Published:Updated:

வீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன? #DoubtOfCommonman

மரம் வளர்ப்பு
News
மரம் வளர்ப்பு

வீட்டில் செடிகள் அல்லது மரங்கள் வளர்க்கலாம் எனத் திட்டமிடும் பலருக்கும் இருக்கும் சந்தேகம், என்ன மரங்கள் வளர்க்கலாம், என்ன செடிகள் வளர்க்கலாம் என்பதுதான். அதற்கான விடை இதோ.

"வீடுகளில் வளர்க்க வேண்டிய அத்தியாவசிய மற்றும் வளர்க்க கூடாத தேவையற்ற செடிகள், தாவரங்கள் எவை?" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார், வாசகர் விக்னேஷ் தங்கச்சாமி.

'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது நல்லது' என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மரம் வளர்க்க இடம் இல்லாதவர்களின் அடுத்த சாய்ஸ் செடிகள். இந்த இரண்டையும் ஏன் வளர்க்க வேண்டும் என்ன மாதிரியான தாவரங்கள், செடிகள் வளர்க்க வேண்டும் என்பதிலும் கொஞ்சம் அலசி ஆராயத்தான் வேண்டியிருக்கிறது. ஒரே நீர், ஒரே பாதுகாப்பு முறை... ஆனால், பலன் என்பது கிடைக்க வேண்டுமல்லவா. அதற்குத்தான் பயனுள்ள தாவரங்களைத் தேர்வுசெய்து வீட்டில் நடலாம். அதற்குரிய ஆலோசனைகளை அந்தத் துறை சார்ந்த வல்லுநர்களிடமே கேட்டோம்.

#DoubtOfCommonman
#DoubtOfCommonman

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுபோன்ற உங்கள் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்!

முன்பு சந்தன மர வளர்ப்புக்குத் தடை இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கப்பட்டுவிட்டது. அதனால், வீட்டில் சந்தன மரங்களை நடலாம்.
'மரம்' ராஜசேகரன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் 'மரம்' ராஜசேகரன் பேசும்போது, "முதலில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கோடி ரூபாய் முதலீடு செய்து வீட்டைக் கட்டினாலும் தண்ணீரும் மரமும் இல்லாமல் அந்த வீடு முழுமையடையாது. வீட்டுக்கு ஆக்ஸிஜன், உண்ண பழம், வாகனம் நிறுத்த நிழல் எனப் பல வழிகளிலும் மரங்கள் உதவியாக இருக்கின்றன.

பொதுவாக வீட்டில் நாட்டு வேம்பு, புங்கன், வில்வம், மா மரம், தென்னை, வாழை எனப் பல மரங்களை வளர்க்கலாம். ஆனால், எல்லா மரங்களுக்கும் ஒரே அளவிலான தண்ணீர்தான் கொடுக்கப் போகிறோம். அதனால் பழம் கொடுக்கும் மரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பணம் கொடுக்கும் மரங்களுக்கும் கொடுக்கலாம். முன்பு, சந்தன மர வளர்ப்புக்குத் தடை இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கப்பட்டுவிட்டது. அதனால், வீட்டில் சந்தன மரங்களை நடலாம். குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து அது ஒரு முதலீடாக மாறும். உதாரணமாக சந்தன மரங்களை வீட்டில் வளர்ப்பதற்கு வனத்துறையிடமே மரக்கன்றுகள் வாங்கி நடலாம். வளர்த்து வெட்டும்போது, அவர்களை வைத்தே வெட்டி வனத்துறையிடம் கொடுத்து விற்பனை செய்யலாம். விற்பனை விலையில் அவர்களுக்கு 20 சதவிகிதம் போக, நமக்கு 80 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். இதுபோக மரச்சாமான்கள் செய்ய உதவும் மரங்களையும் வளர்க்கலாம். வளர்க்கக்கூடாத மரங்கள் என்றெல்லாம் இல்லை. பெரும்பாலும் முள் உதிரும் மரங்களை வளர்ப்பதை மக்கள் தவிர்த்துதான் வருகிறார்கள்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செடிகள் வளர்ப்பு குறித்து பேசிய வீட்டுத்தோட்ட ஆலோசகர் சுபஶ்ரீ, "வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் என்று எதுவும் இல்லை. எல்லா செடிகளையும் வளர்க்கலாம். ஆனால், அழகுக்கு செடிகள் வளர்ப்பதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நமக்கு ஆரோக்கியம் கொடுக்கும் செடிகள் பக்கம் திருப்பலாம். மூலிகைகள், கீரைகள் மற்றும் காய்கறிகள் என அதிகமாகச் செடிகளை வளர்க்கலாம். நாம் வளர்க்கும் செடி நமது உடல் நலனுக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும். நமது செடி நமக்கு பயன்படாவிட்டால், வளர்த்து என்ன செய்யப்போகிறோம்.

செடிகள்
செடிகள்

மூலிகைச் செடிகளில் ஆடாதொடை, சித்தரத்தை, துளசி, லெமன் கிராஸ், திருநீற்றுப் பச்சிலை உள்ளிட்ட பல வகையான மூலிகைகளையும், கத்திரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளையும் நடலாம். சிறிய தலைவலி, காய்ச்சல் என்பதற்கு மருத்துவமனைப் பக்கம் போகாதவாறு நம் செடிகள் தடுக்க வேண்டும். உதாரணமாகத் துளசி கஷாயம் சளியைப் போக்கும், முடக்கத்தான், பிரண்டை எலும்பை பலப்படுத்தும், திருநீற்றுப் பச்சிலை முகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தீர்வு தரும். இப்படிப் பல செடிகள் இருக்கின்றன. உணவே மருந்து எனும் வழக்கத்தில் இருந்து நாம் வந்திருக்கிறோம். அதை மனதில் வைத்து உணவுகளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் செடிகளை வளர்க்கலாம்" என்றார்.

மூலிகைத் தோட்டம் இருந்தால் எந்த மூலிகை வேண்டுமென்றாலும், இனி நீங்கள் நாட்டு மருந்து கடையைத் தேடி ஓடத் தேவையில்லை. அதனால் உங்களுக்குப் பலன் தரக்கூடிய செடிகளை நீங்களே வீட்டில் வளர்க்கலாம்.

#DoubtOfCommonman
#DoubtOfCommonman

இதுபோன்ற உங்கள் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்!