Published:Updated:

`பிரேசிலுக்கு சாதகமாக ஃபிக்ஸிங்!’ – மெஸ்ஸிக்கு இரண்டு ஆண்டு தடை?!

ராம் கார்த்திகேயன் கி ர

`CONEMBOL அமைப்பு ஊழலால் சூழ்ந்துள்ளது. அது கால்பந்தை மகிழ்ச்சியாக விளையாட முடியாமல் செய்கிறது. இந்தத் தொடர் பிரேசில் அணி வெல்வதற்காக ‘ஃபிக்ஸ்’ செய்யப்பட்டுள்ளது’

Brazil's team pose with trophy.
Brazil's team pose with trophy. ( AP )

தென் அமெரிக்க நாடுகளில் நடத்தப்படும் கோபா அமெரிக்கா தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் ஒரு போட்டியில்கூட தோல்வியில்லாமல் 12 ஆண்டுகளுக்குப் பின், பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது. இது, பிரேசில் வெல்லும் ஒன்பதாவது சாம்பியன் பட்டம். இந்தத் தொடர் குறித்து குட்டி ரவுண்ட் அப்.

12 ஆண்டுகளுக்குப் பின்…!

கோபா அமெரிக்க தொடரில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக விளையாடவில்லை. ஃபைனலில் சிலியுடன் மோதியது பிரேசில். ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு முதல் கோல் எவெர்டன் அடிக்க, 44-வது நிமிடத்தில் சிலி அணி வீரர் கரேரோவும் பதில் கோல் அடிக்க சமமானது. அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே கேப்ரியல் ஜீசஸ் பிரேசில் அணிக்காக கோல் அடிக்க முதல் பாதி முடியும்போது 2-1 என முன்னிலைப் பெற்றது பிரேசில்.

Brazil's Richarlison celebrates with teammates after scoring his side's third goal against Peru during the final soccer match of the Copa America at the Maracana stadium in Rio de Janeiro.
Brazil's Richarlison celebrates with teammates after scoring his side's third goal against Peru during the final soccer match of the Copa America at the Maracana stadium in Rio de Janeiro.
AP

ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் கேப்ரியல் ஜீசஸ் ‘ரெட் கார்ட்’ வாங்கி வெளியேறியது, அந்த அணிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அடுத்த 20 நிமிடங்களை 10 பேர் கொண்டு விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதும் சளைக்காமல் தங்கள் மேல் முழு நம்பிக்கையும் வைத்து போராடி சிலியை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர் பிரேசில் டிஃபென்டர்கள். 90-வது நிமிடத்தில் பிரேசிலுக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைக்க, அதில் கோலடித்து இறுதியில் 3-1 என்கிற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது பிரேசில். இந்தத் தொடரில் அதிக கோல் அடித்தவர் பிரேசில் வீரர் எவெர்டன் (3 கோல்). இந்தத் தொடரில் ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்த பிரேசில் கோல் கீப்பர் அலிஸன் பெக்கர், சிறந்த கோல்கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டார்.

Brazil's Everton, left, holds his Top Scorer trophy as he poses with teammates goalkeeper Alisson holding his Best Goalkeeper trophy and Brazil's Dani Alves holding his top scorer trophy.
Brazil's Everton, left, holds his Top Scorer trophy as he poses with teammates goalkeeper Alisson holding his Best Goalkeeper trophy and Brazil's Dani Alves holding his top scorer trophy.
AP

அப்செட்... அப்செட்!

லீக் போட்டியில் பிரேசிலிடம் 5 - 0 எனப் படு தோல்வியடைந்தது பெரு. காலிறுதிக்கே தகுதிபெறாது என நினைத்திருந்தபோது யாரும் எதிர்பாராத விதத்தில், பெரு இறுதிப்போட்டி வரை முன்னேறியது. காலிறுதியில் உருகுவே அணியை பெனால்டியில் வீழ்த்தி, அரையிறுதியில் கடந்த இரண்டு முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சிலியை 2 – 0 எனத் தோற்கடித்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சிலியை அரையிறுதியில் வீழ்த்தி அந்த அணியின் ஹாட்ரிக் சாம்பியனாகும் கனவையும் கலைத்தது. பெரு அணிதான் இந்தத் தொடரில் அன்பிரெடிக்டபல் என்டரி.

Copa America Final
Copa America Final
AP

முதல் ரெட் கார்ட்!

கோபா அமெரிக்கா கோப்பையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் வென்றிருந்தாலும், அதைத் தாண்டி மிகப்பெரும் பேசும்பொருளாக இருந்தது லயோனல் மெஸ்சிக்கு கொடுத்த ‘ரெட்கார்ட்’. ஏற்கெனவே பிரேசிலுக்கு எதிரான அரையிறுதியில் அர்ஜென்டினா தோல்வியுற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதன் பிறகு மூன்றாவது இடத்துக்காக சிலி – அர்ஜென்டினா மோதிய போட்டியில் 37-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி பந்தை தட்டிச் செல்ல முயன்றபோது, சிலி கேப்டன் கேரி மெடெலை தள்ளிவிட்டார். கோபம் அடைந்த கேரி, இருமுறை மெஸ்சியை நெஞ்சோடு நெஞ்சாகவும் தலையாலும் முட்டித்தள்ளினார். இரு வீரர்களும் தவறு செய்துள்ளனர் என முடிவு செய்து, இருவருக்கும் ‘ரெட்கார்ட்’ கொடுக்கப்பட்டது.

Argentina's Lionel Messi, left, and Chile's Gary Medel argue during Copa America third-place soccer match at the Arena Corinthians in Sao Paulo.
Argentina's Lionel Messi, left, and Chile's Gary Medel argue during Copa America third-place soccer match at the Arena Corinthians in Sao Paulo.
AP

இரு அணிகளின் கேப்டன்களும் வெளியேற்றப்பட்டு, இரு அணியினரும் தலா 10 வீரர்களுடன் விளையாடினர். அர்ஜென்டினா சிலி அணியைத் தோற்கடித்திருந்தாலும் இந்த ‘ரெட்கார்ட்’ சம்பவம் மெஸ்சியை மிகவும் கோபமைடையச் செய்தது. இதற்கு முன் 2005-ல் ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி ரெட்கார்ட் வாங்கியிருந்தார். பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, 687 போட்டிகளில் ஒருமுறைகூட ரெட் கார்ட் வாங்கியதில்லை. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்சி வாங்கும் ரெட்கார்ட் இது. நடுவர் அதிருப்தியில் இருந்த மெஸ்ஸி, போட்டி முடிந்ததும் மெடல் கொடுக்கும் விழாவுக்கு வரவில்லை.

Argentina's Lionel Messi, center left, and Chile's Gary Medel, center right, scuffle as referee Mario Diaz, from Paraguay shows the red card to both of them during the Copa America third-place soccer match
Argentina's Lionel Messi, center left, and Chile's Gary Medel, center right, scuffle as referee Mario Diaz, from Paraguay shows the red card to both of them during the Copa America third-place soccer match
AP

அரையிறுதியில் பிரேசில் உடனான போட்டியில் இரண்டு முறை அர்ஜென்டினா பெனால்டி கேட்டும் VAR போகாமல் நடுவர் அதை நிராகரித்தார். அப்போதே நடுவர் மீது சாடினார் மெஸ்சி. அடுத்த போட்டியில் அவருக்கு ரெட் கார்டு கொடுத்ததும், இன்னும் கொந்தளித்துவிட்டார். இன்னும் ஒருபடி மேலே போய் `CONEMBOL அமைப்பு ஊழலால் சூழ்ந்துள்ளது. அது கால்பந்தை மகிழ்ச்சியாக விளையாட முடியாமல் செய்கிறது. இந்தத் தொடர் பிரேசில் அணி வெல்வதற்காக ‘ஃபிக்ஸ்’ செய்யப்பட்டுள்ளது’ என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

Argentina's Lionel Messi touches his captain band during Copa America third-place soccer match against Chile.
Argentina's Lionel Messi touches his captain band during Copa America third-place soccer match against Chile.
AP
பிரேசில் பயிற்சியாளர் “மெஸ்ஸி நடுவருக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதெல்லாம் கால்பந்தில் சகஜம்” என்றார்.
மெஸ்ஸியின் புகார்களால் CONEBOL அமைப்பும் அதிருப்தி அடைந்துள்ளது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மெஸ்சி தேசிய அணிக்காக ஒரு கோப்பைகூட வெல்லவில்லை என்கிற குறை நீடித்துக்கொண்டே இருக்கிறது. 2016 கோபா அமெரிக்கா அரையிறுதியில் தோல்வியைச் சந்தித்தபோது ஓய்வை அறிவித்து, அதன் பிறகு தன் முடிவை மாற்றிக்கொண்டார். ஒருவேளை CONEMBOL அமைப்பு மெஸ்ஸி மீது நடவடிக்கை எடுத்தால், அவரது கரியரே கேள்விக்குறியாகும்!