Election bannerElection banner
Published:Updated:

கோலாகலமாக முடிவடைந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! பக்தர்கள் மகிழ்ச்சி

கோலாகலமாக முடிவடைந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! பக்தர்கள் மகிழ்ச்சி
கோலாகலமாக முடிவடைந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! பக்தர்கள் மகிழ்ச்சி

கோலாகலமாக முடிவடைந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! பக்தர்கள் மகிழ்ச்சி

ணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்து ஆன்மாவை விடுதலை அடையச் செய்தல். மேலும், ஆணவ மலத்தின் பலத்தைக் கட்டுப்படுத்தி இறைவனின் காலடியில் சரண் புகுவதே 'சூரசம்ஹாரம்'. இது ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாள்கள் அனுசரிக்கப்படுகின்றன. ஐப்பசி சஷ்டி திதியில் நடந்த நிகழ்வாதலால்  'கந்தசஷ்டி' என்றும் அழைக்கப்படுகிறது.

சூரசம்ஹாரம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஆறுமுகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்தான். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவை லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்து, செந்திலாண்டவனின் அருளைப் பெற்றுச் செல்வது வழக்கம்.

வழக்கம் போலவே இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து கடற்கரைத் திடலில் கூடினர். சரியாக மாலை 4.30 மணிக்குக் கோயில் முன்பாக உள்ள கடற்கரையில் ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அவர் கையில் ஏந்தியிருந்த வேல் கொண்டு கஜமுகம், சிங்கமுகம் மற்றும் சூரபத்மனோடும் கடுமையாகப் போரிட்டார்.

இறுதியாக மாமரமாக மாறிய சூரபத்மனை இரண்டு துண்டுகளாகப் பிளந்தார். ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி வேலாகவும் மாறிய சூரபத்மனை ஆட்கொண்டார் செந்திலாண்டவர். பக்தர்களின் அரோகரா கோசம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் அனைவருக்கும் செந்திலாண்டவரின் தரிசனம் கிடைக்க கோலாகலமாக நிறைவுற்றது சூரசம்ஹாரம்.

தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் பற்றிய சிறப்புப் பக்கத்துக்குச் செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். https://www.vikatan.com/news/special/vaikasi-visakam/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு