Published:Updated:

விதைப் பந்து விழாவை முன்னெடுத்த பொறியியல் மாணவர்கள்!

விதைப் பந்து விழாவை முன்னெடுத்த பொறியியல் மாணவர்கள்!
விதைப் பந்து விழாவை முன்னெடுத்த பொறியியல் மாணவர்கள்!

விதைப் பந்து விழாவை முன்னெடுத்த பொறியியல் மாணவர்கள்!

இந்தியா முழுவதும் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. சிறு குறுக்குத் தெரு முதல் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வரை அனைத்து இடங்களிலும் தங்கள் சக்திக்கு ஏற்ப விநாயகர் சிலை வைத்து மக்கள் கொண்டாடினர். 

விதைப் பந்து விழாவை முன்னெடுத்த பொறியியல் மாணவர்கள்!

"என்னதான் இதை நாம் நமது பாரம்பர்ய வழக்கமாக வைத்து செய்தாலும் ஒரு வாரத்தில் சிலையை தண்ணியில் கரைக்கத்தான் செய்கிறோம். அவ்வாறு சிலை வாங்கச் செலவு செய்யும் பணத்தை, எதிர்காலத்துக்குத் தேவைப்படும் மரம், செடி, கொடிகளை உருவாக்கும் விதைப் பந்துக்குச் செலவுசெய்தால் எப்படி இருக்கும்" என்கின்றனர் சென்னையிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்.

விதைப் பந்து விழாவை முன்னெடுத்த பொறியியல் மாணவர்கள்!

அக்கல்லூரியின்  'தேசிய  சேவை  திட்டம்' (NSS) சார்பாக, ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 'விதைப் பந்து' தயாரித்து விதைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மட்டும் அல்லாது தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விதைப்பந்து தயாரிக்கின்றனர்.

விதைப் பந்து விழாவை முன்னெடுத்த பொறியியல் மாணவர்கள்!

"நாங்கள் 10000 விதைப் பந்துகள் தயாரிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறோம். அவ்விதைப்பந்துகளை சகமாணவர்களுடனும்  நண்பர்களிடமும் அளித்து தங்கள் பகுதியில் விதைக்க கேட்டுக்கொள்கிறோம்" என்று அச்சங்க உறுப்பினர் தெரிவித்தார்.

ஆர்வமாக விதைப்பந்து தயாரித்துக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், "தற்போது சிற்றூர்களில் மக்கள் ஆர்வமாக செய்துகொண்டிருக்கும் விதைப் பந்து தூவலை, நாம் அனைவரும் ஒன்றுபட்டு செய்தால், இயற்கைக்கு நாம் ஏற்படுத்தும் மாசை குறைப்பது மட்டும் அல்லாமல், நமக்கான உணவை உற்பத்தி செய்யவும் சுத்தமான காற்றை சுவாசிக்க வழிவகுத்தவாறு  இருக்கும். விநாயகர் சதுர்த்தியில் தனக்குச் சிலை வைக்கவில்லை என்று கடவுள் கோபித்துக்கொள்வார் என்று எண்ணுபவர்களுக்கு நான் கூறவிரும்புவது  - இவ்வாறு செய்து, அதனால் வரும் கனி கொடிகளை இல்லாதவனுக்கு அளித்து, அந்தப் பசி ஆற்றலில் இறைவனைப் பாருங்கள்" என்று கூறினார்.

’மொபைல் போன், டெக்னாலஜி என்று அதை நாடிச் செல்லும் நமது இளைஞர் சமுதாயம், சற்று விவசாயத்தைப் பற்றி இனியும் சிந்திக்கவில்லையென்றால் எதிர்காலத்தில் வரும் வினைகளுக்கு நாமே பொறுப்பு’ என்பதே கலந்துகொண்ட அனைத்து மாணவர்களின் கருத்தாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு