2,000 முதலைகள் தவிர, ஆமைகள், மலைப் பாம்புகள், ஓணான் இனத்தைச் சேர்ந்த இக்வானா, பல்லி இனத்தைச் சேர்ந்த கொமோடோ டிராகன் உள்ளிட்ட ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணிகள் பலவும் இந்தப் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. இவற்றைப் பராமரிக்கும் பணியில் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

முதலை பண்ணை
முதலை பண்ணை

இதுகுறித்து அறிய, சென்னையிலிருந்து நீளும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்துக்கு 15 கி.மீ முன்னதாக உள்ள நெம்மேலி அருகே அமைந்துள்ள முதலைப் பண்ணைக்கு விசிட் அடித்தோம். முழுமையான அனுபவம் இங்கே > முதலை, ஆமை, இக்வானா, டிராகன்... ``இதெல்லாமும் எங்களுக்குக் குழந்தைங்கதான்!" - இவர்கள் வித்தியாசமானவர்கள் https://bit.ly/2RAqOZ3

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு