Published:Updated:

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்; தொடரும் இறப்புகள்... காரணம் என்ன?

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

கடந்த 2020 செப்டம்பரில் சுமார் 380-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன. நூறு திமிங்கலங்களை மட்டுமே மீட்பு குழுவினரால் காப்பாற்ற முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்; தொடரும் இறப்புகள்... காரணம் என்ன?

கடந்த 2020 செப்டம்பரில் சுமார் 380-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன. நூறு திமிங்கலங்களை மட்டுமே மீட்பு குழுவினரால் காப்பாற்ற முடிந்தது.

Published:Updated:
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியான டாஸ்மேனியாவில் உள்ளது மேக்வரி துறைமுகம். இங்கு 200க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் சமீபத்தில் கரை ஒதுங்கின. இவற்றைக் காப்பாற்ற மீட்பு பணியாளர்கள் அங்கு விரைந்தனர்.

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

கடந்த 2020 செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் இதே துறைமுகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், அதை மீட்கும் பணியில் சுமார் 380-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன. நூறு திமிங்கலங்களை மட்டுமே மீட்பு குழுவினரால் காப்பாற்ற முடிந்தது.

இந்த கடற்கரை சற்று புறநகர் பகுதியில் இருப்பதால் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று பணியாற்ற வேண்டியுள்ளது. தற்போது இருக்கும் 200-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களில் தற்போது வரை பாதி உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

எனவே அந்த பகுதியில் இருக்கும் மக்கள் திமிங்கலங்களின் மீது தண்ணீரை ஊற்றியும், துணிகள் மூலம் போர்த்தியும், அவற்றைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர்.

இது குறித்து அறிவியல் ஆய்வாளர் வம்சா கூறியதாவது, “கடந்த வருடம் இதே இடத்தில், இதே நேரத்தில், இதே இனத்தைச் சேர்ந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

இந்த வகை திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக பயணிக்க கூடியவை. இவை தவறான வழித்தடத்தை பின்பற்றியதாலோ, காலநிலை மாற்றத்தாலோ, நீரின் வெப்பநிலை மாற்றத்தாலோ கரை ஒதுங்கி இருக்கலாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதில் எந்த காரணங்களும் உறுதி செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாஸ்ட்ரீட் என்ற இடத்திலும் இதே போன்று கரை ஒதுங்கிய 14 குட்டி திமிங்கலங்களும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.