Published:Updated:

தண்ணீர்ப் பஞ்சமே பார்த்திடாத தமிழகக் கிராமம்... காரணம் என்ன?

தண்ணீர் ஊற்று ( யஷ்வந்த் )

இந்த அருவிக்குப் பக்கத்திலே ஓர் அதிசய ஊற்று இருக்கிறது. வருடம் முழுவதும் இந்த ஊற்றிலிருந்து நீர் வற்றாமல் வந்து கொண்டேயிருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா?

தண்ணீர்ப் பஞ்சமே பார்த்திடாத தமிழகக் கிராமம்... காரணம் என்ன?

இந்த அருவிக்குப் பக்கத்திலே ஓர் அதிசய ஊற்று இருக்கிறது. வருடம் முழுவதும் இந்த ஊற்றிலிருந்து நீர் வற்றாமல் வந்து கொண்டேயிருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா?

Published:Updated:
தண்ணீர் ஊற்று ( யஷ்வந்த் )

தமிழகம் முழுவதும் தண்ணீருக்காக அலைந்துகொண்டிருக்கிறது. ஆங்காங்கே பெய்திருக்கும் சிறுமழை அதைக் குறைத்திருந்தாலும் இன்னும் முழுமையாகப் பிரச்னை தீரவில்லை. எவ்வளவு வறட்சி வந்தாலும், மழை பொய்த்தாலும் நல்ல குடிநீர், சுத்தமான மற்றும் ஆரோக்கியமான குடிநீர் வந்து கொண்டேயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இல்லையா? அப்படியும் சில ஆசீர்வதிக்கப்பட்ட கிராமங்கள் இந்த மண்ணில் உண்டு. அப்படியொரு கிராமம்தான் அமிர்தி வனம்.

இந்த அருவிக்குப் பக்கத்திலே ஓர் அதிசய ஊற்று இருக்கிறது. வருடம் முழுவதும் இந்த ஊற்றிலிருந்து நீர் வற்றாமல் வந்து கொண்டேயிருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா?

வேலூர் மாவட்டத்தில் இருக்கிறது பிரசித்தி பெற்ற ஜவ்வாதுமலைத் தொடர். அத்தொடரில் உள்ள சுற்றுலாத்தலம்தான் அமிர்தி வனம். இந்த வனத்தில் பகுதியளவு வனவிலங்கு சரணாலயமாகவும் மறு பாதி சுற்றுலாத் தலமாகவும் பிரித்துப் பராமரிக்கப்படுகிறது. இங்கு ஓர் அருவி இருக்கிறது. இந்த அருவியில் பருவமழைக் காலங்களில் மட்டுமே நீர் வீழ்ச்சி இருக்கும். மற்ற காலங்களில் நீர் குறைவாகவும் வற்றியுமே காட்சியளிக்கும். இந்த அருவிக்குப் பக்கத்திலே ஓர் அதிசய ஊற்று இருக்கிறது. வருடம் முழுவதும் இந்த ஊற்றிலிருந்து நீர் வற்றாமல் வந்து கொண்டேயிருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? இதைக் கேள்விப்பட்டு நாமும் பாதி நம்பிக்கையுடன் அந்த ஊற்றைத் தேடிப் புறப்பட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மற்ற காடுகள் போல சிரமமான இடமில்லை அமிர்தி வனம். எளிதில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். மொத்தமே சுமார் 150 குடும்பங்கள் மட்டும் வசிக்கும் அழகான கிராமம் அது. அவர்களிடம் ஊற்றைப் பற்றிக் கேட்டதும் வழிகாட்டினார்கள். இயற்கை எழிலுடன், செடிகளுக்கு மத்தியில் இருக்கிறது அந்த ஊற்று. அந்த நீரை எடுத்துக் குடித்துப் பார்த்தோம். ஊற்றுநீர் குடிப்பதற்கு குளிர்ச்சியுடன் சுவை மிக்கதாக இருந்தது. சுவையான நீர் மட்டுமல்ல; அதில் மூலிகையும் கலந்திருப்பதாகச் சொன்னார் ஊர் பெரியவர் ஒருவர். முடிந்தவரை அந்த நீரை அருந்தினோம். கொண்டு வந்திருந்த கண்ணாடி பாட்டில்களிலும் கொஞ்சம் பிடித்துக் கொண்டோம்.

அந்த நீரை எடுத்துக் குடித்துப் பார்த்தோம்.  ஊற்றுநீர்  குடிப்பதற்கு குளிர்ச்சியுடன் சுவை மிக்கதாக இருந்தது. சுவையான நீர் மட்டுமல்ல; அதில் மூலிகையும் கலந்திருப்பதாகச் சொன்னார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

பின்னர், அங்கிருந்த சிலரிடம் பேசினோம். அவர்கள், "எங்களுக்குத் தேவையான நீரை ஊற்றிலிருந்து எடுத்துக்கிறோம். மண் திட்டுலதான் இந்த ஊத்து இருக்கு. மண் திட்டுங்குறதால புடிக்க சிரமமா இருக்கும். அதனால மேடா ஒரு அமைப்பு வைச்சு ஒரு சின்ன பைப் மூலமா குடங்களில் புடிச்சிக்கிறோம். இப்ப ரொம்ப வசதியா இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஊத்து இருக்கிறதால குடி தண்ணீர் பிரச்னை பெருசா எதுவும் எங்க ஊருக்கு இல்ல. ஊற்றுநீரும் ரொம்ப சுத்தமானதா மூலிகை தன்மையுடையதாக இருக்கிறதால உடம்புக்கு எந்தப் பிரச்னையும் வருவதில்ல. தேவைப்படும்போது மட்டும் புடிச்சு குடிச்சுப்போம். இந்தப் பகுதில இருக்கும் எல்லோருமே மக்கள் இந்தத் தண்ணியதான் குடிக்கிறாங்க. இந்த ஊத்து எங்க இருந்து வருதுன்னு எங்களுக்குத் தெரில, ஆனா வருடம் முழுக்க தண்ணி குறையாம வந்து கொண்டேதான் இருக்குது. நாங்க பயன்படுத்துறது போக உபரி நீரெல்லாம் ஆற்றில சேர்ந்திடும்"என்றனர்.

ஊற்று
ஊற்று
வ. யஷ்வந்த்

சுற்றி காடிருப்பதாலும் அந்தப் பகுதி மக்களின் தண்ணீர்த் தேவை குறைவு என்பதாலும் இந்த ஊற்று வற்றவில்லை. சென்னை போன்ற மாநகரத்தின் தேவைக்கு இது போல எத்தனை ஊற்று தேவையோ எனக் கணக்கிட்டோம். தண்ணீர் வற்றவில்லை என்பதைவிட அந்தத் தண்ணீரின் சுவை எங்களுக்குப் பிடித்திருந்தது. எத்தனையோ பழச்சாறு, குளிர்பானங்கள், இளநீர் எல்லாம் குடித்தபோது தீராத தாகம் அந்த தண்ணீரால் தீர்ந்தது என்பதுதான் உண்மை. இயற்கை இது போல நமக்குத் தந்த எத்தனை அதிசயங்களை நாம் வீணடித்திருக்கிறோமோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism