Published:Updated:

மறுசுழற்சிப் பயன்பாட்டில் அசத்தும் குடியிருப்பு!

கழிவுநீர் மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
News
கழிவுநீர் மேலாண்மை

275 வீடுகள்... தினமும் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர்!

கழிவுநீர் மேலாண்மை

வீடு, தொழிற்சாலை, அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் மழைநீரைச் சேமிக்கும் முறைகள், தண்ணீரைச் சுத்திகரிக்கும் முறைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தும் முறைகள் போன்றவை குறித்து இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த இதழில் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் சாலையில் உள்ள ‘பிளாசா பிரிஸ்டைன் ஏக்கர்ஸ்’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல் படுத்தப்பட்டு வரும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு முறை குறித்துப் பார்ப்போம்.

கழிவுநீர் சேகரிப்பு
கழிவுநீர் சேகரிப்பு

சுமார் 275 வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் ‘பிளாசா பிரிஸ்டைன் ஏக்கர்ஸ்’ அடுக்குமாடிக் குடியிருப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தோட்ட பராமரிப்பிற்கும், கழிப்பறை மற்றும் பிற சுத்தம் செய்யும் பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதுபற்றி அடுக்குமாடிக் குடியிருப்பின் தலைவர் பழனி குமரேசனிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுத்திகரிக்கும் அமைப்புகள்
சுத்திகரிக்கும் அமைப்புகள்

“தண்ணீர்த்தேவையைச் சமாளிப்பதற்காகத் தான், மறுசுழற்சி செய்யும் முடிவுக்கே வந்தோம். சுத்திகரிப்பு பற்றிய தகவல்களைத் தேடினோம். நீர் மேலாண்மை நிபுணர்களிடம் பேசினோம். எஸ்.டி.பி (Sewage Treatment Plants), போர் என அடிப்படை விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம். 2017-ம் ஆண்டு எஸ்.டி.பி திட்டத்தைத் தொடங்கினோம். முறையாகச் செயல்பாட்டுக்கு வர ஒரு வருடம் ஆனது. இப்போது தினமும் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. குடியிருப்பவர்களின் பார்வைக்காகச் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீரை, பாட்டிலில் அடைத்துத் தினமும் மூன்றுமுறை கண்ணாடிப்பெட்டியில் வைத்துக் காட்சிப்படுத்துகிறோம்.

பழனி குமரேசன், ராஜராஜன்
பழனி குமரேசன், ராஜராஜன்

மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பணிக்குத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இந்தக் குடியிருப்பைச் சுற்றிலும் இருக்கும் மரங்கள், செடி, கொடிகள் மற்றும் மூலிகைகள் இவ்வளவு பசுமையாக இருக்க இந்தத் தண்ணீர்தான் காரணம். தினமும் சுழற்சியாக நடைபெற்று வருவதால் தண்ணீர்த் தட்டுப்பாடு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இல்லை. 24 மணி நேரமும் தண்ணீர் வழங்குகிறோம். அதற்காகத் தனியாக எந்தவிதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. இங்கு குடியிருப்பவர்களும் தண்ணீரைச் சிக்கனமாகவே பயன்படுத்துகிறார்கள். மழைநீரைச் சேமிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
குடியிருப்பைச் சுற்றி சுத்திகரிக்கப்பட்ட நீரில் வளரும் மரங்கள்
குடியிருப்பைச் சுற்றி சுத்திகரிக்கப்பட்ட நீரில் வளரும் மரங்கள்

தொடர்ந்து எஸ்.டி.பி செயல்படும் முறைபற்றி விளக்கினார் குடியிருப்பின் செயலாளர் ராஜராஜன், “எல்லா அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தண்ணீர் வீணாகிக்கொண்டிருப்பதைப் போலத்தான் இங்கும் தண்ணீர் வீணாகிக்கொண்டிருந்தது. நிலத்தடி நீரையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் எஸ்.டி.பி திட்டம் பற்றித் தெரிந்துகொண்டு அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தோம். ஆரம்பத்தில் நிறைய பிரச்னைகள் இருந்தன. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் போதுதான் பல விஷயங்கள் புரிந்தன. தொழில்நுட்ப ரீதியிலும் கவனிக்கத் தொடங்கினோம். முதலில் குளோரினை மட்டும் அதிகமாகப் பயன்படுத்தினோம். அதனால், தண்ணீர் வெள்ளையாக மாறிவிட்டது. ஆனால், அது சரியான மறுசுழற்சி இல்லை என்பதைத் தெரிந்துகொண்டோம். இப்போது தேவைக்கு மட்டுமே குளோரினைப் பயன்படுத்துகிறோம். முடிந்தவரையிலும் இயற்கை முறையிலேயே சுத்திகரிக்க முயற்சிசெய்கிறோம்.

சுத்திகரிக்கப்பட்ட நீரில் பராமரிக்கப்படும் பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட நீர்
சுத்திகரிக்கப்பட்ட நீரில் பராமரிக்கப்படும் பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட நீர்

அனைத்து வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர், சேமிப்புத் தொட்டிக்கு வந்துசேர்கிறது. அதிலிருந்து கசடுகள் பிரித்தெடுக்கப் பட்டு வெறும் தண்ணீர் மட்டும் இன்னொரு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அந்தத் தண்ணீர் சிலமணி நேரம் காற்றோட்டம் செய்யப்பட்டு, கார்பன் வடிகட்டிக்கு வருகிறது. அங்கு சுத்திகரிப்பு முடிந்த பிறகு, வடிகட்டும் தொட்டிக்குப் போகிறது. அங்குதான் குளோரின் கலக்கப்படுகிறது. எல்லாச் செயல்முறைகளும் முடிந்த பிறகு கடைசி தொட்டிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கிருந்து யூ.வி வழியாகத் தண்ணீர்த்தொட்டிகளுக்குப் போகிறது. நீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டுப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தண்ணீரைப் பாட்டிலில் அடைத்துத் மூன்றுமுறை கண்ணாடிப்பெட்டியில் வைத்துக் காட்சிப்படுத்துகிறோம். ‘சிறந்த முறையில் பராமரிப்பு செய்கிறீர்கள்’ என்று பாராட்டிச் சான்றிதழும் வழங்கியிருக்கிறார்கள்.

தரைக்குக் கீழிருக்கும் ஒவ்வொரு தொட்டியையும் கழிவு சேரும் அளவைப் பொறுத்து பதினைந்து நாள், ஒரு மாதம் மற்றும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை என சுத்தம் செய்து விடுகிறோம். சுத்திகரிப்பில் இந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதுதான் முக்கியமான வேலை. அதேபோல எம்.எல்.எஸ் பாக்டீரியாவின் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் அடிக்கடி கவனிக்க வேண்டும். அப்போதுதான் மறுசுழற்சி முறை சரியாக நடக்கிறதா என்பது தெரியும்.

பல குடியிருப்புகளில் மறுசுழற்சி செய்யப் பட்ட நீரைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். ஆனால், இங்கு தைரியமாகப் பயன்படுத்தி வருகிறோம். வரும் காலங்களில் இன்னும் நவீன வசதியுடன் சுத்திகரிப்பைச் செய்ய முயற்சி செய்துவருகிறோம்.

‘‘இப்போது தேவைக்கு மட்டுமே குளோரினைப் பயன்படுத்துகிறோம். முடிந்த வரையிலும் இயற்கை முறையிலேயே சுத்திகரிக்க முயற்சி செய்கிறோம்.’’

பயன்படுத்தும் நீர் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதிலும் சுத்தத்திலும் தெளிவாக இருக்கிறோம். குளோரின், மாட்டுச் சாணம், கூலி மற்றும் இதர சில தேவைகள் சேர்ந்து மாதம் சுமார் 80,000 ரூபாய் இதற்குச் செலவாகிறது. சுற்றுச்சூழல் துறை அலுவலர்கள் வந்து பார்த்து, ‘சிறந்த முறையில் பராமரிப்பு செய்கிறீர்கள்’ என்று பாராட்டிச் சான்றிதழும் வழங்கியிருக்கிறார்கள்’’ என்றார்.

தொடர்புக்கு, ராஜராஜன், செல்போன்: 99529 95959 கார்த்திகேயன், செல்போன்: 98407 09864

கார்த்திகேயன் ராமதாஸ்
கார்த்திகேயன் ராமதாஸ்

“கூடுதல் தண்ணீர் கிடைக்குது!”

குடியிருப்பில் வசித்துவரும் கார்த்திகேயன் ராமதாஸ், “சுத்தமான தண்ணீர் மற்றும் சுற்றுப்புறம் அனைவருக்கும் அடிப்படைத் தேவை. நிறைய அடுக்குமாடிக் குடியிருப்புகள்ல குடியிருந்திருக்கேன். பல இடங்கள்ல எஸ்.டி.பி பிளான்ட் இருந்தது. மாதத்துக்கு ஒருமுறை எங்காவது பிரச்னை வந்துகிட்டே இருக்கும். அந்த நீரைப் பயன்படுத்தும்போதே உடல்ல பல பிரச்னைகளைச் சந்திக்கும் நிலையிருந்தது. ஆனா, இங்கே முறையாகப் பராமரிச்சு, சுத்திகரிக்கிறாங்க. மிகவும் தூய்மையான தண்ணீர் மறுசுழற்சி முறையில கிடைக்குது. சுற்றுப்புறத்தோட எல்லா தேவைகளுக்கும் இந்தத் தண்ணீரையே பயன்படுத்துறோம். சில சமயங்கள்ல கூடுதலாவே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்குது. கட்டணமும் இதற்கென வசூலிக்கப்படுறதில்லை” என்றார்.

ஸ்ரீனிவாசன்
ஸ்ரீனிவாசன்

கழிவுநீரைப் பிரித்து அனுப்பினால் கூடுதல் பலன்

பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச் சங்கத்தின் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குழு தலைவர் எஸ்.ஸ்ரீனிவாசன், “சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கழிவுநீரகற்றும் கால்வாய்கள் கிடையாது. அது மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமே உள்ளது.

அதனால், குடியிருப்புகள்ல அமைக்கப்படும் இதுபோன்ற எஸ்.டி.பி முறை நல்ல பலன் கொடுக்குது. இந்த முறையில் கழிவுநீரை முழுமையாக சுத்திகரிக்க முடியுது. அதைத் திரும்பவும் பயன்படுத்தவும் முடியுது. சமையலறை, கழிப்பறை, குளியலறை கழிவுநீரைத் தனித்தனியாகப் பிரித்து அனுப்பி சுத்திகரித்தால் இதன் பலன் இன்னும் அதிகரிக்கும். கழிவுநீரும் முழுமையாகச் சுத்திகரிக்கப்படும்” என்றார்.