Published:Updated:

இந்திய வரலாற்றில் முதல் முறையாக... தாஜ்மகாலுக்கு வந்த சொத்து வரி நோட்டீஸ்!

தாஜ்மகால்
News
தாஜ்மகால்

இது போன்று இதற்குமுன் நடந்தது இல்லை; இந்த நோட்டீஸ் தவறுதலாகவே வந்திருக்கக்கூடும். மேலும், தாஜ்மகால் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம், எனவே, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை இத்தகைய வரியை செலுத்துவதற்கு பொறுப்பல்ல - தொல்லியல் ஆய்வுத் துறை

இந்திய வரலாற்றில் முதல் முறையாக... தாஜ்மகாலுக்கு வந்த சொத்து வரி நோட்டீஸ்!

இது போன்று இதற்குமுன் நடந்தது இல்லை; இந்த நோட்டீஸ் தவறுதலாகவே வந்திருக்கக்கூடும். மேலும், தாஜ்மகால் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம், எனவே, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை இத்தகைய வரியை செலுத்துவதற்கு பொறுப்பல்ல - தொல்லியல் ஆய்வுத் துறை

Published:Updated:
தாஜ்மகால்
News
தாஜ்மகால்

இந்திய வரலாற்றிலேயேல் முதல்‌ முறையாக காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு தண்ணீர் வரி மற்றும் சொத்து வரி செலுத்தக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ரூ.1.5 லட்சம் சொத்து வரியாகவும், 1.9 கோடி தண்ணீர் வரியாகவும் தாஜ் மகால் சார்பில் செலுத்தப்பட வேண்டும் என ஆக்ரா மாநகராட்சி இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி
வருமான வரி

2021 - 2022 மற்றும் 2022 - 2023 நிதியாண்டில் வரி செலுத்த வேண்டிய இந்தத் தொகை இன்னும் கட்டப்படாமல் நிலுவையில் உள்ளது எனவும், இந்த வரியானது அடுத்த 15 நாள்களுக்குள் செலுத்து வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் அறிக்கையின்படி, தொல்பொருள் கண்காணிப்பு ஆய்வாளர்‌ இது பற்றி பேசும்போது, ‘‘இது போன்று இதற்குமுன் நடந்தது இல்லை; இந்த நோட்டீஸ் தவறுதலாகவே வந்திருக்கக்கூடும். மேலும், தாஜ்மகால் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம், எனவே, இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை இத்தகைய வரியை செலுத்துவதற்கு பொறுப்பல்ல; தண்ணீர்கூட நினைவுச் சின்னம் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தோட்டங்களைப் பராமரிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

தாஜ்மகால்
தாஜ்மகால்

ஆக்ராவின் நகராட்சி ஆனையர் நிகில் டி ஃபண்டேவிடம் இது பற்றி கேட்டபோது, “அனைத்து அரசாங்கம் மற்றும் வழிபாட்டுத் தளங்களுக்கு புவியியல் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்) கணக்கெடுப்பின்படி, வரி விதிப்பு நோட்டீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தாஜ்மகாலும் இடம்பெற்றிருந்தது என்பது எனக்கு தெரியாது” என்றார்.

இது குறித்து நகராட்சி உதவி ஆணையர் சரிதா சிங், ‘‘வரிகளைக் கணக்கிடும் பணியைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம். மேலும்‌, தாஜ்மகாலுக்கு வரி செலுத்துவதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

இனிவரும் காலத்தில் இன்னும் எந்தெந்ததற்கெல்லாம் வரி நோட்டீஸ் வருமோ!