Published:Updated:

`ஏர்போர்ட்டில் சந்தேகித்தனர்; அன்று தொடங்கிய வைராக்கியம்!'- ஊட்டி மணி பகிரும் `ஜோல்னா பை' கதை

இவரின் சமீபத்திய செயல்தான் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நாம் இழந்த பல விஷயங்களில் ஒன்று ஜோல்னா பை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஊட்டி மணியை அந்தப்பகுதியில் எல்லோருக்கும் தெரியும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி மலைகிராமம்தான் இவரின் சொந்த ஊர். பெற்றோர் கூலித்தொழிலாளிகள். பொலிட்டிக்கல் சயின்ஸ் முதுகலை முடித்ததும் முழுநேர நடிகரானார்.

ஊட்டி மணி
ஊட்டி மணி

இவரின் சமீபத்திய செயல்தான் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஃபேஷன் என்று சொல்லி நாம் இழந்தவற்றில் ஒன்று ஜோல்னா பை. ஆனால், அதை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தான் செல்லும் இடங்களுக்கு எடுத்துச்சென்று பலருக்கும் கொடுக்கிறார். விலையை ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். அவரிடம் பேசினேன்.

``2017-ல், அசாமில் தியேட்டர் ஃபெஸ்டிவல் நடந்தது. அந்த ஃபெஸ்டிவல் செல்ல திரிபுரா சென்று, அங்கிருந்து அசாம் செல்ல விமானநிலையம் சென்றேன். ஜோல்னா பையுடன் உள்ளே சென்ற என்னைத் தடுத்து நிறுத்தி, சுமார் அரை மணிநேரமாக விசாரணை செய்தனர்.

ஊட்டி மணி
ஊட்டி மணி

ஜோல்னா பையை அணிந்திருப்பதால் அவர்களுக்கு என் மேல் சந்தேகம். பையை வாங்கி சோதிக்க, அதில் புத்தகங்கள்தான் இருந்தன. இந்தப் பை அணிந்திருப்பதில் என்ன தவறு? ஏன் இப்படிச் சந்தேகத்துடன் சோதனை செய்கிறார்கள்? போன்ற கேள்விகள் தோன்றின. அதனால், இம்மாதிரியான ஜோல்னா பைகளை எல்லாத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தோடு களம் இறங்கினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயக்குநர் ராம் சாரிடம் என் விருப்பத்தைத் தெரிவிக்க, மகிழ்ச்சியோடு முதல் ஜோல்னா பையை வாங்கிக்கொண்டார். தற்போது வரை 7,200 பைகளை மக்களிடம்கொண்டு சேர்த்துள்ளேன். இதற்கு சமூக வலைதளங்கள் பெரும் உதவியாக உள்ளது. அதிலும், குறிப்பாக ஃபேஸ்புக்கில் பதிவிடுவது மூலம் பலரும் தொடர்புகொண்டு பைகளைக் கேட்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும் நிறைய ஆடர்கள் வருகின்றன. அவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

இயக்குநர் ராமுடன்
இயக்குநர் ராமுடன்

`நாளை இந்த இடத்திற்கு வருவேன் பைகள் தேவைப்படுவோர் இங்கே வரலாம்' என முதல்நாளே முகநூலில் பதிவிடுவேன். ஒரு பையை, 200 ரூபாய்க்கு விற்றால்தான் கட்டுப்படியாகும். ஆனால், எளிய மனிதர்களைப் பார்த்தால் கொடுக்கும் பணத்திற்கு பையைக் கொடுத்துவிடுவேன். நாட்டின் பல பகுதிகளிலிருந்து எனக்குப் பணம் வரவேண்டி உள்ளது. 'கூரியர் அனுப்புங்கள் பணம் தருகிறேன் என போனில் சொல்வர்கள்' பின்னர் பணமும் வந்து சேராது. இருந்தும் நண்பர்கள் உதவியால் சமாளிக்க முடிகிறது.

சுற்றுச்சூலை நாசமாக்கும் பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடுகையில் ஜோல்னாவுக்கு நிகர் எதுவும் இல்லை. முன்பு, இயல்பாகப் பயன்படுத்தப்பட்ட சூழல் மாற ஜோல்னா பைகள் தமிழாசிரியர்களின் அடையாளமாக சினிமாக்கள் சித்திரித்ததும் ஒரு காரணம்.

ஜோல்னா பைகள்
ஜோல்னா பைகள்

தற்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. எல்லா வண்ணங்களிலும் கிடைக்கிறது. இந்தப் பை நாடுமுழுக்க மொழி தெரியாத நண்பர்கள் பலரைக் கொடுத்துள்ளது. குறைந்தது ஒரு லட்சம் பேரிடமாவது இந்த ஜோல்னாவைக் கொண்டு சேர்ப்பதே என் கனவு" என்கிறார் ஊட்டி மணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு