Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: குடல் வெளிவந்த பாம்பு... ஒரு மணி நேர அறுவை சிகிச்சை... காப்பாற்றிய கால்நடை மருத்துவமனை!

snake rescue
snake rescue

ஊட்டியில் குடல் வெளிவந்த பாம்பை மீட்டு ஒரு மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து கால்நடை மருத்துவர்கள் பராமரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகிலுள்ள மரகல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது வீட்டின் கூரையில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்ட அவர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பாம்பு தப்பிச்செல்லாமல் இருக்கும் வகையில் கண்காணித்து வந்துள்ளார்.

snake rescue
snake rescue

ராஜன் வீட்டிற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், பாம்பை பத்திரமாக மீட்டனர். அப்போது அந்த பாம்பின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு குடல் வெளிவந்திருப்பதைக் கண்டனர்.

உடனடியாக ஊட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்து பாம்பைக் காப்பாற்றினர். குடல் வெளிவந்த நிலையில் காயத்துடன் மீட்கப்பட்ட பாம்பிற்கு அறுவை சிகிச்சை அளித்து காப்பாற்றிய இவர்களின் செயல் பாராட்டைப் பெற்று வருகிறது.

snake rescue
snake rescue

கானுயிர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த ஊட்டி சாதிக் நம்மிடம் பேசுகையில், "montane trinket snake எனும் அழகிய சர்ப்பம் வகையைச் சேர்ந்த இந்த பாம்பின் வயிற்றில் கடுமையான காயம் இருந்தது. ஊட்டி கால்நடை மருத்துவர் ராஜ முரளி அறுவை சிகிச்சை செய்தார். தொடர்ந்து 8 நாள்கள் வனத்துறை பராமரிப்பில் இந்த பராமரித்து,தையல் பிரித்து வனத்துக்குள் விடப்படும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு