Published:Updated:

சூரிய ஒளியில் ஒளிரும் இறகுகள், துடுப்புபோல வாயைக் கொண்ட பறவைகள்! எதற்குத் தெரியுமா?

சின்ன அரிவாள் மூக்கன் பறவை ( Prabu )

ஆழம் குறைந்த நீர்நிலைப் பகுதிகள் மற்றும் கரைகளில் காலை அல்லது மாலை வேளைகளில் காணலாம். தனித்து அல்லது சிறு குழுக்களாகக் காணப்படும். துடுப்பு போன்ற அலகை துழாவியபடி ஆழம் குறைந்த நீர் நிலைகளில் இரை தேடிக்கொண்டிருக்கும்.

சூரிய ஒளியில் ஒளிரும் இறகுகள், துடுப்புபோல வாயைக் கொண்ட பறவைகள்! எதற்குத் தெரியுமா?

ஆழம் குறைந்த நீர்நிலைப் பகுதிகள் மற்றும் கரைகளில் காலை அல்லது மாலை வேளைகளில் காணலாம். தனித்து அல்லது சிறு குழுக்களாகக் காணப்படும். துடுப்பு போன்ற அலகை துழாவியபடி ஆழம் குறைந்த நீர் நிலைகளில் இரை தேடிக்கொண்டிருக்கும்.

Published:Updated:
சின்ன அரிவாள் மூக்கன் பறவை ( Prabu )

பறவை சூழ் உலகு - 12

கடந்த இரண்டு வாரங்களாக அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சார்ந்த கறுப்பு அரிவாள் மூக்கன் மற்றம் வெள்ளை அரிவாள் மூக்கன் ஆகிய பறவைகள் குறித்து பார்த்தோம். இக்குடும்பத்தில் உள்ள மேலும் இரண்டு பறவைகள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். இந்தக் குடும்பத்தில் உள்ள பறவைகள் அதன் அலகு அமைப்பின் அடிப்படையில் தனித்து தெரியும். இன்று நாம் காண உள்ள முதல் பறவை கறுப்புக் கோட்டான், கறுப்பு மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன்களைவிட உருவத்தில் சிறியதாக இருப்பதால் இதற்கு `சின்ன அரிவாள் மூக்கன்' என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் இப்பறவையை `Glossy Ibis' என்றழைப்பார்கள், இனப்பெருக்கக் காலத்தில் இப்பறவையின் இறகுகள் சூரிய ஒளியில் ஒளிரும் வண்ணத்தில் இருப்பதால் இப்பறவைக்கு ஆங்கிலத்தில் `கிளாசி ஐபிஸ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பறவையின் அறிவியல் பெயர் `பிளகாடிஸ் பால்சினெல்லஸ்' என்பதாகும்.

துடுப்பு வாயன் பறவை
துடுப்பு வாயன் பறவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெருங்கூட்டமாகக் காணப்படும். `V’ வடிவத்தில் அணியாகப் பறக்கும். நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் நெல் வயல்களில் இரை தேடும். சிறு பூச்சிகள், நண்டுகள், மெல்லுடலிகள் போன்றவற்றைச் சாப்பிடும்.

கருநிற சிறிய பறவை, மெலிந்த அலகு வளைந்திருக்கும். இனப்பெருக்கக் காலங்களில் முதுகுப் பகுதி ஒளிரும் கருநிறத்திலும் வயிற்றுப் பகுதி செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏனைய காலங்களில் தலை மற்றும் கழுத்து பழுப்பு நிறத்திலும் வெண்ணிறக் கீற்றுகளுடனும் காணப்படும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தில் சின்ன அரிவாள் மூக்கன் இனப்பறவைகள் ஆயிரக்கணக்கில் அடையும். கருக்கல் நேரத்தில் இப்பறவைகள் பெருங்கூட்டமாக வந்து மரங்களில் இறங்குவதை கிராமச் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ரசித்துக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் அச்சிறுவர்களுடன் சிறுவனாய் நானும் இணைந்துக்கொள்வேன். பறவைகளைப் பார்த்து மகிழ்வது சிறப்பு. சிறுவர்களுடன் இணைந்து பார்த்து மகிழ்வது அதைவிட சிறப்பு என்பது உண்மை.

துடுப்பு வாயன் பறவை
துடுப்பு வாயன் பறவை

அடுத்து நாம் காண உள்ள பறவை `துடுப்பு வாயன்.' இப்பறவையின் அலகு துடுப்புபோல அமைந்துள்ளதால் அதற்கு இப்பெயர் வந்தது. இப்பறவைக்கு கரண்டி வாயன் அல்லது கரண்டி மூக்கன் என்ற பெயர்களும் உள்ளன. ஆங்கிலத்தில் இப்பறவையை Eurasian Spoonbill என்றழைப்பார்கள். இப்பறவையின் அறிவியல் பெயர் பிளட்டேலியா லியூக்கோரோடியா என்பதாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆழம் குறைந்த நீர்நிலைப் பகுதிகள் மற்றும் கரைகளில் காலை அல்லது மாலை வேளைகளில் காணலாம். தனித்து அல்லது சிறு குழுக்களாகக் காணப்படும். துடுப்பு போன்ற அலகைத் துழாவிய படி ஆழம் குறைந்த நீர் நிலைகளில் இரை தேடிக் கொண்டிருக்கும். மெல்லுடலிகள், பூச்சிகள் மற்றும் தவளைகளை சாப்பிடும். சில சமயங்களில் தாவர உணவுகளையும் சாப்பிடும்.

உடல் வெள்ளை நிறம், கரு நிற அலகு அகன்று தட்டையாக துடுப்பு போன்றிருக்கும். நீண்ட கால்களைக்கொண்டிருக்கும். பருவமடைந்த பறவையின் தொண்டை சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறமாகவும், நெஞ்சு மற்றும் அலகின் நுனி மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

துடுப்பு வாயன் பறவை
துடுப்பு வாயன் பறவை

2020-ம் ஆண்டு வனத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நீர்வாழ் பறவைகளின் கணக்கெடுப்பின்போது திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அருகில் உள்ள வடக்கு கழுவூர் கிராமத்தில் உள்ள குளத்தில் துடுப்பு வாயன் பறவை நூற்றுக்கணக்கில் கூடு கட்டியிருந்ததை நான் பார்த்துள்ளேன். 2021-ம் ஆண்டு தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பின்போதும் வடக்கு கழுவூர் குளத்தில் இப்பறவைகள் காணப்பட்டன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இப்பறவைகளின் கூடுகளை நான் பார்த்தது கிடையாது. ஆனால், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இக்குளத்துக்கு பறவைகள் கணக்கெடுப்புக்குச் சென்றபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. குளத்தில் உள்ள மரங்களில் ஒரு பறவையைக்கூட பார்க்க முடியவில்லை.

கடந்த வருடங்களில் அந்த மரங்களில் நூற்றுக் கணக்கில் துடுப்பு வாயன், கூளக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்க்காகங்களின் கூடுகளைப் பார்த்துள்ளேன். அருகில் இருந்த மக்களிடம் விசாரித்தபோது பறவைகள் கூடமைக்க முற்பட்ட போது சில விஷமிகள் வெடி போட்டு துரத்திவிட்டதாகச் சொன்னார்கள். குறிப்பாக, இரவு நேரங்களில் அவர்கள் இச்செயலைச் செய்ததாகச் சொன்னார்கள். வருகின்ற காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க அரசு நிறுவனங்கள் குறிப்பாக, வனத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பறவைகள்
பறவைகள்

பறவைகள் குறித்த இந்த தொடரை உலக காட்டுயிர் தினமான 3 மார்ச் 2022 அன்று தொடங்கி தொடர்ச்சியாக 12 வாரங்கள் எழுதி உள்ளேன். இதுவரைக்கும் 26 நீர்வாழ் பறவைகள் குறித்த எனக்கு தெரிந்த செய்திகளைப் பதிவு செய்துள்ளேன். இந்த நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விகடன் நிறுவனத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தொடரில் நான் பயன்படுத்திய புகைப்படங்களைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். புகைப்படங்களைத் தந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிவாணன்
மதிவாணன்
ATREEACCC

கட்டுரைகளைப் படித்துவிட்டு கருத்துகளைத் தெரிவித்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சுற்றுச் சூழல் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி அவ்வப்போது சில கட்டுரைகளை எழுதி வந்த என்னை ஊக்கப்படுத்தி ஒரு தொடரை எழுத வைத்த பசுமை விகடன் ஆசிரியர் குழுவினருக்கு நன்றிகள் பல. மார்ச் 3 உலக காட்டுயிர் தினத்தன்று தொடங்கிய பறவைகள் குறித்த இந்தப் பயணம் சர்வதேச உயிரிபல்வகைமை தினத்துக்குப் (22 மே) பிறகு முடிவடைகிறது. நன்றி

- முற்றும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism