Published:Updated:

`வருஷம் தவறாமல் வரும் இருவாச்சிகள்; அவற்றுக்காகவே காய்க்கும் மரம்!’ -நெகிழும் காட்டுயிர் ஆர்வலர்

horn bill
News
horn bill

வருஷம் தவறாமல் இங்கு வந்து செல்லும் இந்த இருவாச்சிகளின் பாதுகாப்பிற்கு வனத்துறையே உறுதி செய்ய வேண்டும். மேலும், இவை விரும்பி உண்ணும் பழ மரங்களை அதிக அளவில் உண்டாக்குவதும் அவசியம்.

தனது அழகு மிகுந்த அலகால் இருவாச்சி என காரணப்பெயர் பெற்ற இந்தப் பறவையினங்களில் மலை இருவாச்சியே (great Indian hornbill) அளவில் மிகப்பெரியவை.

horbill
horbill

ஏறக்குறைய 50 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்த இருவாச்சிகள், 4 அடி நீளமும் சிறகு விரித்த நிலையில் 5 அடி அகலமும் கொண்டவை. சுமார் 4 கிலோ வரை எடை இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சங்க இலக்கியம் முதல் பசுமை இலக்கியம் வரை நீங்காமல் இடம் பெற்றிருக்கும் இந்தப் பெரும் பறவையினத்தின் பூர்வீகம் தமிழ்நாடு என சொல்லப்படுகிறது. கேரளாவின் மாநிலப் பறவையாக உள்ள இருவாச்சிகள், எண்ணிக்கையில் வேகமாகக் குறைந்துவருவதாக ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

hornbill
hornbill

இணைபிரியா காதலுக்கும், பேரன்டல் கேர் எனப்படும் குஞ்சுகளைப் பராமரிப்பதிலும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் இந்த இருவாச்சிகளின் வசீகரிக்கும் தோற்றமும் வண்ணங்கள் நிறைந்த இறகுகளுமே பேராபத்தாய் மாறி, பெருமளவு வேட்டையாடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது இந்தப் பறவைகளுக்கு, வேட்டை பெரும் அச்சுறுத்தலாக இல்லாமல் இருந்தாலும் வாழிட அழிப்பு என்பது அசுர வேகத்தில் நடைபெறுவதாக ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

forest
forest

நீலகிரியில் இருவாச்சிகளின் தற்போதைய நிலைகுறித்து நம்மிடம் பகிர்ந்த 'கூடுகள்' அமைப்பின் நிறுவனர், காட்டுயிர் ஆர்வலர் சிவதாஸ், ``நீலகிரியைப் பொறுத்தவரை மிதவெப்பமான மலைச்சரிவு பகுதிகளில் முன்னர் அதிக அளவு மலை இருவாச்சிகள் காணப்பட்டுள்ளன. தற்போது கோத்தகிரி, குன்னூர், கல்லட்டி சரிவுப் பகுதிகளில் மிக அரிதாகவே காணமுடிகிறது.

மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட இந்தப் பறவைகள் அறிவுக்கூர்மை மிக்கவை. இதன் வாழிடப் பகுதிகளில் சிறிய அச்சுறுத்தல் ஏற்பட்டாலும்கூட, அந்தப் பகுதியைவிட்டு வெளியேறும். பாதுகாப்பை உறுதிசெய்யவே மிக உயரமான மரங்களைத் தேர்வுசெய்யும். அதேசமயம், இவற்றின் இனப்பெருக்க காலம் மிக முக்கியமான ஒன்று. ஆண் இருவாச்சிக்கே இங்கு பொறுப்புகள் அதிகம்.

hornbill
hornbill

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த இருவாச்சிகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வது நம் அனைவரின் கடமை. வளர்ச்சி என்ற பெயரில் நாம் சிதைக்கும் வன வளங்களை ஒருபோதும் மீட்க முடியாது. அதிரிக்கும் கட்டுமானம், காடழிப்பு பருவநிலை மாற்றம் போன்றவை இவற்றைப் பாதிக்கிறது.

குன்னூர் மலைச்சரிவுப் பகுதியில் உள்ள ஒற்றைப் பழ மரத்தைத் தேடி ஆண்டு தவறாமல் இந்த சீசனில் சில இருவாச்சிகள் வந்து செல்கின்றன. ஃபைகஸ் வகை பழங்களை விரும்பி உண்ணும் இவைகளுக்காகவே அந்த மரம் ஆண்டுதோறும் தவறாமல் காய்க்கிறதோ எனத் தோன்றும் அளவிற்கு கொத்துக் கொத்தாகக் காய்க்கும். அவைகளும் மறவாமல் வந்து பசியாறிச் செல்கின்றன.

horn bill
horn bill

புகைப்படம் எடுப்போர், வாகனப் போக்குவரத்து என தொந்தரவுகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. வருடம் தவறாமல் வந்துசெல்லும் இந்த இருவாச்சிகளின் பாதுகாப்பிற்கு வனத்துறையே உறுதி செய்ய வேண்டும். மேலும், இவை விரும்பி உண்ணும் பழ மரங்களை அதிக அளவில் உண்டாக்குவதும் அவசியம்," என ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்.