Published:Updated:

1832-ல் பிறந்த உலகின் மிகவும் வயதான ஆமை! 190-வது ஆண்டில் கின்னஸ் சாதனை!

ஜொனாதன் ஆமை
News
ஜொனாதன் ஆமை

ஜொனாதன் தனது 190-வது ஆண்டை நிறைவு செய்தது... நம் காலத்தில் வாழ்ந்து அனைத்து நோய்களையும் போர்களையும் கடந்து வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமாக உள்ளது...என்று பார்ப்பவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

1832-ல் பிறந்த உலகின் மிகவும் வயதான ஆமை! 190-வது ஆண்டில் கின்னஸ் சாதனை!

ஜொனாதன் தனது 190-வது ஆண்டை நிறைவு செய்தது... நம் காலத்தில் வாழ்ந்து அனைத்து நோய்களையும் போர்களையும் கடந்து வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமாக உள்ளது...என்று பார்ப்பவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Published:Updated:
ஜொனாதன் ஆமை
News
ஜொனாதன் ஆமை

உலகின் மிக வயதான ஆமை என்ற பெருமையுடன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது ஜொனாதன் எனும் 190 வயதான ஆமை. இங்கிலாந்தின் தெற்கு அட்லாண்டிக்கில், செயின்ட் ஹெலினாவின் ஆளுநர் தோட்ட மாளிகையில் தற்போது இந்த ஆமை வசித்து வருகிறது.

ஜொனாதன் ஆமை
ஜொனாதன் ஆமை

ஜொனாதன் எனப் பெயரிடப்பட்ட இந்த ஆமை, 1832-ல் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்த ஆமை 1882-ல் சீஷெல்சிலிருந்து, செயின்ட் ஹெலினாவிற்கு வந்தபோது இதன் வயது 50. அப்போது இருந்த, சர் வில்லியம் கிரேவில்ஸனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட ஆமை..

தற்போது கின்னஸ் சாதனை படைத்த இந்த ஆமைக்கான 190-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள், கோலாகலமாக நடத்தப்பட உள்ளன. வீகென்ட் நிகழ்ச்சிகள் மற்றும் ஜொனாதனுக்காக சிறப்பு முத்திரை வெளியிடவும் அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, அந்த ஆமைக்கு மிகவும் பிடித்த உணவுகளைக் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. கேரட், கீரை, வெள்ளரிக்காய், ஆப்பிள் ஆகியவை இந்த ஆமைக்கு மிகவும் பிடிக்கும், என அதனை பராமரிப்பவர்கள் கூறுகின்றனர்.

ஜொனாதன் ஆமை
ஜொனாதன் ஆமை

நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே இது மிகவும் பழமையானது என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இதற்கு முன் 188 வயது வரை வாழ்ந்த தூய் மலிலா என்ற ஆமை இந்த சிறப்பைப் பெற்றிருந்தது.

இந்த ஆமையை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் கூறியதாவது, “ஜொனாதன் குளிரைத் தாங்கி வளரக்கூடியது. வயது முதிர்வினால், பார்வை சற்று மங்கியும் வாசனைத் திறனும் குறைந்துள்ளது. எனவே, கலோரிகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியன அதிகம் கொண்ட உணவுகளே பரிந்துரைக்கப்படுகிறது.

ஜொனாதன் ஆமை
ஜொனாதன் ஆமை

இந்த மாளிகையில் இதுவரை 31 ஆளுநர்கள் மாறியுள்ளனர். ஆனால் இந்த ஆமை இன்றும் நலமுடன் இங்கு வாழ்ந்து வருகிறது. இதோடு சேர்த்து டேவிட், எம்மா மற்றும் பிரட் ஆகிய மூன்று  ஆமைகளும் வசித்து வருகின்றன" என்றார்.

பேரரசர் நெப்போலியன் 1821 -ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டு  உயிரிழந்த இடத்தில் தான் இந்த அமையும் பிறந்ததாக நம்பப்படுகிறது..! ஜொனாதன் தனது 190-வது ஆண்டை நிறைவு செய்தது, நம் காலத்தில் வாழ்ந்து அனைத்து நோய்களையும் போர்களையும் கடந்து வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமாக உள்ளது என்று பார்ப்பவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.