Published:Updated:

``விதைப்பந்துகளுடன் விநாயகர் சிலைகள்’’ - நீலகிரி ஆட்சியரின் உத்தரவை எல்லோரும் பின்பற்றலாமே!

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

``நீலகிரியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் ஆர்கானிக் பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்குள் விதைப் பந்துகளை வைக்க வேண்டும்!”

Vinayagar Statue
Vinayagar Statue ( கே.அருண் )

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் ஒரு பக்கம் காடழிப்பு, மக்கள்தொகை பெருக்கம், அதிகரிக்கும் கட்டடங்கள், பணப்பயிர்கள் என பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பிளாஸ்டிக் தடை, மரம் வளர்ப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, புல்வெளிகள் மீட்பு எனத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Vinayagar Statue
Vinayagar Statue

இந்த நிலையில் பசுமை நீலகிரி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை விதைப்பந்துகளுடன் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ``நீர் நிலைகளில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற வேதிப்பொருள்களால் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது வேதிப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணம் பூசப்பட்டிருந்தாலோ இவற்றில் காணப்படும் வேதிப்பொருள்கள் நீரில் கரைந்து நீர் நிலைகள் மாசடைய வாய்ப்புள்ளது.

District Collector Divya
District Collector Divya

இதைத் தவிர்க்க நீர்நிலைகளை மாசுபடுத்தும் வேதிப்பொருள்களால் செய்யப்பட்ட மற்றும் வேதிப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணம் பூசப்ட்ட விநாயகர் சிலைகளை தவிர்ப்பது இன்றியமையாததாகும்.

இதன்படி களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித வேதிப்பொருள்கள் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வாிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத ஆர்கானிக் மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்.

Vinayagar Statue
Vinayagar Statue

குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சி, ஊட்டி காமராஜர் சாகர் அணை, கூடலூர் இரும்புப் பாலம் ஆறு, பந்தலூர் பொன்னானி ஆறு, கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகள் கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் காணப்படும் நீரின் தரமானது கரைப்பதற்கு முன்னரும், கரைத்த பின்னரும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்காணிக்கப்படும்.

இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை `பசுமை நீலகிரி’ முயற்சியின் அங்கமாக செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் படி பொதுமக்கள் ஆர்கானிக் பொருள்களால் மட்டுமே தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்குள் விதைப் பந்துகளை அமைக்க வேண்டும்.

Vinayagar Statue
Vinayagar Statue

இதனால் வழிபாட்டிற்குப் பின்னர் சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது விதைகள் பரவி முளைத்து மாவட்டத்தின் பசுமை வளையம் அதிகரிக்க ஏதுவாக அமையும்” என்றார். அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் தான் கரைக்கிறார்கள். எல்லா இடங்களிலும் இதைப் பின்பற்றலாமே எனச் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.