Published:Updated:

தமிழகத்தின் காடுகளின் பரப்பளவு அதிகரிக்கிறதா? FSI அறிக்கை கூறுவது இதுதான்!

Forest
News
Forest

மாவட்ட வாரியாக மரங்களின் தரவுகள் வழங்கப்படாததால் காடுகளின் பரப்பளவு குறைக்கப்பட்டதற்கான காரணத்தை கூறுவது கடினம் என்று தெரிவித்தார். இயற்கை பேரழிவான கஜா புயலின் போது ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிப்புக்குள்ளானதும் முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் ஜனவரி 13 தேதி வன ஆய்வு மூலம் தொகுக்கப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் இந்திய வன ஆய்வு (FSI) அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் இருந்த காடு மற்றும் மரங்களின் பரப்பளவை விட 2021-ம் ஆண்டு 2,261 சதுர கிலோமீட்டர் காடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

அந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், ``இந்தியா மிகவும் தனித்துவமான காடுகளைக் கொண்டுள்ளது. மக்களும் இயற்கையும் இங்கு தனித்தனியாக இல்லை, ஒரு பகுதியாக உள்ளோம். காடுகளை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை மட்டுமல்லாமல், அவற்றை எவ்வாறு செழிக்கச் செய்துள்ளோம் என்பதையும் இந்த அறிக்கை நமக்குச் சொல்ல முடியும்" என்று கூறினார்.

அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பூபேந்திர யாதவ்
அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பூபேந்திர யாதவ்
Twitter Image: @byadavbjp

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த அறிக்கையின்படி, தற்போது இந்தியாவிலுள்ள மொத்த காடு மற்றும் மரங்கள் மொத்த புவியியல் பகுதியில் 24.62% வரை பரவிகாணப்படுகிறது.

இந்தியாவின் வனப் பரப்பு தற்போது 7,13,789 சதுர கி.மீ மற்றும் மரங்களின் பரப்பளவு 95,748 சதுர கி.மீ. கடந்த ஆண்டுகளின் மதிப்பீட்டில் இருந்து நாட்டின் மொத்த கார்பன் கையிருப்பு 79.4 மில்லியன் டன்கள் அதிகரித்துள்ளது. எனினும், பழங்குடி மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த அறிக்கையில், `காலநிலை ஹாட்ஸ்பாட்கள்’ என வானிலையில் தீவிர மாற்றங்களைச் சந்திக்கவிருக்கும் வனப் பகுதிகளை கண்டுபிடித்துள்ளனர்.

சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாகவிருக்கும் ஹாட்ஸ்பாட்களாக லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் போன்ற மாநிலங்களை கணித்துள்ளனர்.

தமிழ்நாட்டை பொருத்தவரை 55 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வரை காடுகள் விரிவடைந்துள்ளது, வனப்பகுதி மற்றும் வனப் பகுதிக்கு வெளியே உள்ள அனைத்து மரங்களையும் சேர்த்து 113 சதுர கிலோமீட்டர் உயர்ந்துள்ளது. இருப்பினும், ஒரு ஹெக்டேருக்கு குறைவான திட்டுக்களும் காணப்படுகின்றன. அதேசமயம் 406 சதுர கிலோமீட்டர் மரங்களையும் இழந்ததுள்ளது.

Forest
Forest

இதை குறித்து அசோக் உப்ரேதி கூறுகையில், ``400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மரங்களின் பரப்பளவு குறைந்துள்ளது, ஆனால் வனத்திற்கு வெளியே வளர்ந்து வரும் மரங்களின் இருப்பு அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக மரங்களின் தரவுகள் வழங்கப்படாததால் காடுகளின் பரப்பளவு குறைக்கப்பட்டதற்கான காரணத்தை கூறுவது கடினம் என்று தெரிவித்தார். இயற்கை பேரழிவான கஜா புயலின் போது ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிப்புக்குள்ளானதும் முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார். கட்டுமானம் சாலை மேம்பாடு போன்றவை காடழிப்பிற்கான காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

தமிழ்நாடு கிட்டத்தட்ட 7,826 காலநிலை ஹாட்ஸ்பாட்களைக் கொண்டுள்ளது, இது தட்பவெப்பநிலை மாற்றத்தினால் உருவாகலாம். வரும் தசாப்தங்களில் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்யக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது