Published:Updated:

சென்னையில் கடல் மின்னியதும் நுரையாகப் பொங்கியதும் ஏன்? - பெரும் பாதிப்பின் அறிகுறியா?

கடற்கரையில் பொங்கிய நுரை
கடற்கரையில் பொங்கிய நுரை ( படம்: சீனிவாசலு / விகடன் )

உலகம் முழுவதும் மாசு காரணமாகப் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துவருகிறது. சில இடங்களில் அதிக மழை, சில இடங்களில் காட்டுத்தீ என அதன் பாதிப்புகள் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன.

சில மாதங்களுக்கு முன், சென்னைக் கடற்கரையில் அலைகள் எழும்பும்போது நீல நிறத்தில் மின்னியதைப் பார்த்தோம். அதற்கு காரணம், கடலில் மிதக்கும் பாசிகள் என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தற்போது, சென்னை கடற்கரையில் நுரையாக அலைகள் பொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். இவை இரண்டிற்கும் ஏதாவது தொடர்புள்ளதா... கடல் மாசடைந்துகொண்டிருப்பதன் அடையாளம்தான் இந்தச் செயற்பாடுகளா?

மீன்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதற்குப் பிறகு சில நாள்களுக்கு பிடிக்கப்படும் மீன்களும் நல்ல தரத்தில் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், சென்னை கடற்கரையில் நுரை வடிவிலான படலம் கரையோரம் காணப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டினப்பாக்கம் கடற்கரையில், நுரைப் படலம் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை பரவியிருந்தது. ராயப்பேட்டை பகுதிகளிலும் நுரை அதிக அளவில் ஒதுங்கியிருந்தது. சில மாதங்களுக்கு முன்னர்கூட, இரவில் கடலின் வண்ணம் மாறிக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு, கடலில் ஏற்பட்ட மாசுதான் காரணம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு முன்னர் 2012 மட்டும் 2017 ஆகிய ஆண்டுகளிலும் இதுபோல கடலில் திடீரென நுரை ஏற்பட்டுக் கரை ஒதுங்கியது. தற்போது ஏற்பட்டுள்ள நுரை குறித்து வல்லுநர்கள் கூறுகையில், ``இது அடையாரில் உள்ள ரசாயன ஆலையிலிருந்துவரும் கழிவுநீர் கடலில் கலந்துள்ளதால் ஏற்பட்டிருக்கக் கூடும். இதனால் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்புள்ளன" என்றனர்.

'சென்னையில், நீல நிறத்தில் மிளிர்ந்த கடல் அலைகள்!' - காரணம் என்ன தெரியுமா?

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகள், கடல் தண்ணீரின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தனர். இதற்கு மற்றுமொரு காரணமாக, சென்னையில் இரண்டு நாள்களாகப் பெய்த கனமழை கூறப்படுகிறது. ரசாயனக் கழிவுகள் கடலில் கலந்தாலும் அவை அடி ஆழத்திற்குள் சென்றுவிடும். இதனால் நுரை எல்லாம் தண்ணீரோடு வெளியே வந்துவிட்டன எனக் கடலியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடல் நுரை
கடல் நுரை

மழைக்காலத்தில்தான் இந்த மாதிரியான நுரை ஒதுங்குவது சென்னையில் முன்னர் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டும் அதேபோல் மழைக் காலம் முடியும் வரை இம்மாதிரியான நுரை ஏற்படும் என்ற கருத்தும் நிலவிவருகிறது. இதனால் மீன்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதற்குப் பிறகு சில நாள்கள் பிடிக்கப்படும் மீன்களும் நல்ல தரத்தில் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இப்படி பல கருத்துகள் பரவிவரும் நேரத்தில், துறை சார்ந்த வல்லுநரும் சதுப்புநில ஆய்வாளருமான டாக்டர் இளங்கோவனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், ``இது சில மாதங்களுக்கு முன்னர் இரவில் ஏற்பட்ட பாசிகள் மலர்ந்து மின்னிய நிகழ்வின் பாதிப்பாக இருக்கக்கூடும். பாசிகள் இறந்த பின் கடலின் ஆழத்திற்குச் சென்று ஒதுங்கி விடும். பின்னர், இது மழைகாலத்தில் அலைகள் அதிகமாகும் காரணத்தால் வெளிவரும். அப்படி வரும்போது, பாசிகள் உடைந்து அதில் இருக்கும் திரவம் கடலின் கரையில் கரை ஒதுங்கும்.

தற்போது, உலகம் முழுவதும் மாசு காரணமாகப் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துவருகிறது. சில இடங்களில் அதிக மழை, சில இடங்களில் காட்டுத்தீ என அதன் பாதிப்புகள் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன.

இது, எண்ணெய் தண்ணீரில் கலந்தால் எப்படி நுரையாய் மாறி மிதக்கிறதோ அதைப் போன்றதே. கடலில் ஏற்படும் அதிக அலைகளால் இவை மேலே வந்து தண்ணீரில் நுரையாய்ப் படிந்து விடுகின்றன. இதற்கு மற்றுமொரு காரணமாக நமது அடையார் மற்றும் கூவம் நதியாகவும் இருக்கலாம். இவை இரண்டிலும் ஆற்றின் கழிமுகப் பகுதி (barmouth) மூடியே இருக்கும். மழைக்காலங்களில் அதிக தண்ணீரால் இதன் வாய்ப் பகுதி திறந்து காணப்படும். அப்போது, அதிலிருக்கும் ஆர்கானிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் தண்ணீரோடு வந்து கடலில் கலந்துவிடும். தற்போது, மழைக் காலம் என்பதால், கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். அதனால், இவ்வாறு சேர்ந்த கழிவுகள் எல்லாம் தண்ணீரோடு கலந்து நுரையாக மாறி கரையில் ஒதுங்கிவிடும். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஒன்றும் ஏற்படாது.

இந்த மாதிரி ஒரு நிகழ்வு, சென்னை கடல் பகுதியில் மட்டுமே காணப்படும். நம்மிடையே தண்ணீரை முழுவதும் சுத்தப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் இல்லை. எனவே, இது சுற்றுச்சூழல் மாசு அதிகமாக அதிகமாக ஒவ்வோர் ஆண்டும் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்போது கடலில் ஏற்பட்டுள்ள நுரை எந்த விதத்திலும் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்காது. எனவே, மக்கள் எந்த விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை" என்றார்.

கடல் நுரை
கடல் நுரை

தற்போது, உலகம் முழுவதும் மாசு காரணமாகப் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துவருகிறது. சில இடங்களில் அதிக மழை, சில இடங்களில் காட்டுத்தீ என அதன் பாதிப்புகள் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன. கடல் நமது வாழ்வியல் ஆதாரத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். கடலில் மாசு ஏற்படாமல் பாதுகாத்தால் மட்டுமே இதுமாதிரியான நிகழ்வுகள் ஏற்படாமல் நம்மால் தவிர்க்க இயலும்.

அடுத்த கட்டுரைக்கு