Published:Updated:

பனையோலைப் பெட்டியில் பிரியாணி பார்சல்; பிளாஸ்டிக்குக்கு மாற்றாகத் தூத்துக்குடியில் புதுமுயற்சி!

பனை ஓலைப் பெட்டியில் பிரியாணி பார்சல் செய்யும் மகேந்திரன்.

தூத்துக்குடியில் பிரியாணியை பனை ஓலைப் பெட்டிகளில் பார்சல் கட்டி விற்பனை செய்து வருகிறார் மகேந்திரன். பாலித்தின் பயன்பாட்டுக்கு மாற்றாக மேற்கொண்ட புது முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

பனையோலைப் பெட்டியில் பிரியாணி பார்சல்; பிளாஸ்டிக்குக்கு மாற்றாகத் தூத்துக்குடியில் புதுமுயற்சி!

தூத்துக்குடியில் பிரியாணியை பனை ஓலைப் பெட்டிகளில் பார்சல் கட்டி விற்பனை செய்து வருகிறார் மகேந்திரன். பாலித்தின் பயன்பாட்டுக்கு மாற்றாக மேற்கொண்ட புது முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Published:Updated:
பனை ஓலைப் பெட்டியில் பிரியாணி பார்சல் செய்யும் மகேந்திரன்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். டிப்ளோமா ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துள்ள இவர், வெளிநாடுகளில் ஹோட்டல்களில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊரான விளாத்திகுளத்தில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். பாலித்தின் தாள், பாலித்தின் பை, பிளாஸ்டிக் டப்பாவுக்கு மாற்றாகப் பனையோலைப் பெட்டிக்குள் வாழை இலையை சிறியதாக மடக்கி வைத்து அதில் பிரியாணியை நிரப்பி பனையோலையை மூடி விற்பனை செய்து வருகிறார். ஒருவர் சாப்பிடும் பிரியாணி முதல் 10 பேர் சாப்பிடும் பக்கெட் பிரியாணி வரை அந்தந்த அளவுகளிலான பனையோலைப் பெட்டிகளில் பார்சல் போட்டுக் கொடுக்கிறார்.

பனையோலைப் பெட்டியில் பிரியாணி பார்சல்
பனையோலைப் பெட்டியில் பிரியாணி பார்சல்

இவருடைய கடை, தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ஈ.சி.ஆர் சாலையில் இருப்பதால் வெளியூர்க்காரர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பிரியாணியை வாங்கிச் செல்கின்றனர். கடையில் பிரியாணி பார்சல் செய்துகொண்டிருந்த மகேந்திரனிடம் பேசியபோது, ``நெகிழி ஒழிப்பு குறித்து தமிழக அரசு மீண்டும் `மஞ்சள்பை’ திட்டத்தைத் தொடங்கியிருக்கு. என்னோட கடைக்கு பிரியாணி வாங்க வர்றவங்களை துணிப்பையை எடுத்துக்கிட்டு வரச்சொல்லி அறிவுறுத்தியிருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நெகிழிப் பயன்பாட்டுல எனக்கு விருப்பம் இல்ல. ஆடு, மாடுகள் மேய்ச்சல்ல இரை எடுக்கும்போது சாக்லேட்கவர், பால் கவர், ஷாம்பு கவர்னு சின்னச் சின்ன நெகிழிப் பேப்பர்களை தெரியாமல் இரையுடன் சேர்த்து விழுங்கி செரிமானம் ஆகாம இறந்து போகுது. இது, கிராமப்பகுதிங்கிறதுனால இந்த மாதிரி நிறைய தடவ நடந்திருக்கு. அதே நெகிழி, எத்தனை வருஷம் ஆனாலும் மண்ணுல மட்காது. நெகிழியில மைக்ரான் குறைஞ்ச நெகிழியைப் பயன்படுத்தினாலும் நெகிழி நெகிழிதான்.

பனையோலைப் பெட்டியில் பிரியாணி பார்சல்
பனையோலைப் பெட்டியில் பிரியாணி பார்சல்

அதனால பிரியாணியை வாழை இலையில போட்டு மடக்கி, நியூஸ் பேப்பர் சுத்திதான் பார்சல் போட்டு ஆரம்பத்துல விற்பனை செஞ்சுகிட்டு வந்தேன். அதே நேரத்துல விளாத்திக்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல வீட்டுக்கு வீடு பெண்கள் பனை ஓலையால பெட்டி முடைவாங்க. நெகிழிப் பயன்பாட்டால பனை ஓலைப் பெட்டி பயன்பாடு குறைஞ்சு போச்சு. இப்போ, 100-க்கும் குறைவான வீடுகள்லதான் இந்தப் பெட்டி முடையுற வேலை நடக்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிராமப் பகுதிகள்ல உள்ள ஸ்வீட் கடைகள், திருவிழாக்கால கடைகள்ல காரச்சேவு, கருப்பட்டி மிட்டாய் போன்ற இனிப்பு வகைகளை பனையோலைப் பெட்டிகளில் பேக்கிங் செய்து கொடுப்பாங்க. சில கிராமங்கள்ல இந்தப் பழக்கம் இப்போதும் நடைமுறையில இருக்கு. இப்படிப் பனையோலைப் பெட்டியில் அடைக்கப்பட்ட இனிப்பு மிட்டாய்கள் கூடுதல் வாசனையுடன் இருப்பதுடன் சில நாள்கள் வரைக் கெடாமலும் இருக்கும்.

பனை ஓலைப் பெட்டியில் பிரியாணிப் பார்சல்கள்
பனை ஓலைப் பெட்டியில் பிரியாணிப் பார்சல்கள்

பிரியாணியைப் பனையோலைப் பெட்டியிலயே பார்சல் போட்டுக் கொடுத்தா என்னன்னு எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இந்தப் பெட்டியை தண்ணியில கழுவி வெயில்ல காய வச்சு ஏதாவது பொருள்களைப் போட்டு வச்சுக்கலாம். இதே பனையோலைப் பெட்டியில செடிகளையும் வளர்க்கலாம். வேண்டாம்னு தூக்கித் தூர எறிஞ்சாலும் அது மண்ணுக்கு உரம்தான். பனையோலைப் பெட்டி முடையுறத் தொழிலுக்கு என்னால முடிஞ்ச ஆதரவு” என்கிறார் மகேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism