Published:Updated:

`நீர் மாசுபாட்டால் பொருளாதார வளர்ச்சி குறையும்!' - உலக வங்கி

துரை.நாகராஜன்

உலக நாடுகளின் கண்காணிப்பு நிலையங்கள், செயற்கைக்கோள் தகவல்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பெறப்பட்ட அடிப்படையின் மூலமாக இந்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

water pollution
water pollution

அதிகமாக மாசுபட்ட நீர், சில நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை மூன்றில் ஒரு பங்குவரை குறைத்துவருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதனால், மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படும். எனவே, உலக நாடுகள் உடனடியாகத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் கண்காணிப்பு நிலையங்கள், செயற்கைக்கோள் தகவல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பெறப்பட்ட அடிப்படை மூலமாக இந்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

water pollution
water pollution

"சுத்தமான நீர், பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணி. நீரின் தரம் மோசமடைவது, பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. சுகாதார நிலைமைகளை மிகவும் மோசமாக்கி, உணவு உற்பத்தியைக் குறைத்து, அதனால் பல நாடுகளில் வறுமையை அதிகரிக்கிறது" என்கிறார், உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ்.

`நீர் எங்கள் உரிமை... சூயஸே வெளியேறு!’ - கோவை மாநகராட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த செல்ஃபி போராட்டம்

Biological Oxygen Demand என்பதுதான், நீர் மாசுபாடு எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பதை அளவிடும் காரணி. அது, ஒரு லிட்டருக்கு 8 மி.கி என்ற அளவுக்கு மேல் செல்லும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வறிக்கை. அந்த அளவு அதிகமாகும்போது, நீரோட்டப் பாதையின் கீழ்நிலையில் (downstream) உள்ள பகுதிகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.33 சதவிகிதம் இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால், அதில் நீர் மாசுபாடு காரணமாக 0.83 சதவிகிதம் வரை குறையும். அதாவது, 3-ல் 1 பங்காக உற்பத்தி குறைந்து பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது.

water pollution
water pollution

நீரில் உப்பு அளவு அதிகரித்தல், செயற்கை உரங்கள் பயன்பாடு, நகர்ப்புற கழிவுநீர் கலப்பது போன்ற காரணிகள் விவசாய உற்பத்தியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன. இந்தக் காரணங்களால், ஆண்டுக்கு 170 மில்லியன் மக்களின் உணவுக்கு வழிவகுக்கக்கூடிய விவசாய உற்பத்தி வீணாகிறது.

உலக வங்கி நடத்திய இந்த ஆய்வின்மூலம், நீர் மாசுபாடு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக்கியுள்ளது.