Published:Updated:

'இரண்டு வேளை உணவு 10 ரூபாய்!' - ஹைதராபாத்தை அசத்தும் சேவை அமைப்பு

'இரண்டு வேளை உணவு 10 ரூபாய்!' - ஹைதராபாத்தை அசத்தும் சேவை அமைப்பு
'இரண்டு வேளை உணவு 10 ரூபாய்!' - ஹைதராபாத்தை அசத்தும் சேவை அமைப்பு

'இரண்டு வேளை உணவு 10 ரூபாய்!' - ஹைதராபாத்தை அசத்தும் சேவை அமைப்பு

மதியம், இரவு என இரண்டு நேரத்துக்கான உணவுகளை 10 ரூபாய்க்கு அளிக்கின்றனர், ஹைதராபாத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று. ' எங்களுடைய தங்கும் விடுதிக்கு வாரந்தோறும் ஏழாயிரம் பேர் வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக, இத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்' என்கின்றனர் அமைப்பின் நிர்வாகிகள். 

(PC-NDtv)

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா என்ற இடத்தில் செயல்பட்டுவருகிறது, சேவா பாரதி என்ற அமைப்பு. இதன் அருகிலேயே அரசு மருத்துவமனை ஒன்றும் அமைந்துள்ளது. நோயாளிகள் மற்றும் அவர்களைப் பார்க்க வருகிறவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசும் சேவா பாரதி அமைப்பின் பொதுச் செயலாளர் நரசிம்ம மூர்த்தி, `காந்தி மருத்துவமனைக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பரிசோதனைக்காக தொலைவில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகத் தங்கும் விடுதி வசதியை அமைக்க வேண்டும் என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டில் தங்கும் விடுதியைக் கட்டினோம். அப்போது, தினசரி 10-க்கும் குறைவான பேரே வந்துசெல்வார்கள். ஆனால், தற்போது தினசரி 250 பேர் வந்துசெல்கின்றனர். வாரத்துக்கு சுமார் ஏழாயிரம் பேர் வருகிறார்கள். இவர்களில் பலரும் ஏழை எளியவர்கள். 

அவர்களுக்காக மதியமும் இரவும் 10 ரூபாய்க்கு உணவு வழங்க முடிவுசெய்தோம். இதனால், மருத்துவமனைக்கு வரும் மக்களுக்காக, மதியம் இரவு என இரண்டு வேளை உணவை 10 ரூபாய்க்கு வழங்க முடிவுசெய்து, இன்றிலிருந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம்' என்றார்.

இந்தச் சேவைகுறித்துப் பேசும் விஜயலட்சுமி, ' ராமோஜி ராவ் திரைப்பட நகரத்திலிருந்து வருகிறேன். முதுகுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறேன். தினமும் வீட்டுக்குச் சென்று வரமுடியாத காரணத்தால், அதிகப் பணம் செலவழித்து விடுதியில் தங்கவேண்டி வருமே எனப் பயந்துபோனேன். ஆனால், சேவா பாரதியில் 10 ரூபாய் செலவழித்தால் அனைத்து வசதிகளையும் பெற முடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு