Published:Updated:

எண்ணெய் ஆலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

எண்ணெய் ஆலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
எண்ணெய் ஆலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

எண்ணெய் ஆலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

எண்ணெய் ஆலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

சமையல் எண்ணெய் என்றுகூறி பாமாயில் எண்ணெய்யை விற்பனை செய்ததாக வந்த புகாரையடுத்து, திருப்பூர் அருகே உள்ள தனியார் எண்ணெய் ஆலையை உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாள்புதூரில் வசித்து வரும் பழனிசாமி என்பவர், அப்பகுதியில் தனியார் எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். இவர் தன்னுடைய நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இல்லாமல், பாமாயில் எண்ணெய்யை சமையல் எண்ணெய் என்றுகூறி பேக்கிங் செய்து விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநில உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின்பேரிலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படியும் இன்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் குழு அந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஸ்ரீகோல்டு, இயற்கை, மம்மீஸ் போன்ற பெயர்களில், சமையல் எண்ணெய் என்று குறிப்பிட்டு, பாமாயில் எண்ணெய்யை விற்பனை செய்து வந்ததாக சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8,500 லிட்டர் எண்ணெய்யை அந்த ஆலையிலிருந்து அவர்கள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்டுகளின் உணவு மாதிரியை எடுத்து உணவுப் பகுப்பு ஆய்வகத்துக்கு அனுப்பி அதன் அறிக்கையின் அடிப்படையிலேயே உணவு பாதுகாப்பு சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு