Published:Updated:

நீலகிரி: தாயை இழந்து தவிக்கும் புலி குட்டிகள்... வண்டலூர் கொண்டு செல்ல முடிவு!

Rescued Tiger cubs
Rescued Tiger cubs

பிறந்து 20 நாள்களிலிலேயே தாயை இழந்து தவிக்கும் இரண்டு புலிக்குட்டிகளை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வெளிமண்டலம், சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆச்சக்கரை, சீமார்குழி ஓடைப்பகுதியில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கடந்த 20-ம் தேதி வனத்துறையினர் கண்டு அதிர்ந்தனர்.

Died Tiger
Died Tiger

உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக மறுநாள் காலை ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இறந்துகிடந்த பெண் புலியின் அருகிலேயே இரண்டு புலிக்குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன.

இறந்த பெண் புலியின் குட்டிகள்தான் இவை என்பதை உறுதி செய்த வனத்துறையினர், குட்டிகளை தெப்பக்காடு முகாமில் வைத்து பராமரித்து வந்தனர்.

Rescued Tiger cubs
Rescued Tiger cubs

பிறந்து 20 நாள்களே ஆன குட்டிகள் என்பதால், இவற்றைப் பராமரிப்பதற்கான சிறப்பு வசதிகள் இங்கு இல்லை எனக் குட்டிகளை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டுச் செல்ல வன கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன் அடிப்படையில் குட்டிகளை இன்று வண்டலூருக்கு அனுப்பி வைத்தனர்.

குட்டிகள் பராமரிப்பு குறித்து முதுமலை நிர்வாகம், ``மீட்கப்பட்ட இரு புலிக்குட்டிகளும் தற்போது நல்ல நிலையில் உள்ளன. பிறந்து மூன்று வாரங்களே ஆன இவற்றுக்கு கூடுதல் பராமரிப்பு தேவை. இவற்றை பராமரிக்கும் அளவுக்குப் போதிய வசதிகள் இங்கு இல்லை.

Rescued Tiger cubs
Rescued Tiger cubs
இறந்துகிடந்த தாய் புலி, உயிருடன் மீட்கப்பட்ட 2 குட்டிகள்... முதுமலையில் நிகழ்ந்த சோகம்!

வண்டலூரில் மட்டுமே நவீன வசதிகள் உள்ளன. இரண்டு குட்டிகளும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. 4 மாத சிறப்பு கவனிப்புக்குப் பிறகு, அவற்றை மீண்டும் முதுமலைக்குக் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு