Published:Updated:

நாம் தொல்லுயிர் படிமங்களை ஏன் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் ?

தொல்லுயிர் படிமங்கள்

6.6 கோடி ஆண்டுகளாக பூமி அமைதியாக உள்ளது. பறவைகளும் பாலூட்டிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தழைக்க ஆரம்பித்தது. மனிதன் பூமியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது போல் தோற்றம் உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் பூமியில் இப்போது சுமார் 790 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

நாம் தொல்லுயிர் படிமங்களை ஏன் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் ?

6.6 கோடி ஆண்டுகளாக பூமி அமைதியாக உள்ளது. பறவைகளும் பாலூட்டிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தழைக்க ஆரம்பித்தது. மனிதன் பூமியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது போல் தோற்றம் உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் பூமியில் இப்போது சுமார் 790 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

Published:Updated:
தொல்லுயிர் படிமங்கள்

இந்தத் தொல்லுயிர் படிமங்களை ஏன் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயல்புதான். இந்த படிமங்களை சேகரிப்பதால் ஒருகாலத்தில் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்துபோன உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், பூமியில் நடந்த பேரிடர்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆமாங்க... பூமியில் பலமுறை பேரழிவுகள் நடந்துள்ளன. அவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

 நத்தையின் தொல்லுயிர்படிமம்
நத்தையின் தொல்லுயிர்படிமம்

பூமி உருவாகி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இங்கு உயிரினங்கள் தோன்றி சுமார் 320 கோடி வருடங்கள் ஆகின்றன. சுமார் மூன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் தற்கால மனிதன் பூமியில் தோன்றினான். கடந்த 50 கோடி ஆண்டுகளில் நம் பூமி ஐந்து முறை பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது. என்ன நடந்தது; எப்படி நடந்தது எனச் சற்று திரும்பிப் பார்ப்போம். மேலும், இனி இத்தகைய பேரழிவு வருமா என முன்னோக்கிப் பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பூமியில் நடந்த ஐந்து பேரழிவுகள்

1. நடப்பு ஆண்டுகளில் இருந்து, சுமார் 45-லிருந்து 44 கோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமியில் எரிமலை வெடிப்பு அதிகம் நிகழ்ந்ததால் ஒரு பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமியில் உள்ள உயிரினங்களில் 57 சதவிகிதம் அழிந்தது. இந்தக் காலம் புழுக்கள் அதிகம் வாழ்ந்த காலம். இந்தப் பேரழிவை Ordovician-Silurian extinction events என அழைக்கின்றனர். இதுதான் முதல் பேரழிவு என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2. முதல் பேரழிவுக்கு அடுத்து 7.5 கோடி வருடங்கள் பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் பூமியில் அமைதி நிலவியது. மென்மையான குருத்தெலும்பைக் கொண்ட உயிரிகள் இந்தக் காலத்திலேயே வந்துவிட்டன. உதாரணமாக, சுறாக்கள் போன்ற உயிரினங்கள். மற்றும் முதுகெலும்பு இல்லாத நண்டு, நத்தைகள் அதிகம் வாழ்ந்த காலம் இது. திடீர் என 37.5-லிருந்து 36 கோடி வருடங்களுக்கு முன் 70 சதவிகித உயிரினங்கள் அழிந்தன. இது எப்படி நடந்தது எனச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எரிமலை வெடிப்பு அல்லது விண்கல் விழுந்து இந்தப் பெரும் அழிவு நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை Late Devonian extinction event என அழைக்கின்றனர். இது இரண்டாவது நடந்த பேரழிவாகும்.

தொல்லுயிர் படிமங்கள் விளக்கும் Aswatha Biju
தொல்லுயிர் படிமங்கள் விளக்கும் Aswatha Biju

3. இரண்டாவது நடந்த பேரழிக்கு பின்னர் சுமார் 11.5 கோடி வருடங்கள் பூமியில் அமைதி நிலவியது. பல மீட்டர் சுற்றளவு கொண்ட அமோனைட்கள் (ஒரு வகை நத்தைகள்) இருந்த காலம். சுமார் 25.2 கோடி வருடங்களுக்கு முன் Siberian Traps எனப்படும் ஒரு பெரிய எரிமலை வெடிப்பால் பூமியிலிருந்த 83% உயிரினங்கள் செத்து மடிந்தன. இதில் கடலில் வாழ்ந்த உயிரிகளும் தரையில் வாழ்ந்த உயிரினங்களும் அடக்கம். இந்த நிகழ்வை Permian-Triassic extinction event என அழைக்கின்றனர். இது மூன்றாவது நடந்த பேரழிவு.

4. மூன்றாவது நடந்த பேரழிவுக்குப் பின்னர் 4 கோடி ஆண்டுகளுக்குப் பூமியில் அமைதி நிலவியது. இந்த காலத்தில் ஆமை மற்றும் முதலை போன்ற உயிரினங்கள் உருவாகியுள்ளன. 20.13 கோடி வருடங்களுக்கு முன் திடீர் எனக் கரியமில வாயு பூமியில் அதிகம் தோன்றுகிறது. காரணம் விண்கல் அல்லது பெரிய எரிமலை வெடிப்பால் இருக்கலாம். பூமியில் சுமார் 70ல்லிருந்து 75 சதவிகித உயிரினங்கள் மாண்டன. இந்த நிகழ்வை Triassic-Jurassic extinction event என அழைக்கின்றனர். இது நான்காவது நடந்த பேரழிவாகும்.

5. நான்காவது நடந்த பேரழிவுக்கு பின்னர் சுமார் 14.5 கோடி வருடங்கள் பூமியில் அமைதி நிலவியது. இந்தக் காலத்தைப் பயன்படுத்தி ஊர்வன இனத்தைச் சார்ந்த டைனோசர்கள் பூமியில் பல்கிப் பெருகின. பூமியில் பல விதமான பெரிய டைனோசர்கள் சுற்றித் திரிந்தன. இதன் கட்டுப்பாட்டுக்குள் பூமி இருந்தது எனலாம். சுமார் 6.6 கோடி வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்க 75% உயிரினங்கள் செத்து மடிந்தன. டைனோசர் கூட்டம் கூண்டோடு செத்து மடிந்தன. இந்த பேரழிவை Cretaceous-Paleogene extinction event என அழைக் கின்றனர். இதுதான் கடைசியாக நடந்த பேரழிவு... இதற்கு அடுத்து எந்தப் பேரழிவுகளும் நடக்கவில்லை.

அடுத்து என்ன நடக்கும்?

இப்போது 6.6 கோடி ஆண்டுகளாக பூமி அமைதியாக இருந்து வருகிறது. பறவைகளும் பாலூட்டிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தித் தழைக்க ஆரம்பித்தன. மனிதன் பூமியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது போல் தோற்றம் உள்ளது. இதற்குக் காரணம் மக்கள் தொகைதான். தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் பூமியில் இப்போது சுமார் 790 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

அடுத்து என்ன நடக்கும்?; எப்போது நடக்கும் எனத் தெரியாது?ஆனால், அடுத்து மேல் கூறிய ஐந்து பேரழிவு போல் ஏதாவது ஒன்று வரவாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.

முதல் இரண்டு பேரழிவுக்கும் இடையே சுமார் 7.5 கோடி ஆண்டுகளும்; இரண்டாவது மற்றும் மூன்றாவது பேரழிவுகள் இடையே சுமார் 11.5 கோடி ஆண்டுகளும்; மூன்றாவது மற்றும் நான்காவது பேரழிவுகள் இடையே சுமார் 4 கோடி ஆண்டுகளும்; நான்குக்கும் ஐந்துக்கும் இடையே சுமார் 14.5 கோடி ஆண்டுகளும்; கடைசி அழிவுக்கும் இன்றைய காலத்துக்கும் இடையே சுமார் 6.6 கோடி ஆண்டுகளும் பூமியில் அமைதி நிலவி உயிரினங்கள் தழைக்க வாய்ப்பளித்துள்ளது. பின்னர், அவற்றைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்துள்ளது இயற்கை.

அமோனைட்
அமோனைட்

மிகவும் குறைந்த பட்சமாக 4 கோடி வருடத்திலும் அதிக பட்சமாக 14.5 வருடத்திலும் பூமியில் பேரழிவு நடந்திருக்கிறது. இது சொல்லுவது என்னவென்றால் பேரழிவுக் காலத்தை மற்றும் நேரத்தைக் கணிப்பது இயலாத காரியம். எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதாவது, சராசரியாக சுமார் 9.5 கோடி வருடங்களுக்கு ஒரு முறை இந்தப் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன எனவும் கொள்ளலாம்.

எது எப்படியோ?

அடுத்து என்ன நடக்குமோ?

எப்போது நடக்குமோ?

என்ன பேரழிவு நடந்தாலும் எப்போது நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது மனிதர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆழ்கடலில் வாழ்ந்து வரும் சுறா மீன்கள் கடைசி நான்கு பேரழிவுகளை எதிர் கொண்டு இன்றும் கம்பீரமாக வலம் வருவது மகிழ்ச்சியான செய்தி.

மனித இனத்துக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

இந்தக் கேள்வி அதி முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இந்தப் பூமியில் தோன்றிய உயிரினங்களின் வகைகளில் 95 சதவிகிதம் மேற்கண்ட காரணங்களால் இன்று இல்லை! 95 சதவிகித வகையான உயிரினங்கள் அழிந்தது என எப்படிக் கண்டறிந்தார்கள்?

தொல்லுயிர் படிமங்கள்
தொல்லுயிர் படிமங்கள்

உயிர் புதை படிமங்கள் மூலமாக இதைக் கண்டுபிடித்துள்ளனர். பல கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் கல்லாக மாறிய நிலையில் உலகமெங்கும் பாறைகளில் காணப் படுகின்றன. உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் டைனோசர்களும், தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் உயிரினங்களும், மொராக்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் மெல்லுடலி படிமங்களும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் கடல் நத்தைகளும் மற்றும் மற்ற உயிரினங்களின் படிமங்களும் அதிகமாகக் காணமுடிகிறது. இந்த தொல்லுயிர் படிமங்கள்தான் மேற்கண்ட கண்டுபிடிப்புக்குப் பெரிதும் உதவியது. மேலும், இத்தனை வகை வகையாக உயிரினங்கள்பூமியில் வாழ்ந்திருக்கின்றன என்பதற்குச் சாட்சியங்கள்.

உயிரியல் படித்தவர்களுக்கு மட்டுமன்றி பெரும்பாலான மக்களுக்கு நன்கு தெரிந்த ஆராய்ச்சியாளர் டார்வின் ஆவார். இவர் பூமியில் வாழும் கோடான கோடி உயிரினங்களும் ஒரு உயிரிலிருந்து பல்கிப் பெருகியவைதான் என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். கோட்பாடு என்பது நிரூபிக்கப்படாத அறிவியல் உண்மை. இதை நிரூபிக்கப்படாதவை எனக் குறைந்த மதிப்பிட வேண்டாம். இந்த கோட்பாடு மிகவும் வலிமையானது. அதாவது புரியும்படி சொல்ல வேண்டுமானால் வால் உள்ள குரங்கிலிருந்து மனிதக்குரங்கு வந்தது. மனிதக் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றார். இந்த கோட்பாட்டை உருவாக்க அவர் மடகாஸ்கர் என்ற தீவில்தான் ஆராய்ச்சி செய்தார். அந்தத் தீவிலும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கிடைப்பது போல் நிறைய தொல்லுயிர் படிமங்கள் உள்ளன. இந்த தொல்லுயிர் படிம சேகரிப்பே அவருக்கு இந்தக் கோட்பாட்டை உருவாக்க உதவியது!

டார்வின்
டார்வின்

சரி... அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எவ்வளவோ தொல்லுயிர் படிமங்கள் உள்ளன. இவை மிகவும் அபூர்வமானவை. தமிழகத்தில் இந்தத் தொல்லுயிர் படிமங்களைச் சேகரித்து அருங்காட்சியகம் எதுவும் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி அதி முக்கியமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு தொல்லியல் படிம அருங்காட்சியகங்கள் உள்ளன. அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முறையே ஒரு அருங்காட்சியகம் உள்ளது.

தொல்லுயிர் படிமங்கள் மேல் பெரம்பலூர் ஆட்சியர் வெங்கடப் பிரியா வைத்திருக்கும் ஆவலில் அமோனைட்களுக்கு (Ammonites) சிறப்பாக ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளார். இது பெரம்பலூர் வட்டாட்சியர் வளாகத்தில் அமைந்துள்ளது.

பெரம்பலூர் ஆட்சியர்  வெங்கடப்பிரியாவிடம்  தொல்லுயிர் படிமம் ஒன்றை கொடுத்த போது.
பெரம்பலூர் ஆட்சியர் வெங்கடப்பிரியாவிடம் தொல்லுயிர் படிமம் ஒன்றை கொடுத்த போது.

தொல்லுயிர் படிமங்களில் அமோனைட் முக்கியமானது. இந்த அமோனைட் என் கண்ணுக்கு ஒரு புள்ளியில் ஆரம்பித்து பெரிய சக்கரம் போல் இருக்கும் ஒரு விண்வெளிக்கூட்டம் போல்தோன்றும்.

அமோனைட் டைனோசர் காலத்துக் கடல் வாழ் நத்தை வகையைச் சார்ந்தது. அமோனைட்கள் ஒரு மிளகு அளவிலிருந்து ஒரு மாருதி டிசயர் (Maruthi Desire) கார் அளவுக்கு பெரியதாகவும் இருக்கும். இவை சுமார் 6 கோடி முதல் 25 கோடி வருடங்களுக்கு முன் கடலில் வியாபித்திருந்தது. டைனோசர்கள் அழிந்த போது இவையும் முற்றிலும் அழிந்துவிட்டது. ஆனால் நம்பமுடியாத வகையில் சிறியதும் பெரியதுமாக கல்லாய் மாறிய இதன் உடல்கள் அரியலூர், பெரம்பலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கிடைக்கிறது. என்னிடம் கல்லாய் மாறிய அமோனைட்கள் (fossils) பல இருக்கிறது. இந்த அழகான அருங்காட்சியகத்தில் நூற்றுக்கணக்கான அமோனைட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன! பெரம்பலூர் ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க என்னிடமிருந்த அமோனைட்கள் நான்கை இந்த அருங்காட்சியகத்திற்குக் கொடுத்தேன்.

அதில்ஒரு அமோனைட் சுமார் ஒன்றரை அடி விட்டத்துடன் 10 கிலோ எடையுடையது. நூற்றுக்கணக்கான அமோனைட்களை யும் ஒரே இடத்தில் பார்க்க வியப்பாகவும் அற்புதமாகவும் இருந்தது. குறுகிய காலத்தில் ஒரு மகத்தான சாதனையை ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப் பிரியா செய்துள்ளார். இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைய புவியலாளர் பிரசாத் சுந்தரேசன் உழைப்பு மகத்தானது.