Published:Updated:

`மரங்களில் ஆணி அடிப்பது பற்றி புகார் கொடுத்தால் ₹5,000 பரிசு!' - தேனி தன்னார்வலர் குழு புது முயற்சி

மரங்களில் விளம்பரம்

தேனி மாவட்ட தன்னார்வக் குழுவினர், பனை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவது, பராமரிப்பது மட்டுமின்றி மரங்களில் விளம்பர பதாகைகளுக்காக அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்றி வருகின்றனர். மரங்களில் ஆணி அடிக்கக் கூடாது எனத் தொடர்ச்சியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

`மரங்களில் ஆணி அடிப்பது பற்றி புகார் கொடுத்தால் ₹5,000 பரிசு!' - தேனி தன்னார்வலர் குழு புது முயற்சி

தேனி மாவட்ட தன்னார்வக் குழுவினர், பனை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவது, பராமரிப்பது மட்டுமின்றி மரங்களில் விளம்பர பதாகைகளுக்காக அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்றி வருகின்றனர். மரங்களில் ஆணி அடிக்கக் கூடாது எனத் தொடர்ச்சியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

Published:Updated:
மரங்களில் விளம்பரம்

தேனி மாவட்டத்தில் ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் தன்னார்வக் குழுவினர், பனை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவது, பராமரிப்பது மட்டுமின்றி மரங்களில் விளம்பர பதாகைகளுக்காக அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்றி வருகின்றனர். மேலும் மரங்களில் ஆணி அடித்து விளம்பரங்கள் செய்யக் கூடாது எனத் தொடர்ச்சியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மரங்களில் ஆணி அடித்தல்
மரங்களில் ஆணி அடித்தல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள பல மரங்களில் தொடர்ச்சியாக ஆணி அடித்து விளம்பரங்கள் வைக்கப்படுவதால் மரங்கள் பட்டுப்போகின்றன. இதனைத் தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வித்தியாசமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தால், அவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், புகார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தால் புகார்தாரருக்கு 5,000 ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரிசுத்தொகை அறிவிப்பு
பரிசுத்தொகை அறிவிப்பு

இதுகுறித்து தன்னார்வலர் குழுவினரிடம் பேசினோம். ``மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நோக்கத்தில் மட்டுமே இந்த பரிசுத் தொகையை அறிவித்துள்ளோம். ஒரு நபர் எத்தனை காவல் நிலையங்களிலும் புகார் செய்யலாம். முதல் புகார் கொடுத்து மனு ஏற்புச் சான்றிதழ் பெற்றவுடன் பரிசுத் தொகை ரொக்கமாக வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கும் போது, 2-வது புகாருக்கான பரிசை தன்னார்வலர் குழு முடிவு செய்து அளிக்கும். புகார் மீதான வழக்கு பதிவு செய்யப்பட்டால் பரிசுத் தொகை 5,000 ரூபாய் வழங்கப்படும். புகார் கொடுக்கும் மனிதநேயர்கள் புகார் நகல், மனு ஏற்புச் சான்று நகல் அல்லது வழக்கு பதிவு விவரங்களை thenivolunteers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே காலகட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்தால் முதல் 10 நபர்களுக்கு ரொக்கப்பரிசு, மற்றவர்கள அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும். காவல் துறையோ, வருவாய் துறையோ எந்தத் துறையாக இருந்தாலும் புகார் மீது தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடித்தவர்கள் மீது வழக்கு அல்லது அபராதம் போட்டால் பரிசுத் தொகை 5,000 ரூபாய் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.

மரங்களில் விளம்பரம்
மரங்களில் விளம்பரம்

மாவட்ட நிர்வாகம் தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தால் தன்னார்வலர்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்து அப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், விளையாட்டு மைதானம் பராமரித்தல் போன்ற பணிகளை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு தன்னார்வலர்கள் குழு சார்பில் மேற்கொள்ளப்படும்'' என்றனர் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism