Published:Updated:

`ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை’ எனச் சொல்லும் அமைச்சர் செய்ய வேண்டியது என்ன?

எண்ணெய் குழாய் அமைக்கும் பணி

மத்திய சுற்றுச்சூழல் துறை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக வேதாந்தாவுக்கு அனுமதியே வழங்கிவிட்டது. திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை அரசு கைது செய்கிறது.

`ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை’ எனச் சொல்லும் அமைச்சர் செய்ய வேண்டியது என்ன?

மத்திய சுற்றுச்சூழல் துறை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக வேதாந்தாவுக்கு அனுமதியே வழங்கிவிட்டது. திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை அரசு கைது செய்கிறது.

Published:Updated:
எண்ணெய் குழாய் அமைக்கும் பணி

நேற்று சட்டப்பேரவையில் தி.மு.க சார்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சி.வி சண்முகம், ``தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கைக்கு எதிரான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தற்போதுவரை தமிழகம் அனுமதி வழங்கவில்லை. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முடியாது" என்று பேசினார். இவ்வாறு பேசும் நிலையில், மத்திய அரசு அனுமதி கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. தமிழகத்தில் குழாய்கள் அமைக்கும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அனுமதி கொடுக்காமல் எப்படி முதற்கட்டப் பணிகள் நடக்கின்றன, தமிழக அரசு வெறும் வாய்மொழியாக அறிவித்தால் போதுமா என்பது உள்ளிட்ட கேள்வி எழுகின்றன.

நெடுவாசல்
நெடுவாசல்

இதுகுறித்து, மீத்தேன் எதிர்ப்புக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமனிடம் பேசினோம். ``சட்டமன்றத்தில் உடனடியாக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னரே சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். அதேபோல மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றலாம். இதன் அடிப்படையில் ஓர் அரசாணை வெளியிட வேண்டும். அல்லது முன்னர் ஜெயலலிதா நிறைவேற்றிய அரசாணையே செல்லும் என அறிவிக்க வேண்டும். அந்த அரசாணை மீத்தேன் நிலக்கரி திட்டங்களை ரத்து செய்தது. அது ஹைட்ரோகார்பனுக்கும் பொருந்தும் எனச் சொல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டமன்றத்தில் காவிரியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து ஒரு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இந்தச் சட்டத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும். தமிழகத்திலிருந்து டெல்லிக்குப் போன இரு அவை எம்.பி-க்களும் ஏற்கச் செய்ய வேண்டும். காவிரியில் தண்ணீர் கொடுக்க வேண்டும் எனச் சொன்னால் கர்நாடகா எதிர்க்கும். ஆனால், காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் எந்த மாநிலமும் எதிர்க்காது. எண்ணெய் நிறுவனங்கள் மட்டும்தான் எதிர்க்கும். அதனால் சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டே ஆக வேண்டும்.

எண்ணெய்க் கிணறு
எண்ணெய்க் கிணறு

காவிரிப் படுகையில் இருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆய்வு அனுமதியைப் பெற்றிருக்கிறார்களே தவிர, நிலப்பரப்பில் இன்னும் எண்ணெய் எடுக்க ஆரம்பிக்கவில்லை. வேதாந்தா நிறுவனம் கடல்பகுதியில் எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் தொடங்கிவிட்டது. இப்போது தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு முன்னால் இப்படி ஒரு திட்டமே கிடையாது என்று சொல்லியிருந்தார் அமைச்சர் சி.வி சண்முகம். இப்போது திட்டம் இருக்கிறது, ஆனால், அனுமதிக்க மாட்டோம் எனப் பேசுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல், பெட்ரோலியக் குழாய்கள் பதிக்கும் பணியைச் செயல்படுத்துங்கள்' என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறது. எனவே, இந்த அமைச்சர்கள் வெறும் வாய்மொழியாகச் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. ஆரம்பத்தில் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால், நடைமுறைக்கு வந்துவிடும். வாய்மொழியாக உத்தரவிடும் செயலை நிறுத்தி செயலில் காட்ட வேண்டும். தமிழக அரசு இனியாவது நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

மீத்தேன்
மீத்தேன்

ஏற்கெனவே மத்திய அரசின் போக்கு அச்சத்தைத் தரக்கூடியதாக உள்ளது. மத்திய அரசு எண்ணெய்க் கிணறுகளை ஏலம் விட்டிருக்கும் நிலையில், மக்களைச் சமாதானப்படுத்தும்படி மட்டுமே இவர்களது பேச்சு இருக்கிறது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் 681 ச.கி.மீ பரப்பளவில் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. அப்போது மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டு, `இது குறித்த திட்டங்கள் வருமானால், மத்திய அரசு எங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அதையும் மத்திய அரசு பின்பற்றாமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறது.

மத்திய சுற்றுச்சூழல் துறை வேதாந்தாவுக்கும், ஓ.என்.ஜி.சிக்கும் அனுமதியே வழங்கி இருக்கிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது. தி.மு.க காலத்தில் வந்த திட்ட பரப்பு 691 ச.கி.மீ மட்டும்தான். இப்போது 7,000 ச.கி.மீ ஹைட்ரோகார்பன் திட்டம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 10 மடங்கு பெரியது. அதனால் விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, தமிழக அரசு. அதை முறையாக எடுக்கும் என நம்புகிறோம்" என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism