தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு 1,000 ஏக்கர் காட்டை நாகார்ஜுனா தத்தெடுத்தார். தெலுங்கானாவின் மெட்கல் மாவட்டத்திலுள்ள 1,000 ஏக்கர் வனப்பகுதியைப் பராமரிப்பதெற்கென 2 கோடி ரூபாயை நிதியாக வழங்கிய அவர், மறைந்த அவரின் தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவின் பெயரில் அங்கே பூங்கா அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், இந்த வனத்தில் வளர்ந்துள்ள மரங்களைப் பராமரிப்பதோடு, இங்கே பூங்கா அமைப்பதற்கான மரக்கன்றுகள் மற்றும் தாவரங்களையும் நட்டு வளர்க்கவுள்ளார்.
செங்கிசேர்லா என்று அழைக்கப்படக்கூடிய இந்த வனம் உப்பல்-மெடிப்பள்ளி என்ற பகுதியில், ஹைதராபாத் வாரங்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1,682 ஏக்கர் உள்ள இந்த வனப்பகுதியிலிருந்து சுமார் 1,000 ஏக்கரை தத்தெடுத்துள்ளார் நாகார்ஜுனா.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாகார்ஜுனா குறிப்பிடுகையில், ``முதலமைச்சர் கே.சி.ஆர் அவர்களுக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள்! அக்கினேனி குடும்பத்தினரால், செங்கிசேர்லா வனப்பகுதியில் ANR நகர்ப்புற பூங்காவைத் தத்தெடுத்து அடித்தளம் அமைத்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
மேலும், வன தத்தெடுப்பு விழாவின்போது குடும்பத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.