Published:Updated:

`எதிர்த்தால் கொன்றுவிடுவோம்..!'- சமூக ஆர்வலர்களை வீடுதேடி மிரட்டும் செங்கல் சூளை அதிபர்கள்?

கோவையில் சட்டவிரோதமாக இயங்கும் செங்கல் தொழிற்சாலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

செங்கல் தொழிற்சாலைகள்
செங்கல் தொழிற்சாலைகள்

கோவை, தடாகம், சின்னத்தடாகம், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, 24 வீரபாண்டி, மாங்கரை, ஆனைக்கட்டி பகுதிகளில் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. சாதாரண சூளைகளாகத் தொடங்கப்பட்ட இவை, இப்போது ரோபோ எந்திரங்கள் மூலம் தினசரி லட்சக்கணக்கான செங்கற்களை உற்பத்தி செய்து தொழிற்சாலைகளாக வளர்ந்து நிற்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் என்பதால், இங்கு தாராளமாக செம்மண் கிடைக்கிறது.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

பட்டா நிலம், புறம்போக்கு நிலம் என்று பாரபட்சம் பார்க்காமல், பலநூறு அடிகளுக்கு ராட்சத குழிகளைத் தோண்டி மண் எடுத்து வருகின்றனர். இதனால் சூழலுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டு, பொது மக்களும் வனவிலங்குகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் நான்கு யானைகளும், 15-க்கும் மேற்பட்ட மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். இதில் எந்த செங்கல் தொழிற்சாலையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட எந்த அரசுத்துறையிடமும் அனுமதி வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

இதையடுத்து, அந்தச் செங்கல் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Vikatan

இதுதொடர்பாக, சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கொலை மிரட்டல்
கொலை மிரட்டல்

இந்நிலையில், இந்த விஷயத்தைக் கையில் எடுத்துப் போராடி வரும் சமூக ஆர்வலர்கள் ராஜேந்திரன், கணேஷ் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு இன்று காலை செங்கல் தொழிற்சாலை அதிபர்கள் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கணேஷ், ``கோவை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தர்மராஜ் உளட்பட 150-க்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்தனர். `செங்கல் தொழிற்சாலை தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதோ, வழக்கு தொடரவோ கூடாது.

கொலை மிரட்டல்
கொலை மிரட்டல்

அப்படித் தொடர்ந்தால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுகின்றனர். எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு என்றால், சி.ஆர்.ராமச்சந்திரனும் செங்கல் உற்பத்தியாளர்களும்தான் பொறுப்பு. அரசாங்கம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இதேபோல, செங்கல் தொழிற்சாலைகளால் ஏற்படும் நோய் தொற்று குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த டாக்டர் ரமேஷ்க்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.ராமசந்திரன்
சி.ஆர்.ராமசந்திரன்

இதுகுறித்து சி.ஆர்.ராமசந்திரனிடம் கேட்டதற்கு, “சமூக வலைதளங்களில் என்னை தரக்குறைவாக விமர்சித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதற்காகத்தான் அவர்களிடம் பேசப்போனேன். கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கவில்லை” என்றார்.