Published:Updated:

`சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்க பெரும் பணக்காரர்களே காரணம்' - ஆக்ஸ்பேம் அறிக்கை!

காற்று மாசு

உலகம் முழுவதும் 125 கோடீஸ்வரர்கள் செய்துள்ள முதலீடுகள், ஆண்டுக்கு 39 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக உள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைவிட நிஜத்தில் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்!

`சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்க பெரும் பணக்காரர்களே காரணம்' - ஆக்ஸ்பேம் அறிக்கை!

உலகம் முழுவதும் 125 கோடீஸ்வரர்கள் செய்துள்ள முதலீடுகள், ஆண்டுக்கு 39 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக உள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைவிட நிஜத்தில் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்!

Published:Updated:
காற்று மாசு

உலக பணக்காரர்களில் குறிப்பிட்ட 125 கோடீஸ்வரர்களால் மட்டும் வருடத்துக்கு 3 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இது ஒரு சராசரி மனிதன் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவைவிட மில்லியன் மடங்கு அதிகமாகும்.

காற்று மாசு
காற்று மாசு

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் உலக நாடுகளை ஒன்றிணைத்து சர்வதேச மாநாட்டை நடத்தி வருகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான 27-வது மாநாடு எகிப்தில் தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்வது பற்றிப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். காற்று மாசு, வெப்பநிலை அதிகரிப்பு, ஆபத்தான வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பது போன்றவை பற்றி உலக நாடுகளின் தலைவர்கள் இணைந்து ஆலோசிக்க உள்ளனர்.

மாநாட்டில், அரசு சாரா நிறுவனமான ஆக்ஸ்பேம், ``கார்பன் பில்லியனர்கள்: உலகின் பணக்காரர்களின் முதலீட்டு உமிழ்வுகள்" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், `உலகம் முழுவதும் 125 கோடீஸ்வரர்கள் செய்துள்ள முதலீடுகள், ஆண்டுக்கு 39 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக உள்ளது.

காற்று மாசு
காற்று மாசு

குறிப்பிட்ட அந்த 125 கோடீஸ்வரர்களும் 2.4 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு 183 நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளனர். 183 நிறுவனங்களும் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. மேலே குறிப்பிட்ட 125 நிறுவனங்கள், மற்ற சாதாரண சிறு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதைவிட அதிக அளவு கரியமில வாயுவை வெளியேற்றும் சிமென்ட் ஆலைகள், புதை வடிவ எரிபொருள்கள் எடுக்கும் நிறுவனங்களின் பங்குகளை பெறுவதிலே அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

125 நிறுவனங்கள் மற்றும் அதன் பங்கு நிறுவனங்களும் தோராயமாக 392 மில்லியன் டன் கரியமில வாயுவை ஆண்டுக்கு வெளியேற்றுகிறது. 392 மில்லியன் டன் என்பது பிரான்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றத்துக்கு சமம் ஆகும். அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைவிட நிஜத்தில் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு ஆக்ஸ்பேம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் `நாம் வெளியிடும் கரியமில வாயுவை 2050-க்குள் சமன் செய்ய வேண்டும் என்றால் 1.6 பில்லியன் ஹெக்டர் அளவுக்கு புதிய காடுகளை உருவாக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. 1.6 பில்லியன் ஹெக்டர் என்பது இந்தியாவைப் போல் ஐந்து மடங்கு அதிகமான நிலப்பரப்பாகும்.

அமிதாப் பெஹர்
அமிதாப் பெஹர்

ஆக்ஸ்பேம் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமிதாப் பெஹர் இது குறித்து பேசுகையில், ``காலநிலை மாற்றம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சில கொள்கைகளை இயற்றும்போது இது போன்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசிப்பதில்லை. சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இத்தகைய நிறுவனங்களுக்கும் உண்டு. பெரும் நிறுவனங்கள் தாங்கள் செய்யும் செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியாமல் செயல்படுகின்றனர். எந்த நாட்டின் அரசும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டு கொள்வதில்லை. காலநிலை மாற்றம் வளரும் நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். அதனால் இது போன்ற நிறுவனங் களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். அதில் கிடைக்கும் வருவாயை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பயன்படுத்தலாம்" என்று கூறியுள்ளார்.