Published:Updated:

போகிப் பண்டிகை... சென்னை புகையில்லாமல் இருந்ததா? - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்

தாம்பரம்
News
தாம்பரம் ( சொ.பாலசுப்பிரமணியன் )

சென்னையில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2.6 டன் பழைய டயர்கள் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படவுள்ளது

Published:Updated:

போகிப் பண்டிகை... சென்னை புகையில்லாமல் இருந்ததா? - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்

சென்னையில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2.6 டன் பழைய டயர்கள் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படவுள்ளது

தாம்பரம்
News
தாம்பரம் ( சொ.பாலசுப்பிரமணியன் )

`பழையன கழிதலும்... புதிய புகுதலும்’ என்ற கூற்றைத் தவறாக புரிந்துகொண்டு போகிப் பண்டிகையின்போது தேவையில்லாத பழைய பொருட்கள், டயர், டியூப் போன்றவற்றை தீயிலிட்டு எரிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக நம்மிடம் இருந்துவருகிறது. இதனால் ஏற்படும் சூழல் மாசுபாடு குறித்து ஒவ்வோர் ஆண்டும் போகிப் பண்டிகையின்போது விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் `புகையில்லா போகி’யைக் கொண்டாட வலியுறுத்துகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பிரசாத்துக்கு சென்னையில் எந்தளவு பலன் கிடைத்தது... போகியின்போது சென்னையில் புகை குறைந்திருந்ததா?

பெருங்களத்தூர்
பெருங்களத்தூர்
சொ.பாலசுப்பிரமணியன்

``இந்த ஆண்டு போகியின்போது, தடைசெய்யப்பட்ட பொருள்களை எரிக்காமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவர்கள், சென்னை மாநராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்கள் நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டன. பல இடங்களில் எரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பழைய டயர்கள், மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை இந்தக் குழு பறிமுதல் செய்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட 2.6 டன் பழைய டயர்கள் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படவுள்ளது.” என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.

காற்று மாசு எந்தளவுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``12-ம் தேதி காலை 8 மணி முதல் 13-ம்தேதி காலை 8 மணி வரை காற்றின் தரத்தினை அளவீடு செய்ததில் காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராம்/கனமீட்டருக்கு உட்பட்டே இருந்தது. காற்றில் கலந்திருந்த PM2.5 நுண் துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 52 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் அதிகபட்சமாக 102 மைக்ரோகிராம்/கனமீட்டர் வரை இருந்தது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்
சொ.பாலசுப்பிரமணியன்

ஆனால் இதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு 60 மைக்ரோகிராம்/கனமீட்டர்தான். அதேபோல, காற்றில் கலந்திருந்த PM10 நுண் துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 103 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் அதிகபட்சமாக 256 மைக்ரோகிராம்/கனமீட்டர் வரை இருந்தது. ஆனால், இதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு 100 மைக்ரோகிராம்/கனமீட்டர்தான். காற்று தரக் குறியீட்டினைப் (Air quality index) பொறுத்தமட்டில் குறைந்தபட்சமாக ராயபுரத்தில் 113 ஆகவும் அதிகபட்சமாக அம்பத்தூரில் 241 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டின் காற்று தரக் குறியீட்டினை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காற்றின் தரம் மேம்பட்டிருக்கிறது” என்றனர்.