Election bannerElection banner
Published:Updated:

திருச்சியில் பாரம்பர்ய உணவுத் திருவிழா

திருச்சியில் பாரம்பர்ய உணவுத் திருவிழா
திருச்சியில் பாரம்பர்ய உணவுத் திருவிழா

திருச்சியில் பாரம்பர்ய உணவுத் திருவிழா

திருச்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பாரம்பர்ய உணவுத் திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

திருச்சியில் நாளை திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்பர்ய உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை, அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர்.

பாரம்பர்ய உணவுத் திருவிழாவை தொடங்கிவைத்த அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், “திருச்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா நாளை சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் அங்கமாக திருச்சி மாநகராட்சி அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பாரம்பர்ய உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.

நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது கடைபிடித்த உணவுப்பழக்கமே.  உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. ஊட்டச்சத்து மிக்க பாரம்பர்ய உணவுகளைப்  பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து தேகபலத்துடன் வாழ்ந்தனர். ஆனால், நவீன காலத்தில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளையும், பதப்படுத்தியும் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி வகைகளையும் உண்பதால் இவ்வுணவுகளில் சேர்க்கப்பட்டுள்ள அதிக அளவிலான ரசாயன கலவைகள் செயற்கையான இனிப்பு, கொழுப்பு போன்றவற்றால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒரு காலத்தில் அரிசி பயன்படுத்த வசதி இல்லாத ஏழை எளிய மக்களின் உணவாக விளங்கியது இந்த சிறு தானியங்கள்தான். சிறு தானியங்களில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், தாது உப்புகள், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் அடங்கி உள்ளன.

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட சிறுதானியங்களை சமைத்து உண்டு வந்திருந்தால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் நாம் இருந்திருக்கலாம். ஆனால், நாம் இவற்றை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்துவிட்டோம். இனியாவது நாம் இவற்றை உணவாகப் பயன்டுத்த வேண்டும். இக்கருத்துகளை வலியுறுத்தும் வகையில் இவ்விழாவில் சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பர்ய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நமது பாரம்பர்ய உணவு வகைகளைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்” என்றார்,

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் பத்திரிகையாளர்கள், கட் –அவுட் வைப்பது தொடர்பாக உயர்ன் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வழங்கிய உத்தரவுப்படி, உயிரோடு இருக்கும் நபர்களுக்கு கட் –அவுட் வைக்கக் கூடாது என்கிற உத்தரவுக்கிணங்க, திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படுமா என கேட்டதற்கு, `அகற்றப்படும்' என ஒற்றை வார்த்தையால் பதில் கூறிவிட்டுக் கிளம்பினார்.

நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு