Published:Updated:

சுள்ளிக்கொம்பன் யானை ஸ்ரீனிவாஸ் கும்கியாக மாறியது எப்படி? - ஒரு பரபர கதை!

Kumki
Kumki ( Arun.K )

ஊர் முழுவதும் இந்த யானை பற்றிய பேச்சு தீரவேயில்லை. சேரம்பாடி மேங்கோரேஞ்சு பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினர். ஒரே சமயத்தில் ஒரே யானையை பல இடங்களில் பார்த்ததாக வதந்திகள் பரவின. இது மக்களை மேலும் பீதியடையச் செய்தது.

நாட்டில் யானை மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் கூடலூர் மிக முக்கிய பகுதியாக உள்ளது. வன வளம் மிகுந்த இந்தப் பகுதிகள்தான் யானை, புலி உள்ளிட்ட விலங்குகளின் கடைசிப் புகலிடமாக உள்ளது. மூன்று மாநிலங்களை இணைக்கும் இந்தப் பகுதியில் உள்ள மழைக்காடுகள்தான் காட்டுயிர்களின் கடைசி நம்பிக்கை. வளர்ச்சி என்ற பெயரில் வனங்கள் துண்டாடப்படுவதால் நிலத்தின் பேருயிரான யானைகள் போக்கிடம் தெரியாமல் அலைமோதுகின்றன. இதனால் எதிர் கொள்ளல்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

Kumki
Kumki
70 வனத்துறை ஊழியர்கள், 2 கும்கிகள்... அரிசி ராஜா யானை பிடிக்கப்பட்ட திக்திக் நிமிடங்கள்! #PhotoAlbum

கூடலூரில் கடந்த 2016-ம் ஆண்டு பதற்றத்துடனேயே தொடங்கியது. அதற்கு முந்தைய ஆண்டு இறுதியில்தான் கண்ணம்பள்ளி பகுதியில் யானை தாக்கி 3 பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி தொடக்கத்திலும் மெக்கானிக் ஒருவர் யானை தாக்கி இறந்தார். கூடலூர், பந்தலூர் பகுதிகளைப் பொறுத்தவரை யானை தாக்குதல் சம்பவங்கள் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு யானை மீது அச்சம் பரவியது. டீக்கடை முதல் தேயிலை தோட்டம் வரை இந்த ஒற்றை யானையைப் பற்றியே பேச்சு. அந்த யானை மனிதர்களைக் கண்டாலே விரட்டியக்கும். தேடிப்பிடித்து கொல்லும் எனப் பேசிக்கொண்டனர். அந்த ஒரே யானைதான் 8க்கும் மேற்பட்டோரைக் கொன்றதாக மக்கள் நம்பினர்.

ஊர் முழுவதும் இந்த யானை பற்றிய பேச்சு தீரவேயில்லை. சேரம்பாடி மேங்கோரேஞ்சு பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினர். ஒரே சமயத்தில் ஒரே யானையை பல இடங்களில் பார்த்ததாக வதந்திகள் பரவின. இது மக்களை மேலும் பீதியடையச் செய்தது. இப்படியே நாள்கள் ஓடின. 2016, ஏப்ரல் மாத தொடக்கத்தில் கண்ணன், குரு ஆகிய இருவரையும் ஒரே நாளில் மிதித்துக் கொன்றது. மக்கள் போராட்டத்தில் குதித்தனர். உடலை வாங்க மறுத்து நடுரோட்டில் பலமணிநேரம் போராடினர். மக்களின் போராட்டத்தால் யானையைப் பிடிக்க வனத்துறை முடிவு செய்தது. மக்களிடம் இந்த யானை குறித்து விசாரித்த வனத்துறையினர், அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் இதுவரை யானைகள் குறித்து சொல்லப்படாத நம்பமுடியாத விஷயங்களை மக்கள் தெரிவித்தனர்.

Kumki
Kumki

இவர்கள் சொல்லும்படி மனிதர்களை கண்டால் விரட்டியடிக்க புதர் மறைவில் ஒளிந்திருந்து அருகில் வரும் வரை காத்திருந்து தூக்கி போட்டு கீழே மிதிக்கிற இந்த யானையைத் தேடிக் கண்டறிவது பெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறான அடையாளங்களைச் சொல்லி வந்த நிலையில், ஓர் அடையாளம் மட்டும் ஒத்துப் போனது. அதுதான் இந்த யானையின் தந்த அமைப்பு. சிறிய தந்தத்தை உடைய இந்த யானையை 'சுள்ளிக்கொம்பன்' என அழைத்தனர்.

ஒருவழியாக இடைவிடாத தேடலில் இந்த யானை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 4-ம் தேதி யானையைப் பிடிக்க முடிவு செய்து சேரங்கோடு மேங்கோ ரேஞ்ச் பகுதியில் இரண்டு யானைகளுடன் சேர்ந்து மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த சுள்ளிக் கொம்பனைப் பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தனர். வன கால்நடை மருத்துவர்கள் மனோகரன் மற்றும் விஜயராகவன் இரண்டு பேரையும் வரவழைத்து அப்போதைய புலிகள் காப்பக கள இயக்குநராக இருந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி, அப்போதைய கூடலூர் வனப் பாதுகாவலர் தேஜஸ்வி ஆகியோர் தலைமையில் யானையைப் பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Kumki
Kumki

முதலில் கால்நடை மருத்துவர்களான மனோகரன் மற்றும் விஜயராகவன் இருவரும் மயக்கமருந்து லோட் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் களமிறங்கினர். மதிய வேலையில் மேங்கோரேஞ்சு அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் மற்ற யானைகளுடன் மேய்ச்சலில் இருந்த சுள்ளிக்கொம்பனின் அருகில் சென்ற மருத்துவர்கள் ஆபத்தான சரிவுப் பகுதியில் மேய்ச்சலில் இருந்ததால் மயக்க ஊசி செலுத்தினால் பயத்தில் மிரண்டு ஓடும். அப்படி ஓடும்போது கீழே விழுந்தால் ஆபத்தாய் முடியும் என்று மயக்க ஊசி செலுத்தாமல் திரும்பினர். தொடர்ந்து கண்காணித்து மாலை 5 மணியளவில் கால்நடை மருத்துவர் மனோகரன் மயக்க ஊசியைச் செலுத்த அருகில் இருந்த மற்ற இரண்டு காட்டு யானைகள் விலகின.

சிறிதுநேரத்தில் அரை மயக்கத்தில் இருந்த சுள்ளிக்கொம்பனை உதயன், பொம்மன், சுஜய் இந்த 3 கும்கிளும் சுற்றி வளைக்க மயக்கம் தெளிந்து ஆக்ரோஷமானது. உடனே சுதாரித்த மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தினார். சிறிது நேரத்தில் அமைதியான சுள்ளிக்கொம்பனின் காலில் கயிறு, சங்கிலிகளை பாகன் பன்டன் மற்றும் மாறன் இருவரும் பிணைத்தனர். பல மணி நேரம் போராடி காட்டில் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் கும்கிகளின் உதவியுடன் இழுத்துவந்து நள்ளிரவில் வாகனத்தில் ஏற்றி முதுமலை தொப்பக்காடு முகாமுக்கு இரவு 2 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.

`மனுஷன் குச்சி வச்சி நடக்குற மாதிரி தான் இந்தர் யானை நடக்கும்...!' - கும்கி உருவாகும் கதை

இரவு முழுக்க வாகனத்திலேயே சுள்ளிக் கொம்பனை வைத்தனர். காலை 6 மணிக்கெல்லாம் வாகனத்தைப் புரட்டிப்போடும் அளவுக்கு அசைத்து பிளிறியது. மீண்டும் மருத்துவர் மனோகரன் மயக்க ஊசி செலுத்தி கும்கி மற்றும் பாகன்களின் உதவியுடன் 'க்ரால்' எனப்படும் மரக்கூண்டில் அடைத்தனர். அங்கும் உணவு உட்கொள்ளாமல் முரண்டு பிடித்தது. க்ராலில் அடைக்கப்பட்ட சுள்ளிக்கொம்பன் அருகில் சென்ற மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுள்ளிக்கொம்பனின் தும்பிக்கையில் சுருக்குக் கம்பியில் சிக்கிய காயம் இருந்தது. அதே சமயம் யானையின் இடது கண்ணில் ஏதோ காயம் ஏற்பட்டு கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. காயத்துக்கும் கண் பார்வைக்கும் சிகிச்சையைத் தொடங்கினர்.

இடது கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தனது இடது பக்கத்தில் சிறு அசைவு இருந்தால்கூட அச்ச உணர்வில் தாக்கமுற்படும். இதுவே மனிதர்களைத் தாக்க காரணமாக இருந்திருக்கலாம். மேலும் இதன் தும்பிக்கையிலும் காயம் ஏற்பட்டிருந்தது. இதுவே யானையின் நடத்தையில் மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Kumki
Kumki
`திருடப்பட்ட யானை தந்தம்; கசிந்த தகவல்!’ - 2 ஆண்டுகளுக்குப் பின் வனத்துறையிடம் சிக்கிய கும்பல்

மூன்று மாதம் க்ரால், பின்னர் கும்கி பயிற்சி தொடர் சிகிச்சை என இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீனிவாஸ் கும்கியாக மாறியது. தற்போது பாகனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மனிதர்களிடம் நட்பு பாராட்டி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு