Published:Updated:

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம்... சேலத்தில் மலர்ந்த அதிசய காட்சி!

இரவின் இளவரசி பிரம்ம கமலம் பூ

`இரவின் இளவரசி' என்று அழைக்கப்படும் பிரம்ம கமலம் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பூ. இமாலய பிரதேசங்களில் பரவலாகக் காணப்படும் இந்த பிரம்ம கமல செடி பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது.

`இரவின் இளவரசி' என்று அழைக்கப்படும் பிரம்ம கமலம் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பூ. இந்த பிரம்ம கமலம் இரவில் மட்டுமே பூக்கும், விடியற்காலையில் வாடிவிடும்.

இமாலய மலைப் பிரதேசங்களில் பரவலாகக் காணப்படும் இந்த பிரம்ம கமல செடி கற்றாழை வகையை சேர்ந்தது. இந்த தாவரம் தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம்... சேலத்தில் மலர்ந்த அதிசய காட்சி!

இந்த பிரம்ம கமலம் பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கல்லீரலில் ஏற்படும் தீங்கு விளைவுகளைக் குறைக்கவும், பாலியல் சம்பந்தமான ஆரோக்கியத்தை பேணி காக்கவும், காய்ச்சலுக்கு சிகிச்சை தரவும், காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தவும், நரம்புக் கோளாறுகளைக் குணப்படுத்தவும், மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்யவும், தோல் பிரச்னைகளை சரி செய்யவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் இந்த பிரம்ம கமலம் பூ பயன்படுத்தப்படுகிறது.

இது கள்ளி இனத்தைச் சேர்ந்ததால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இந்தப் பூ `இமாலய மலர்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது.

பிரம்ம கமலம்
பிரம்ம கமலம்

இப்படிப்பட்ட ஒரு அரிதான மற்றும் பல மருத்துவ பயன்களை கொண்ட இந்த மலர், சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் கணேசன் என்பவரின் வீட்டில் இரவு 11.40 மணிக்கு பூத்திருக்கிறது. இந்த அரிய நிகழ்வைப் பற்றி அவரிடம் கேட்டபோது,

``இமாலய மலைப் பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படும் இந்தச் செடி, மிகவும் அதிகமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இந்தச் செடியை எந்த எண்ணமும் இல்லாமல் பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி எங்கள் மாடித்தோட்டத்தில் வைத்தோம். சரியாக ஒன்றரை மாதத்தில் பிரம்ம கமலம் எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் பூத்தது. இந்தக் காட்சியைப் பார்த்ததும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் அலாதியான ஆனந்தம். மிகவும் அரிய வகை பூ நம் வீட்டில் பூத்து இருக்கிறது என வீட்டிலுள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்" என்றார்.

- நெ.ராதிகா,

மாணவப் பத்திரிகையாளர்.