Published:Updated:

மழைக்காலம்: குடியிருப்புகளுக்கு படை எடுக்கும் பாம்புகள்... என்ன செய்ய வேண்டும்?

மழைக்காலம்

மழைக்காலத்தில் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் கதகதப்பான வெப்பத்தை விரும்புகிறது. எனவே, மனித வசிப்பிடங்களையும், தார் சாலைகளையும் விரும்பி வருகிறது. தவளை, தேரை போன்ற உயிரினங்களைச் சாப்பிட பாம்புகள் அதிகம் வெளிவருகின்றன.

மழைக்காலம்: குடியிருப்புகளுக்கு படை எடுக்கும் பாம்புகள்... என்ன செய்ய வேண்டும்?

மழைக்காலத்தில் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் கதகதப்பான வெப்பத்தை விரும்புகிறது. எனவே, மனித வசிப்பிடங்களையும், தார் சாலைகளையும் விரும்பி வருகிறது. தவளை, தேரை போன்ற உயிரினங்களைச் சாப்பிட பாம்புகள் அதிகம் வெளிவருகின்றன.

Published:Updated:
மழைக்காலம்

மழைக்காலம் தொடங்கியதால் பல இடங்களில் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கட்டட மறைவிடங்கள், புதர்மண்டிய இடங்கள், கறையான் புற்று போன்ற இடங்கள் பாம்புகள் உட்பட பல ஜந்துக்களுக்கு வசிப்பிடமாக இருக்கும். மழை நேரத்தில், அங்கிருந்து வெளியே கிளம்புவதால் பக்கத்தில் உள்ள வீடுகளுக்குள் புகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

வாகனத்திலிருந்த பாம்பு
வாகனத்திலிருந்த பாம்பு

மழைக்காலத்தில் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் கதகதப்பான வெப்பத்தை விரும்புகிறது. அத்துடன் மழைக் காலத்தில் தவளை, தேரை போன்ற உயிரினங்களை சாப்பிட பாம்புகள் அதிகம் வெளிவருகின்றன. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்கக் காலமாக உள்ளது. எனவே, மனித வசிப்பிடங்களையும், தார்ச்சாலைகளையும் விரும்பி வருகிறது. இது பல இடங்களில் இந்த பிரச்னையாக உள்ளது.

பருவமழை காரணமாகத் தொடர் மழைபெய்து வருவதால், அருகில் உள்ள முட்புதர்கள், வயல் வெளிகள், வனப்பகுதியில் இருந்து பாம்புகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு அதிக அளவு வருகின்றன. இதைக் கண்டு பயப்படும் மக்கள் பாம்புகளை அடித்துக் கொல்கின்றனர். ஆனால், அவற்றைக் கண்டவுடன்  அடித்துக் கொல்லாமல், உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வனத்துறை கூறுகிறது.

பிரின்டருக்குள் இருந்த பாம்பு
பிரின்டருக்குள் இருந்த பாம்பு

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

"மழைக் காலத்தில் பாம்புகள் பாதுகாப்பான இடத்தைத் தேடுவது வழக்கம். அதற்கு கதகதப்பான வெப்பம் தேவைப்படுவதால், அதற்கான இடத்தைத் தேடிச் செல்கிறது. அதனால் கார், பைக் இன்ஜின், சிலிண்டர், ஷூ போன்ற மறைவிடங்களில் வந்து பதுங்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அடர்த்தியான செடிகள், வீட்டை சுற்றிக் கிடக்கும் தேவையற்ற பொருள்களிலும் மறைந்துகொள்ளும்.

இதுபோன்ற இடங்களில், பாம்புகள் இருந்தால் அருகில் செல்லக்கூடாது. ஆயுதங்களால் அடித்துத் துன்புறுத்திக் கொல்லவோ, வெளியேற்றவோ கூடாது. எங்களிடம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் வனத்துறை அதிகாரிகள் கூறும்போது,

``பாம்பை பிடிக்க முயற்சி செய்தால், நீளமான குழாயில் ஒரு துவாரத்தை துணியால் மூடி பாம்பு அருகில் வைக்க வேண்டும். பாம்பு அதற்குள் செல்ல வாய்ப்புள்ளது. உடனே, குழாயின் மறு துவாரத்தை துணியால் மூடினால், பாம்பு வெளியே வராது.

பிடிக்கப்பட்ட பாம்பு
பிடிக்கப்பட்ட பாம்பு
நா.ராஜமுருகன்

அல்லது அட்டைப் பெட்டியில் சரியாக ஓட்டை போட்டு, அருகில் வைத்தால் அதற்குள், பாம்பு செல்லும். உடனே துவாரத்தை மூடி விட வேண்டும். விஷமுள்ள பாம்பாக இருந்தால், இந்த முறைகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். சென்னை மற்றும் சுற்றுவட்டடார பகுதியைச் சேர்ந்தவர்கள், 044 - 2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மற்றவர்கள் அந்தப் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலக தொடர்பு எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள்'' கூறினர்.

முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியவை

  • வீட்டைச் சுற்றி பழைய பொருள்களை அடைக்காமல், குப்பைகள் இல்லாமல் துய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.

  • கழிவு நீர் குழாய்கள் தொடக்கத்திலும் முடிவிலும் சல்லடை போன்ற வலையால் மூடுங்கள்.

சீட்டுக்கு அடியில் பாம்பு
சீட்டுக்கு அடியில் பாம்பு
  • தூங்கும் அறை தூய்மையாக இருக்க வேண்டும். தூங்கும் முன் கட்டில்கள், தலையணை, மெத்தை விரிப்பு தூசிதட்டி, உதறி பயன்படுத்துங்கள்.

  • வீட்டில் நீர் வடிய சுவற்றை ஓட்டிய தரையில் போட்டுள்ள துளைகளை பாதுகாப்பாக அடைதுக்கொள்ளுங்கள்.

  • கழிவறை, குளியலறை மற்றும் வீட்டைச் சுற்றி தேவையற்ற பொருள்களைப் போட்டு அடையவிடக் கூடாது. குப்பைகள், எலிகள், புதர்கள் இருக்கக் கூடாது.

  • ஷு, செருப்பு வைக்கும் இடங்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். அணியும் முன்பு நன்றாகச் சோதித்து அணிய வேண்டும்.

  • வாகனத்தை எடுக்கும் முன் கவனமாக சோதித்து எடுங்கள்.