Published:Updated:

கோயிலில் உள்ள அத்தனை கடவுள்களின் உருவங்களும் எகிப்து பிரமிடில்... | எகிப்தும் தமிழ்நாடும் 2

எகிப்து பிரமிடு

நம் கோபுரங்கள் பிரமிடைப் போன்று இல்லாமல் சற்று மாறுபட்ட வடிவிலுள்ளது. ஆனால் கோபுரங்களின் உள்ளே சிலைகள் இல்லை. மாறாகக் கோயிலில் தான் உள்ளது. கோபுரத்தின் வெளிப்புறத்தில் நிறையச் சிலைகளும் இங்கே உண்டு. அங்கே மொத்த சிலைகளும் பிரமிடின் உள்ளே தான் அனைத்தும் உள்ளது.

கோயிலில் உள்ள அத்தனை கடவுள்களின் உருவங்களும் எகிப்து பிரமிடில்... | எகிப்தும் தமிழ்நாடும் 2

நம் கோபுரங்கள் பிரமிடைப் போன்று இல்லாமல் சற்று மாறுபட்ட வடிவிலுள்ளது. ஆனால் கோபுரங்களின் உள்ளே சிலைகள் இல்லை. மாறாகக் கோயிலில் தான் உள்ளது. கோபுரத்தின் வெளிப்புறத்தில் நிறையச் சிலைகளும் இங்கே உண்டு. அங்கே மொத்த சிலைகளும் பிரமிடின் உள்ளே தான் அனைத்தும் உள்ளது.

Published:Updated:
எகிப்து பிரமிடு

கடந்த கட்டுரையில் எகிப்துக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள சடங்கு, சமய நம்பிக்கைகள் மற்றும் வழிபடும் தெய்வ நம்பிக்கைகளில் உள்ள ஒற்றுமைகளை பார்த்தோம், மேலும் தொடர்ந்து இந்த கட்டுரையிலும் விரிவாகக் காண்போம்.

ஸ்பின்ஸ் (sphinx) என்பது மனிதமுகம் கொண்ட சிங்கத்தின் சிலை. இது கிரேக்கத்தில் பெண் முகத்துடனும், எகிப்தில் ஆண் முகத்துடனும் அமைந்துள்ளது. இந்தவகை சிலை அமைப்புக்கள் நம் கோயில்களிலும் அதிகம் காணப்படுகின்றன. எகிப்து மற்றும் கிரேக்கத்தில் உள்ளதை விட நம்மூரில் உள்ள ஸ்பின்ஸ்-கள் தத்ரூபமாக உள்ளது.

நெல்லையப்பர் திருக்கோயில்
நெல்லையப்பர் திருக்கோயில்

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலிலும் ஸ்பின்ஸ்- சை ஒத்த ஒரு சிற்பத்தைப் பார்த்தேன். சிதம்பரத்தில் உள்ள நடராசர் கோயிலில் ஒரு பெண் முகம் கொண்ட சிங்கத்தின் சிலையையும், ஓர் எகிப்தில் உள்ளச் சிலையுடன் இத்துடன் இணைத்துள்ளேன். இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணலாம். ஆக நம் கோயிலில் இருக்கும் அத்தனை கடவுள்களின் உருவங்களும் அங்கே பிரமிடில் உள்ளது.

நம் கோபுரங்கள் பிரமிடைப் போன்று இல்லாமல் சற்று மாறுபட்ட வடிவிலுள்ளது. ஆனால் கோபுரங்களின் உள்ளே சிலைகள் இல்லை. மாறாகக் கோயிலில் தான் உள்ளது. கோபுரத்தின் வெளிப்புறத்தில் நிறையச் சிலைகளும் இங்கே உண்டு. அங்கே மொத்த சிலைகளும் பிரமிடின் உள்ளேதான் அனைத்தும் உள்ளது. பிரமிடின் வெளி அமைப்பில் சிலைகள் இல்லை. ஒரு வேளை வெளியில் உள்ள சிலைகள் அழிந்து போயிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எகிப்தியக் கடவுளான இசிசின் (Isis) கோயிலும் கேரளாவில் கொச்சி அருகே உள்ளக் குரும்பலா தேவி (கண்ணகி) கோயிலும் ஒரே மாதிரி காணப்பட்டவை என்றும்;. இசிஸ் மற்றும் நம் சிலப்பதிகார கண்ணகியின் கதைகள் ஒரே மாதிரியாக உள்ளதாகவும்; ஒரே காலத்தில் இந்தக் கோயில்களில் விழா எடுக்கப்படுவதாகவும் கிறிஸ் மார்கன் (Chris Morgan) கூறுகின்றனர்.

கிறிஸ் மார்கன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வட ஆப்பிரிக்க, ஆசியக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் பட்டப்படிப்பு முடித்தவர். மேலும் இந்திய - எகிப்தியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் அதீத ஆவல் கொண்டவர். "இசிஸ்: எகிப்திய மற்றும் இந்தியக் கடவுள்" (Isis: Goddess of Egypt & India) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

Isis: Goddess of Egypt & India -  Chris Morgan  | Book
Isis: Goddess of Egypt & India - Chris Morgan | Book

மேலும் எகிப்தில் தமிழ் எழுத்துகள் பொரிக்கப்பட்ட பல பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் தமிழகத்தை பண்டைய எகிப்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறையக் கண்டுபிடிப்புக்கள் சாத்தியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

சுவாமிநாதன் சந்தானம் நாகப்பட்டினம் அருகேயுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். பல மொழிகள் அறிந்தவர், மூத்த பத்திரிகையாளர். இவர் பண்டைய எகிப்து மற்றும் இந்தியக் கலாச்சார ஒற்றுமைகளை நிறையச் சேகரித்து வைத்திருக்கிறார்.

மேற்கத்திய அறிஞர்கள் எகிப்தியக் கடவுள்களுக்கு இந்தியக் கடவுள்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் நிறையக் கண்டறிந்ததாகக் கூறுகின்றனர். அவற்றை பார்ப்போம்...

1.பண்டைய எகிப்தியர்கள் அனைத்து உயிரினங்களும் சூரியக் கடவுள் ராவின் கண்ணீரிலிருந்து தோன்றியதாக நம்பினர். அனைத்து உயிரினங்களும் பிரஜாபதியின் (Prajapati) கண்ணீரிலிருந்து வந்தவை என்று இந்துக்கள் நம்புகிறனர்.

2. பிரம்மாவைப் போல ஹோரஸ் (Horus) தாமரை இதழில் பிறந்தவர். இந்து மற்றும் எகிப்தியக் கோவில்களின் கட்டிடக்கலையில் தாமரைமலர் ஒரு பொதுவான அம்சமாகும்.

3. பண்டைய எகிப்தில் ஏழு சாதிகள் இருந்தன. பண்டைய இந்தியாவில் நான்கு சாதிகள் இருந்தன.

4. யூசிபியஸ் மற்றும் சின்செல்லஸின் (Eusebius மற்றும் Syncellus) கூற்றுப்படி, சிந்து நதியைச் சேர்ந்த சிலர் அமெனோபிஸின் (Amenophis) ஆட்சியில் எகிப்தின் சுற்றுப்புறத்தில் குடியேறினர். பின்னர் பல எகிப்தியர்கள் பிற நாடுகளில் குடியேறி இந்தியா வரை சென்றனர்.

5. இந்துக்கள் மற்றும் எகிப்தியர்கள் இருவரும் ஒரே அளவான நாட்களை வாரங்களாகப் பிரித்தனர், மேலும் அவர்கள் ஒவ்வொரு நாட்களையும் ஒரே கிரகங்களின் பெயரால் வகைப்படுத்தினர்.

கிரகங்கள்
கிரகங்கள்

அதாவது, ஞாயிறு - சூரியன், திங்கள் என்றால் சந்திரன் இப்படி.. வரிசையாக ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இவை அனைத்தும் கிரகங்களின் பெயர்களே !இப்படித்தான் பண்டைய எகிப்திலும் நாட்கள் அழைக்கப்பட்டது.

6. இருவரும் மனிதர்களின் ஆன்மாக்களை நம்பினர், மேலும் இறந்த பிறகு மற்ற உடல்களுக்குச் செல்வதாக நம்பினர்.

7. பல மதக் கருத்துக்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் இரு நாடுகளுக்கும் பொதுவானவை. பண்டைய எகிப்தியர்கள் இவ்வுலகம் ஒரு முட்டையின் உருவத்தில் உள்ளதாகவும், இது Kneph என்ற இராட்சசப் பாம்பின் வாயிலிருந்து வந்தது எனவும் நம்பினர். இது இந்துக்களின் நம்பிக்கையை ஒத்துள்ளதாக உள்ளது.

கோயிலில் உள்ள அத்தனை கடவுள்களின் உருவங்களும் எகிப்து பிரமிடில்... | எகிப்தும் தமிழ்நாடும் 2

8.பண்டைய எகிப்தியர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் கிரகணத்தைப் பற்றி ஒரே மாதிரியான நம்பிக்கை இருந்தது. அதாவது பெரிய பாம்புகள் (ராகுவும் கேதுவும்) சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதாக இந்தியர்கள் நம்பினர் மற்றும் பண்டைய எகிப்தியர்கள் அதை டைஃபோன் (Typhon) என்ற பெரிய பாம்பு என்று சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதாக நம்பினார்கள்.

9. சில பண்டிகைகளில் எகிப்தியர்கள் ஊர்வலத்தில் கடவுள்களின் வாரிசுகளின் உருவங்களை எடுத்துச் சென்றனர். நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு வண்டியில் அவர்களில் ஒன்றை வரைந்ததாகவும், அதையே இந்துக்கள் செய்ததாகவும் ஹெரோடோடஸ் (Herodotus) கூறுகிறார். எகிப்தியர்கள் மற்ற விலங்குகளைவிட மாடுகளை மிகவும் மரியாதையுடன் வைத்திருந்தனர். காளைகளையும் கொண்டாடினர்.

10. இதில் ரா-தான் சிவனை ஒத்த கடவுள் என நான் நம்புகிறேன். ஆனால் சிவனை எகிப்தில் உசிரிஸ் என்றும், கிரீஸில் பச்சஸ் (Bacchus) என்றும் போற்றப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. . டியோடோரஸ் (Diodorus), இந்தியாவைக் கைப்பற்றிய பிறகு கிரேக்கத் தெய்வம் தனது வெற்றியில் த்ரியம்பஸ் (Thriambus) என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார் (திரியாம்கா என்பது சிவபெருமானின் பெயர்களில் ஒன்றாகும்)

எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட நகைகள் உலகில் பல அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை சுமார் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான அழகு நகைகள். இதனை இணையதள மூலமாகப் பார்க்க ஒருவாய்ப்பு கிடைத்தது. அந்த நகைகள் ஒவ்வொன்றும் அப்படி ஒரு கொள்ளை அழகு..

உலக மக்களின் எகிப்து மேல் உள்ளச் சுற்றுலா கவர்ச்சிக்குக் காரணம் அங்குள்ள பழமையான பிரமிடுகளும் இந்த நகைகள் போன்ற வரலாற்றுப் பொக்கிசங்கள் மட்டும்தான் காரணம் வேரொன்றுமில்லை. இதனால் எகிப்து சுற்றுலா வளர்ச்சியில் ஒரு தலைசிறந்த நாடாகத் திகழ்கிறது. சுற்றுலாவிற்காக உலகமெங்கும் உள்ள மக்கள் கூட்டம் எகிப்தை வட்டமிடுகின்றது.

எகிப்து
எகிப்து

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் மாணிக்கக்கல் ஒன்றைப் பார்த்தேன். அந்தக் கல் அடர்சிவப்பு நிறத்தில் இருந்தது. ஒரு நகையில் தொங்கட்டத்தில் இந்தப் பெரிய மாணிக்கம் பதிக்கப்பட்டிருந்தது. மாணிக்கக்கல் வைரத்தைவிடவும் விலை மதிப்பு மிக்கது!கண்ணிமைக்காமல் பார்த்தேன், இரசித்தேன்.

அது மாதிரி உள்ளங்கை அளவில் உள்ள மரகதம் பதித்த நகையைப் பார்த்தேன், மெய்மறந்தேன். பல வகையான நகைகள் அங்கு இருந்தது. இவை என்னை மயக்கியது என்பது உண்மை. மரகதம் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது. இது மாதிரி இன்னும் எட்டுக் கோவில்கள் பெருங்குளம் கிராமத்தைச் சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளன.

இவற்றை நவதிருப்பதியென அழைக்கப்படுகிறது. அதில் ஒன்றான தென்திருப்பதியில் கொள்ளை முயற்சியும் நடந்தது. இந்தஒன்பது கோயில்களில் எல்லாம் நகைகள் அதிகம். அந்தக் கோயில் நகைகளின் வடிவமைப்பின் அழகிலும் மற்றும் விலை மதிப்பிலும் எகிப்தில் உள்ள பண்டைய அழகு நகைகளுக்குச் சவால் விடுத்தாக இருந்தது. எகிப்து அருங்காட்சியகத்தில் நகைகளின் மதிப்பை அதன் பழமைதான் முடிவு செய்கிறது. நம் கோயிலில் சராசரியாக 800 ஆண்டுகளிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு உட்பட்டது. ஆனால் அதில் உள்ள நகைகளும் 1000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதானென முடிவு கட்டிட முடியாது...