Published:Updated:

கடல்நீர் இப்படித்தான் குடிநீராகிறது! - சென்னை ஆலையில் ஸ்பாட் விசிட் #VikatanPhotoStory

LOGESHWARI
தே.அசோக்குமார்

சென்னையில் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் செயல்பட்டு வருகிறது. அதில் நெம்மேலியில் செயல்படும் ஆலையில் கடல்நீர் எப்படிச் சுத்திகரிக்கப்படுகிறது என்பதை புகைப்படங்களில் பார்ப்போம்.

நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம்
நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம்

நெம்மேலியில் தினமும் 265 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சுத்திகரிப்பு நிலையம்
சுத்திகரிப்பு நிலையம்

முதல்கட்டமாகக் கடல்நீர், இன்டேக் சேம்பருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்குதான் முதற்கட்ட சுத்திகரிப்பு நடக்கிறது.

இன்டேக் சேம்பர்
இன்டேக் சேம்பர்

கடல்நீரில் டி.டி.எஸ் மற்றும் டி.எஸ்.எஸ் உப்புகள் இருக்கும். அதில் முதலில் டி.எஸ்.எஸ் உப்பு தனியாகப் பிரிக்கப்படும். இது லாமெல்லா புராசஸ்.

லாமெல்லா புராசஸ்
லாமெல்லா புராசஸ்

அடுத்ததாகப் புறவடிகட்டுதல் முறையில் கடல்நீரில் இருக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன.

புறவடிகட்டுதல்  முறை
புறவடிகட்டுதல் முறை

இதற்கடுத்து, தலைகீழ் சவ்வூடுபரவல் அமைப்பு மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, நீரிலுள்ள டி.டி.எஸ் உப்பு நீக்கப்படுகிறது.

Reverse Osmosis Process
Reverse Osmosis Process

ஆலையில் ஒட்டுமொத்தமாகக் கடல்நீர் சுத்திகரிப்பு சிக்கலின்றி நடைபெறுவதற்காக, 24 மணிநேரமும் செயல்பாடுகள் கணினி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

Control Room
Control Room

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் மினரல்கள் இருக்காது. அதனால், குடிநீருக்குத் தேவையான மினரல்கள் இங்கு சேர்க்கப்படுகின்றன.

Minerals adding section
Minerals adding section

கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு, குடிக்க உகந்ததா எனப் பரிசோதிக்கப்படும். அதன் பிறகே அடுத்தகட்ட செய்முறைக்கு அனுப்பப்படும்.

Testing
Testing

கடல்நீர் முழுவதுமாகக் குடிநீராக மாற்றப்பட்டு, நெம்மேலியிலிருந்து தென்சென்னைக்குத் தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர்க் குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது.

outlet
outlet

சுத்திகரிக்கப்பட்ட நீர் போக மீதமுள்ள 165 மில்லியன் லிட்டர் கடல்நீர், மீண்டும் கடலுக்குள் அனுப்பப்படுகிறது. இதுதான் இறுதிக்கட்டம்.

நெம்மேலி
நெம்மேலி

கடல் நீர் சுத்திகரிப்பு முறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் விவரிக்கும் ஃப்ளோசார்ட்

Flowchart
Flowchart