Published:Updated:

அன்னையர் தினத்தில் அம்மாக்களுக்கு சாப்பாடு இலவசம் - இளைஞர்களின் அசர வைக்கும் திருச்சி உணவகம்!

அன்னையர் தினத்தில் அம்மாக்களுக்கு சாப்பாடு இலவசம் - இளைஞர்களின் அசர வைக்கும் திருச்சி உணவகம்!
அன்னையர் தினத்தில் அம்மாக்களுக்கு சாப்பாடு இலவசம் - இளைஞர்களின் அசர வைக்கும் திருச்சி உணவகம்!

அன்னையர் தினத்தில் அம்மாக்களுக்கு சாப்பாடு இலவசம் - இளைஞர்களின் அசர வைக்கும் திருச்சி உணவகம்!

ஆபர்கள் காலம் இது.. ஆன்லைன் முதல் ஷாப்பிங் மால்கள் என பல ஆபர்கள் தினம் தினம் அறிவிக்கிறார்கள். எதை “வாங்குவது”, எவற்றை “விடுவது” என வாடிக்கையாளர்கள் கொஞ்சம் திணறித்தான் போக வேண்டியுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு வருட “அன்னையர்”தினத்திலும், திருச்சி ஏழாம் சுவை உணவகம்  அம்மாக்களுக்கு  ஆபர் வழங்கி தாய்மார்களுக்கு உணவு வழங்குகிறார்கள்.


 

‘சமைத்தது மீதமானால் மட்டுமே, அதிகம் சாப்பிடுவார் அம்மா, அவருடன் வாருங்கள், அம்மாவை சாப்பிட வைத்து அழகுபாருங்கள் எனும்  அன்னையர் தின ஆபர்  வாசகங்கள் கண்ணில் பட, திருச்சி ஏழாம் சுவைக்குள் நுழைந்தோம்.

ஹோட்டல் உரிமையாளர்களான செந்தில் குமார் மற்றும்  சதீஷும், வித்தியாசமாக யோசித்து வழங்கும் ஆபர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அவர்கள் நம்மிடம்,
“எங்களுக்கு பூர்வீகம் பெரம்பலூர் மாவட்டம். இருவரும் வெவ்வேறு ஊர். பள்ளிகாலத்தில், ஆசிரியர்கள், ஊரெல்லாம் பொறியியல் கல்லூரி இருக்கு.  அதில் படிச்சுட்டு ஏராளமானோர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதுபோலத்தான்,  ஆசிரியர் படிப்பும். இந்தப் படிப்புகளுக்கு அந்தகாலத்தில்தான் மரியாதை. இப்ப நிறைய பேர், உழைப்புக்கு தகுந்த ஊதியம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அதனால் உங்களுக்கு பிடித்த, பலரும் தேர்ந்தெடுக்காத படிப்பை படிங்க. படித்தபிறகு செய்யும் வேலையில் கவனமாக, அர்ப்பணிப்போட செய்யுங்க. நிச்சயம் முன்னேறலாம் என்றார். அந்த வார்த்தை மனதில் பதிந்தது.  அதனடிப்படையில் அப்போது பிரபலம் இல்லாத, “ஹோட்டல் மேனேஜ்மெண்ட்” படிப்பை தேர்ந்தெடுத்தோம்.

படித்து முடித்தபிறகு, சென்னை, அமெரிக்கா, சிங்கப்பூர் என பல இடங்களில் இருவரும் தனித்தனியே வேலை செய்தோம். நட்சத்திர  ஹோட்டல்களில் வேலை, கைநிறைய சம்பளம்.

சொந்தமாக “ஹோட்டல்” நடத்தனும் என்கிற கனவில், சம்பளத்தை சேர்த்து வைத்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும், சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2012-ம் ஆண்டு, “அறுசுவை+உபசரிப்பு” எனும் அர்த்தத்தில், ‘ஏழாம் சுவை’ என்கிற பெயரில் ஹோட்டல் துவங்கினோம்.  இந்தப் பெயருக்கான விளக்கம் தெரியாமல் மோசமாக பேசியவர்களும் உண்டு.


 

சாப்பிட வருபவர்களுடன், உணவு பரிமாறுபவர்கள், பேச வேண்டும். அன்பாக உபசரிக்க வேண்டும். திருச்சிக்குள் ஏராளமான அசைவ உணவகங்கள் இருக்கின்றன. அதனால் சைவ உணவங்களில், அசைவ உணவுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கும் வகையில் உணவுகளை வழங்க திட்டமிட்டோம். அது வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கவே, அவர்களின் ஆதரவு  கூடியது. அவர்களால் இவ்வளவு வருடங்களாக பயணிக்கிறோம்.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நாங்கள், இன்று 100 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு  எங்களை வளர்த்துக்கொண்டோம். நட்சத்திர ஹோட்டல்கள் என்பது எங்கள் கனவு. அதுவரை அந்தத் தரத்தில், இங்கேயே உணவு வழங்க முயற்சி செய்கிறோம். இப்படி எங்கள் இலக்கு ஒரு பக்கம் இருந்தாலும், நமக்கும் கொஞ்சம்  சமூக அக்கறைவேண்டும் என யோசித்தோம்.  

அந்தவகையில்தான், வெளிநாடுகளில், அன்னையர் தினம், தந்தையர் தினம் உள்ளிட்ட நாள்களில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் ஒன்றாக சேர்ந்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் இங்கு அப்படியான தினங்கள் குறைவு. அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும். எல்லோரையும் போல நாமும் வழக்கமான தள்ளுபடி அறிவிக்காமல், சமூகத்துக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் மாதிரியான தள்ளுபடி வழங்கணும்  என முடிவெடுத்தோம்.
 அதன்படி, மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில், அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் குழந்தைகள் தினம் உள்ளிட்டவற்றில் நாங்கள் ஆபர்  வழங்க முடிவெடுத்தோம். இறுதியாக 'அன்னையர் தினத்தில் பிள்ளைகளோடு வரும் தாய்மார்களுக்கும், ஆசிரியர் தினத்தன்று அடையாள அட்டையோடு வரும் ஆசிரியர்களுக்கும், ‘தேர்தல் விழிப்பு உணர்வு உண்டாக்கிட  தேர்தல் அன்று ஓட்டு போட்டுவிட்டு கையில் மையோடு வந்தால் தள்ளுபடி’என ஆபர்கள் வழங்கி வருகின்றோம்.

பலரும் வந்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டுச் செல்வார்கள். அன்னையர் தினத்தில், ஏராளமான பிள்ளைகள், அம்மாக்களை  இங்கு அழைத்து வந்து சாப்பிட வைத்து அழைத்துச் செல்வதை பார்க்க முடிகிறது. குடும்பத்தோடு வந்தால், அம்மாக்களுக்கு மட்டும் 75 ரூபாய் தள்ளூபடி செய்கிறோம். பல அம்மாக்கள் அதற்கு கூடுதலாக சாப்பிடுவதில்லை. பல தாய்மார்கள், நான், தனியாக இருக்கிறேன். பிள்ளைகள் வெளியூர்களில் இருக்கிறார்கள் எனக் கூறுவார்கள். அவர்களுக்கும் உணவு வழங்குகிறோம். அவர்களின் பிள்ளை எங்கோ ஒரு திசையில் வாழ்கிறார்கள். ஆனால் நாங்கள் பிள்ளைகளாய், உணவு வழங்குவதாக நினைத்துக்கொள்வோம்.

இதுபோன்ற மனநிறைவுகள்தான் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. உணவில் 80 சதவிகிதம் தரமும், 200 சதவிகிதம் உபசரிப்பும் இருக்க வேண்டும் என திட்டமிட்டு அதன்படியே செயல்படுகிறோம்.

ஊருக்கே உணவு வழங்குபவள் “தாய்”, அவர்கள் பலநாள்கள் அறைகுறையாக சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது அந்த சந்தோசம் போதும்” என சிரிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு